Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் | கணினி அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Computer Science : Chapter 4: Theoretical concepts of Operating System

11வது கணினி அறிவியல் : அலகு 4 : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

குறு வினாக்கள், சிறு வினாக்கள், நெடு வினாக்கள், முக்கியமான கேள்விகள் - கணினி அறிவியல் : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

கணினிகளின் அடிப்படைகள்

இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

மதிப்பாய்வு

பகுதி


குறு வினாக்கள்


1. நினைவக மேலாண்மையின் நன்மைகள் யாவை?

விடை:

(i) நினைவகத்தின் எந்த பகுதியைத் தற்போது யார் பயன்படுத்துகிறார்கள் என்று தொடர்ந்து கண்காணித்தல்.

(ii) நினைவகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நகரும் செயல்முறைகள் மற்றும் தரவுகளைத் தீர்மானித்தல்.

(iii) முதன்மை நினைவகத்தில், நிரல்களுக்கு தேவையான நினைவகத் தொகுதிகளை ஒதுக்கிடுதல் மற்றும் நீக்கம் செய்தல். (பயனற்ற தரவுகளின் தொகுப்பு)

 

2. பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?

விடை:

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள், ஒரே மாதிரியான தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்புபல பயனர் இயக்க அமைப்புஎன்று பெயர்.

 

3. GUI என்றால் என்ன?

விடை:

"வரைகலை பயனர் இடைமுகம்” (GUI) சன்னல் திரை அடிப்படையிலான, நேரடியாக உள்ளீட்டு/வெளியீடுகளை கையாள்வதற்கும், பட்டிகளிலிருந்து தேர்வு செய்வதற்கும், தேர்ந்தெடுப்பதற்கு தேவையான சுட்டும் கருவிகளைக் (Pointing devices) கொண்டது.

 

4. லினக்ஸ் இயக்க அமைப்பின் பல்வேறு பகிர்மானங்களை பட்டியலிடு?

விடை:

(i) லினக்ஸ் மின்ட்

(ii) பெடோரா 

(iii) உபுண்டு

(iv) பாஸ் 

(v) ரெட்ஹாட்.

 

5. பாதுகாப்பு மேலாண்மையின் நன்மைகள் யாவை?

விடை: இயக்க அமைப்பு பயனருக்கு மூன்று நிலை பாதுகாப்பை வழங்குகிறது.

(i) கோப்பு நிலை 

(ii) அமைப்பு நிலை 

(iii) வலை நிலை

 

6. பல் பணியாக்கம் என்றால் என்ன?

விடை: இது இயக்க அமைப்பு அம்சங்களின் ஒன்றாகும். பல செயலாக்க செயல்முறை (வேலை) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகளைக் கொண்டுள்ளது. செயலாக்கம் இணையாக செயல்படுவதால் இது இணையாக்க செயலி ஆகும்.

 

7. கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை?

விடை:

(i) யுனிக்ஸ்

(ii) மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 

(iii) லினக்ஸ்

(iv) iOS

(v) அண்ட்ராய்டு.

 

பகுதி -

சிறு வினாக்கள்


1. நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?


நேரம் பகிர்தல் இயக்க அமைப்பு

நன்மைகள்

விரைவான செயல்கள்.

மென்பொருளின் பிரதிகளைத் தவிர்க்கிறது.

CPUன் செயலற்ற நேரத்தை குறைக்கிறது.

தீமைகள்

நம்பகத்தன்மை இன்மை.

பயன்பாடுகள் மற்றும் தரவுகளின் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைக்கிறது.

தரவு தொடர்பு பிரச்சனை.

 

2. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

விடை:

கைபேசிகள், டேப்ளட்கள் மற்றும் எம்பி3 பிளேயர்கள் போன்ற மொபைல் சாதனங்கள் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கணினிகளில் இருந்து வேறுபட்டவை. எனவே அவற்றிக்கு சிறப்பு இயக்க அமைப்புகள் தேவைப்படுகின்றன. மொபைல் இயக்க முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள் ஆப்பிள் iOS மற்றும் கூகிள் ஆண்ட்ராய்டு.

 

3. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை?


லினக்ஸ்

லினக்ஸ் ஓர் திறந்த-மூல மைக்ரோ இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும்.

இது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் மாற்றப்பட்டு விநியோகிக்கப்படலாம்

இதில் பல பதிப்புகள் மற்றும் புதுப்பிப்புகளும் உள்ளன. பெரும்பாலான சேவையகம் லினக்ஸில் இயங்குகின்றன. ஏனெனில் இவற்றில் தனிப்பயனாக்கம் செய்வது எளிது.

விண்டோஸ்

விண்டோஸ் மைக்ரோ சாப்ட் கார்ப்பரேஷன் வடிவமைக்கப்பட்ட தனியுரிம இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும்.

இது முதன்மையாக இன்டெல் மற்றும் AMD கட்டமைப்பு அடிப்படையிலான கணிகளை வடிவமைக்கப்பட்டது.

விண்டோஸ் இயக்க அமைப்பின் ஒரு மாற்று திறந்த மூல அமைப்பாக ரியாக்ட் OS விளங்குகின்றது. இது விண்டோஸ் கொள்கையின் அடிப்படையில் (customize) உருவாக்கப்பட்டது.

 

5. இயக்க அமைப்பின் செயலி மேலாண்மையின் நெறிமுறைகளை விளக்குக.

விடை:

(i) முதலில் வந்தது முதலில் செல்லும் (FIFO): முதலில் வந்தது முதலில் செல்லும் நெறிமுறை என்பது வரிசை நுட்பத்தை (Queuing Technique) அடிப்படையாகக் கொண்டது. ஒரு சேவையைப் பெற நாம் வரிசையில் நிற்கிறோம். முதலில் வந்தவர் முதலில் சேவையைப் பெறுகிறார். மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் வழங்குவதற்காக மாணவர்கள் வரிசையில் நிற்பது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

(ii) சிறியது முதலில் (Shortest Job First) : இந்த நெறிமுறை, மையச் செயலகத்தால் இயக்கப்படும் ஒரு வேலையின் அளவை அடிப்படையாகக் கொண்டது. A மற்றும் B என இரண்டு வேலைகளை எடுத்துக்கொள்வோம். இந்தந்த இரண்டு வேலைகளில், A வேலையின் அளவு, B வேலையை விட குறைவாக இருப்பதால், முதலில் A வேலை இயக்கப்படும்.

(iii) வட்ட வரிசை (Round Robin) : வட்ட வரிசை திட்டமிடல் நேரப் பகிர்வு அமைப்பு-களுக்கு (Time Sharing System) சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நெறிமுறை ஆகும். சுழற்சி முறையில், ஒவ்வொரு பணிக்கும், ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். எடுத்துக்காட்டாக, A, B, C என மூன்று வேலைகள் இருப்பதாக எடுத்துக்கொள்வோம்.

(iv) முன்னுரிமைக்கு ஏற்ப (Based on Priority): கொடுக்கப்பட்ட வேலை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற வேலைகளை விட அதிக முன்னுரிமை கொண்டிருக்கும் வேலை மிகவும் முக்கியமானது.

 

பகுதி -

நெடு வினாக்கள்


1. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

விடை: பரவல் இயக்க அமைப்பானது உலகெங்கிலும் உள்ள எந்த கணினியிலும் பகிரப்பட்ட தரவுகள் மற்றும் வசிக்கும் கோப்புகளையும் அணுகுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. பயனர் வெவ்வேறு இடங்களில் இருந்து தரவை கையாள முடியும். பயனர்கள் தங்கள் சொந்த கணினியில் கோப்புகளை கையாளுவது போல் உணருவர்.

பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள் பின்வருமாறு:

(i) ஒரே இடத்தில் உள்ள ஒரு பயனர், வலையமைப்பின் மூலம் மற்றொரு இடத்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.

(ii) பல கணினி வளங்களை வலையமைப்பில் எளிதாக இணைக்க முடியும்.

(iii) வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது.

(iv) புரவலன்/புரவலர் (Host) கணினியில் உள்ள சுமையை குறைக்கிறது.

 

2. ஒரு இயக்க அமைப்பின் முக்கிய நோக்கங்களை விளக்குக.

விடை:

(i) ஒரு பயன்பாட்டை உருவாக்க, பயனருக்கு இயக்க அமைப்பைப் பற்றிய அறிவு அவசியமாகிறது, ஆனால் வன்பொருளின் உள் கட்டமைப்பைப் பற்றி அறிந்திருக்க வேண்டியதில்லை. இயக்க அமைப்பு அனைத்து மென்பொருள் மற்றும் வன்பொருள்களை நிர்வகிக்க உதவுகிறது. கணிப்பொறியில் உள்ள மைய செயலகம், நினைவகம் மற்றும் சேமிப்பகத்தை இயக்க,

(ii) பெரும்பாலான நேரங்களில் பல நிரல்கள் ஒரே சமயத்தில் இயங்கவேண்டியது அவசியமாகின்றது. பயனருக்கும் வன்பொருளுக்குமிடையே இடைமுகமாக செயல்படுவது இயக்க அமைப்பின் அடிப்படைத் தேவையாகும்.

(iii) இயக்க அமைப்பு ஒரு மொழிபெயர்ப்பியாக செயல்பட்டு, பயனர் எழுதும் நிரலை கணிப்பொறி புரிந்துகொள்ளும் இயந்திர மொழியாக (இருநிலை எண்கள்) மாற்றி செயலாக்கம் செய்து, இயக்க அமைப்பிற்கு மீண்டும் திருப்பி அனுப்புகிறது. இயக்க அமைப்பு, செயலாக்கம் செய்த தகவல்களைப் பயனர் படிக்கக்கூடிய வடிவில் மாற்றியமைக்கிறது.

 

3. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை விளக்குக.

நன்மைகள் :

(i) பொது மக்களுக்கு விலையில்லாமல், இணையத்தின் வழியே கிடைக்கும்.

(ii) ஒரு திறந்த மூல நிரல் பொதுவாக பலராலும் தொடர்ந்து மாற்றப்பட்டு, மேலும் மாற்றப்பட்ட மூல நிரல் அனைத்து பயனரும் பயன்படுத்த வசதியாக வலைதள சமூகத்தில் கிடைக்கும்.

தீமைகள் :

(i) திறந்த மூல மென்பொருளானது வணிகரீதியான பாதிப்புகள் அளவு பயனர் நட்பாக இருக்காது. ஏனென்றால் பயனர் இடைமுகத்தை வளர்ப்பதற்கு குறைவான கவனம் செலுத்தப்படுகிறது.

(ii) தீங்கிழைக்கும் பயனர்களால் பாதிப்பு ஏற்படும்.

 

Tags : Theoretical concepts of Operating System | Computer Science இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 4: Theoretical concepts of Operating System : Answer the following questions Theoretical concepts of Operating System | Computer Science in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 4 : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 4 : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்