பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் | கணினி அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Computer Science : Chapter 5 : Working with typical operating systems
கணினியின் அடிப்படைகள்
பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் (விண்டோஸ் & லினக்ஸ்)
மதிப்பாய்வு
பகுதி – ஆ
குறு வினாக்கள்
1. Cut மற்றும்
Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
விடை:
• நமது கோப்பை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துகிறது.
• நமது கோப்பு ஒரு இடத்தில் மட்டுமே இருக்கும்.
• நமது கோப்பை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகலெடுத்து அனுப்புகிறது.
• நமது கோப்பு இரண்டு இடங்களிலுமே இருக்கும்.
2. கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?
விடை: கோப்பு விரிவாக்கத்தின்
மூலம் அந்தக் கோப்பு எந்த பயன்பாட்டு நிரையால் உருவாக்கப்பட்டது. அந்த கோப்பில் எந்த மாதிரியான
பயன்பாடு உள்ளன. எனவும் தெரிந்து கொள்ள உதவுகிறது.
3. கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள
வித்தியாசங்கள் யாவை?
கோப்பு என்பது அனைத்துவிதமான தகவல்களையும் சேமித்து வைக்கும்இடம் ஆகும்.
அனைத்து கோப்புகளையும் சேமித்து வைப்பது கோப்புரையாகும்.
4. Save மற்றும்
Save-as-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
விடை: Save ஆனது ஒரு கோப்பிற்கு பெயர் கொடுத்து அதனை ஒரு இடத்தில் Save பண்ண உதவி செய்கிறது. Save as என்பது அந்த கோப்பை
வேறு ஏதாவது இடத்தில் நகல் எடுத்து வேறு பெயரிலோ அல்லது அதே பெயரிலோ Save பண்ண உதவி செய்கிறது.
5. திறந்த மூல
(Open Source) மென்பொருள் என்றால் என்ன?
விடை: பொது மக்களுக்கு விலையில்லாமல், இணையத்தின் வழியே கிடைக்கும் ஒரு
மென்பொருளின் மூல நிரல்களுக்கு "திறந்த மூலம்" (Open
Source) என்று பெயர்.
6. திறந்த மூல
(Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை?
விடை: ஒரு திறந்த மூல நிரல்
பொதுவாக பலராலும் தொடர்ந்து மாற்றப்பட்டு, மேலும் மாற்றப்பட்ட மூல நிரல்
அனைத்து பயனரும் பயன்படுத்த வசதியாக வலைதள சமூகத்தில் கிடைக்கும்.
7. லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு
சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.
விடை:
லினக்ஸ் (Linux)-ன் மிகப் பிரபலமான
சேவையக பகிர்மானங்கள்:
(i) உபுண்டு லினக்ஸ் (Ubuntu Linux)
(ii) லினக்ஸ் மின்ட் (Linux
mint)
(iii) ஆர்க் லினக்ஸ் (Arc
Linux)
(iv) டீப்பன் (Deepin)
(v) பெடோரா (Fedora)
(vi) டெபியான் (Debian)
(vii) ஸென்ட் OS (Cent OS)
8. Ubuntu OS -ல் இருந்து
எவ்வாறு வெளியேறுவாய்?
விடை:
கணிப்பொறியில் நம்முடைய பணி முடிந்தவுடன் மேல் குழுவின்
வலது ஓரத்தில் உள்ள அமர்வு குறிப்பானில் உள்ள வெளியேறுதல் (Logout) இடைநிறுத்தம் (Suspend) அல்லது மூடுதல் (Shut Down) போன்ற ஏதேனும் ஒன்றைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்.
பகுதி - இ
சிறு வினாக்கள்
1. இயக்கிகள்
(drives) ஏன் பிரிக்கப்பட்டுள்ளன என பகுப்பாய்வு செய்க.
விடை:
(i) கணினிகளில் இயக்கிகள் பொதுவாக அடையாளங்களுக்கான எண்களுடன் வழங்கப்படுகின்றன.
(ii) உற்பத்தியாளர்கள் முந்தைய கணினி அமைப்புகளில் மிகவும் எளிதானது எது என்பதை உறுதிப்படுத்த விரும்பினர்.
(iii) அதனால் அவர்கள் ஒன்று அல்லது இரண்டு இயக்கிகள் நிறுவினர். அவை பொதுவாக டிரைவ் A அல்லது B என அடையாளம் காணப்பட்டுள்ளன.
(iv) முன்னதாக கணினிகள் வெளிப்புற சேமிப்பு சாதனங்கள் அல்லது 'வன்வட்டுகளுக்கான விதிகளையும் கொண்டிருக்கவில்லை. எனவே தரவை சேமிக்க டிரைவ் A அல்லது B பயன்படுத்தப்பட்டது. எனவே தரவினை எளிதாக சேமித்து வைக்கப்பட்டது.
(v) மற்ற பயனர்களிடமிருந்து
தரவுகளை முறைப்படுத்தவும் தனிமைப்படுத்தவும் இயக்கிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
2. ஒரே நேரத்தில் பல கோப்புகளில் நீங்கள்
வேலை செய்யும் போது, சில
நேரங்களில் கணினி செயலிழக்கக்கூடும். இதற்கு
காரணம் என்ன? அதை எவ்வாறு
சரி செய்வாய்.
விடை:
(i) நீங்கள் ஒரே நேரத்தில் பல நிரல்களை இயக்குகிறீர்கள் என்றால்,
அவற்றை முறையாக இயக்க அதிக சேமிப்பிடம் பயன்பாட்டில் இருக்கும்.
(ii) உங்களிடம் போதுமான ரேம் நினைவகம் இல்லையென்றால், உங்கள் கணினி அந்த நேரத்தில் செயலிழக்கும்.
(iii) இங்கே செயலியும் நடைபெறுகிறது. ஏனெனில், அனைத்து தருக்க மற்றும் கணக்கீடுகளும் இதன் மூலம் செய்யப்படும்.
(iv) உங்கள் செயலி எவ்வளவு விரைவாக கணக்கீடு செய்ய முடியும் என்பது உங்கள் கணினியின் ரேமை பொறுத்தது.
(v) இப்போதெல்லாம்
நவீன OSகள் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை உங்கள் குறைக்கப்பட்ட படைப்புகளை
அவற்றின் இரண்டாம் நிலை சேமிப்பகத்தில் சேமிக்கின்றன.
(vi) இது ரேமைவிட மெதுவானது. ஆனால் ரேடனின் வழிதல் முறையை மார்டென் OSகள் கையாளுகின்றன.
(vii) முறையான இடைவெளியில் கணினி துவக்கப்படுவதன் மூலம் இந்த சிக்கல்களை சரிசெய்ய முடியும்.
(viii) மேலும், வைரஸ் தடுப்பு சமீபத்திய எதிர்ப்புகளை நாம் சேர்க்க வேண்டும்.
3. Cortana-வின் குறிப்பிட்ட பயன்பாடு
எழுதுக.
விடை:
(i) நேரம், இடங்கள் அல்லது மக்கள் அடிப்படையில் நினைவூட்டல்களைக் கொடுக்கிறது.
(ii) டிராக் தொகுப்புகள், ஆர்வங்கள் மற்றும் விமானங்கள்.
(iii) மின்னஞ்சல்களையும் நூல்களையும் அனுப்ப, தேவையான கோப்புகள் இடம் மற்றும்
தகவல்களை காண உதவுகிறது.
(iv) உங்கள் கணினியில் தேவையான செய்திகளை பெற பயன்படுகிறது.
4. Windows மற்றும்
Ubunto-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
விடை:
(i) திறந்த மூலம்
(ii) வலைதள உதவிகள்
(iii) CUI-ல் வேலை செய்யும்
(iv) அனைத்து விதத்திலும் வளைந்து
கொடுக்கும்.
(i) மூடிய மூலம் (லைசன்ஸ்டு Restriction)
(ii) விலையுடன் கூடிய உதவிகள்
(iii) CUI-ல் வேலை செய்யாது
(iv) எந்த விதமான வளைதலுக்கும் உடன்படாது.
5. Thunderbird மற்றும்
FireFox-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
விடை: FireFox என்பது இணையத்தில் உலவலாம். நமக்கு தேவையானவற்றை இதன் உதவி
கொண்டு பார்க்கலாம், பெறலாம். தண்டர்பேர்டு என்பது மின்அஞ்சல் பயன்பாட்டிற்கான எக்ஸேஞ், ஜிமையில், ஹாட்மெயில் போன்றவற்றை இயக்கும்
வசதி உள்ளது.
6. Ubunto OS-ல்
Save மற்றும் Save
As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
விடை:
Save - இது நமது உரையை எந்தவிதமான இடம்
மற்றும் புதிய பெயர் ஏதும் கேட்காமல் Save செய்யும். இந்த கோப்பு ஏற்கனவே. இருந்தால் அதன் மேல் திருத்தி எழுப்படும்.
Save as - நமது கோப்பையை உரையாடல் பெட்டி
மூலமாக Save பண்ணலாம். இந்த கட்டளையானது கோப்பின் பெயர் மற்றும் இடத்தினை மாற்றியமைக்க உதவுகிறது.
பகுதி - ஈ
நெடு வினாக்கள் :
1. விண்டோஸ் இயக்க அமைப்பின் பல வகையான
பதிப்புகளை விவரி.
2. விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகியவற்றில்
உள்ள குறும்படங்களை ஒப்பிட்டு விளக்கவும்.
விடை:
3. விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை
உருவாக்குதல், மாற்று
பெயரிடுதல், நீக்குதல்
மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.
(i) கோப்பை உருவாக்க: திரைமுகப்பில் வலது பொத்தானைக்
கிளிக்செய்து உருவாக்கலாம். அல்லது File பணிக்குறியைப் பயன்படுத்தி கோப்பை உருவாக்கலாம்.
(ii) கோப்பை நீக்க: நாம் உருவாக்கிய கோப்பு/கோப்புரை வலது கிளிக் செய்து அல்லது
பட்டிப்பட்டை பயன்படுத்தி நீக்கலாம்.
(iii) கோப்பிற்கு மறுபெயரிடுதல்: நாம் உருவாக்கிய கோப்பை வலது கிளிக் செய்து Rename தேர்வு செய்து மறு பெயரிடலாம்.
(iv) சேமிப்பதற்கான வழி: கிளிக் Ctrl x or F2 பொத்தானை கிளிக் செய்து வெளியேற அதற்கு ஏதேனும் சேமிக்காத கோப்பு இருப்பின் சேமிக்க கேட்கும் Click OK. கோப்பானது சேமித்துவிடும்.
(i) கோப்பை உருவாக்க: பயன்பாட்டிற்கான பணிக்குறியை திறந்து
கோப்பை file பட்டி பயன்படுத்தி உருவாக்கலாம்.
கோப்பை நீக்க : நாம் உருவாக்கிய கோப்பையை வலது கிளிக் செய்து Delete தேர்ந்தெடுத்து நீக்கலாம்.
கோப்பிற்கு மறுபெயரிடுதல் : File பட்டி, அல்லது இடது சுட்டி பொத்தான் அல்லது வலது சுட்டி பொத்தான் பயன்படுத்தி மறு பெயரிடலாம்.
சேமிப்பதற்கான வழி : Ctrl + S, file
-> Save சேமிப்பதற்கான வழி.