நீர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Geography: Hydrosphere

   Posted On :  08.09.2023 12:00 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நீர்க்கோளம்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நீர்க்கோளம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

VII. விரிவான விடையளி


1. கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு பற்றிக் குறிப்பு வரைக.

விடை:

கண்டத்திட்டு:

நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் மூழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படுகிறது.

கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கின்றது. இது கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. இதனால் கண்டத்திட்டுகள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களுள் உள்ளன.

(.கா.) ‘கிராண்ட் பாங்க்' (The Grand Bank) - நியூ பவுண்ட்லாந்து.

கண்டச்சரிவு:

கண்ட மேலோட்டிற்கும், கடலடி மேலோட்டிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகின்ற, கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து வன் சரிவுடன் ஆழ்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதியே கண்டச்சரிவாகும்.

வன்சரிவினைக் கொண்டிருப்பதால் படிவுகள் எதுவும் இங்குக் காணப்படுவதில்லை. கடலடிப் பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுகின்றன.

சூரிய ஒளி மிகக் குறைந்த அளவு ஊடுருவுகிறது. வெப்பநிலை மிகக்குறைவாக உள்ளதால் இப்பகுதி கடல்வாழ் உயிரினங்களில் வளர்சிதை மாற்றம் மெதுவாகவே நடைபெறுகிறது.

 

2. கடல் நீரோட்டங்கள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

விடை:

கடல் நீராட்டங்கள்:

பெருங்கடல்களின் மேற்பரப்பிலும், அடி ஆழத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை நீரோட்டம் என்று அழைக்கின்றோம்.

கடல் நீரோட்டங்களின் வகைகள்:

வெப்பத்தின் அடிப்படையில் > வெப்ப நீரோட்டம் > குளிர் நீரோட்டம் என வகைப்படும்.

வெப்ப நீரோட்டம்:

தாழ் அட்சப் பகுதிகளிலிருந்து, உயர் அட்சப் பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள் வெப்ப நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

 (.கா.) வளைகுடா நீரோட்டம் (அட்லாண்டிக் பெருங்கடல்), வட புவியிடைக் கோட்டு நீரோட்டம் (பசிபிக் பெருங்கடல்).

குளிர் நீரோட்டம்:

உயர் அட்சப் பகுதிகளிலிருந்து, தாழ் அட்சப்பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள் குளிர் நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

(.கா) லாப் ரடார் நீரோட்டம் (அட்லாண்டிக் பெருங்கடல்),

பெருவியன் நீரோட்டம் (பசிபிக் பொருங்கடல்).

(தாழ் அட்சம்வெப்ப மண்டம்

உயர் அட்சம்மிதவெப்பமண்டலம், துருவமண்டலம்)

 

3. கடல்வளங்கள் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் யாவை?

விடை:

கடல்வளங்களின் தாக்கம்:

கடல் நீர் மற்றும் கடலில் அடிப்பகுதியில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள் கடல்வளங்கள் எனப்படும்.


சமுகத்தின் நீடித்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடல்வளங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

பலதரப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் உணவு, மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தொழில்துறைகளில் பயன்படுகின்றன

ஆற்றல் கனிமவளம் மற்றும் நீர் ஆகியவற்றின் உலகத்தேவைகள் உயிரற்ற கடல்வளங்களையே சார்ந்துள்ளன.

சுற்றுலா, மீன்பிடி தொழில், மரபுசாரா எரிசக்தி, போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.


மேற்கோள் நூல்கள்

1 .Physical Geography by Savindra Singh Edition: 2015, Pravalika Publications, Allahabad, Irndia.

2. Oceanography by D.S. Lal Revised Edition: 2009, Sharda Pustak Bhawan, Allahabad, India.

3. Oceanography (A Brief Introdudion) by K. Siddhartha Reprinted 2008, Kisalaya Publications Pvt. Ltd., New Delhi, India.

4. The Science of Ocean by A.N.P. Ummer Kutty Reprinted 2012, National Book Trust, New Delhi, India

 

இணையதளம்

1. http://www.britannica.com

 2. http://www.clearias.com

3. http://earth.usc.ed

4. http://www.pinfias.com

5. http://svs.gsfc.nasa. gov

 

இணையச் செயல்பாடு

புவியியல் - நீர்க்கோளம்

புவிக் கோளங்களை எவை எவை என்று நினைவட்டைகளைப் பொருத்தி அறிவோமா!


படி 1: கீழ்க்காணும் உரலி | விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்திச் செயல்பாட்டின் இணையப் பக்கத்திற்குச் செல்க.

படி 2: புவிக்கோஎம் தொடர்பான அட்டைகளைத் திரையில் பார்க்க முடியும்.

 படி 3: சரியான படத்தைப் புவிக்கோள அட்டையுடன் இணைக்க.

உரலி : https://matchthememory.com/Earthspheres

*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

தேவையெனில் Adobe Flash யை அனுமதிக்க.

Tags : Hydrosphere | Geography | Social Science நீர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Hydrosphere : Answer in a paragraph Hydrosphere | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நீர்க்கோளம் : விரிவான விடையளி - நீர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நீர்க்கோளம்