நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Geography : Lithosphere – II Exogenetic Processes

   Posted On :  07.09.2023 11:22 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

VII. விரிவான விடையளி


1. வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக.

விடை:

வானிலைச் சிதைவு:

வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன செயல்பாடுகளையேவானிலைச் சிதைவு' எனப்படும். வகைகள் .

இயற்பியல் சிதைவு:

இரசாயனச் சிதைவு

உயிரினச் சிதைவு

இயற்பியல் சிதைவு:

இயற்பியல் சக்திகளால் பாறைகள் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுதல் இயற்பியல் சிதைவு' ஆகும். பாறை உரிதல், பாறை பிரிந்துடைதல், சிறு துகள்களாக சிதைவுறுதல் இயற்பியல் சிதைவின் வகைகள்.

இரசாயனச் சிதைவு:

பாறைகளில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் உடைந்து சிதைவுறும் நிகழ்வுஇரசாயனச் சிதைவு' எனப்படும். ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர்க்கொள்ளல் ஆடிகியன இரசாயனச் சிதைவின் வகைகள்.

உயிரினச் சிதைவு

தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களால் பாறைகள் சிதைவுறுதல்உயிரினச் சிதைவு' எனப்படும்.

தாவர வேர்கள் பாறைகளின் இடைவெளி வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்தல்,

 

2. நிலத்தடி நீரின் அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி.

விடை:

நிலத்தடி நீர் சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நிலவாட்டம் அமைக்கும் செயல்களினால் பலவித நிலத்தோற்றங்களை ஏற்படுத்தகின்றன.

டெர்ரா ரோஸா:

சுண்ணாம்பு நிலப்பகுதிகளில் சுண்ணாம்பு கரைந்து சிதைவுற்ற பின்னர் எஞ்சிய செம்மண் படிவு உருவாக்கும் நிலத்தோற்றம். (சிகப்புக்கு காரணம் இரும்பு ஆக்சைடு).

பேப்பீஸ்:

கரடு முரடான சுண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் தெளிந்து ஓடும்போது ஏற்படும் நீண்ட அரிப்புக் குடைவுகள்பேப்பீஸ்கள்' ஆகும்.

உறிஞ்சு துளைகள்:

சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்கள்உறிஞ்சு துளைகள்' ஆகும்.

குகைகள் மற்றும் அடிநிலக் குகைகள்:

கரியமில அமிலம் சுண்ணாம்பு பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் 'குகை' எனப்படும்.

அடிநிலக் குகைகள்:

உருவத்திலும் அளவிலும் வேறுபட்டு தரைப்பகுதி சமமற்றுக் காணப்படும் குகைகள்அடிக்கல் குகைகள் எனப்படும்.

 

3. பனியாறு என்றால் என்ன?

விடை:

பனியாறு:

பனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதேபனியாறு' எனப்படும். பனியாறுகள் அவை உற்பத்தியாகும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு கண்டப்பனியாறுபள்ளத்தாக்குப் பனியாறு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டப் பனியாறு:

கண்டங்களில் அடர்ந்த பனிபோல் மூடப்பட்டிருக்கும் பரந்த நிலப்பரப்புகண்டப்பனியாறு' எனப்டும்.

பள்ளத்தாகுப் பனியாறு:

பனி மூடிய மலைத்தொடர்களில் இருந்து உற்பத்தியாகும் பனியாறுபள்ளத்தாக்குப் பனியாறு' எனப்படும்.

 

4. காற்று படியவைத்தல் செயலினை விவரி.

விடை:

காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்த தடைகள் (புதர்கள், காடுகள், பாறைகள்) காற்றின் வேகத்தை தடுப்பதால், காற்றினால் கடத்தப்பட்ட படிவுகள் காற்று வீசும் பக்கத்திலும் அதன் மறுபக்கத்திலும் படியவைக்கப்படுகின்றன.

காற்றின் படியவைத்தலால் எற்படும் நிலத்தோற்றங்கள் . மணல் , குன்று,. பர்கான் , காற்றடி வண்டல் .

மணல் மேடு

பாலைவனங்களில் வீசும் மணல் புயல் மிக மிக அதிகமாக மணலைக் கடத்துகின்றன. புயலின் வேகம் குறையும் போது கடத்தப்பட்ட மணல் அதிக அளவில் படியவைக்கப்படுகின்றன. இவ்வாறு குன்று அல்லது மேடாகக் காட்சியளிக்கும் மணல் படிவுமணல் மேடு' எனப்படும்.

மணல் மேடுகள் . பர்கான் . குறுக்கு மணல்மேடு - நீண்ட மணல் மேடு என பலவகைப்படும்.

காற்றடி வண்டல்:

பரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான, நுண்ணியப்படிவுகளேகாற்றடி வண்டல்' எனப்படும்.

பர்கான்:

பிறை வடிவத்தில் தனித்துக் காணப்படும் மணல் மேடுகள் பர்கான்கள் எனப்படும். (காற்று வீசும் திசை - மென் சரிவு, எதிர்பக்கம் வன் சரிவு).

Tags : Lithosphere – II Exogenetic Processes | Geography | Social Science நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Lithosphere – II Exogenetic Processes : Answer in paragraph Lithosphere – II Exogenetic Processes | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் : விரிவான விடையளி - நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள்