பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் | கணினி அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Computer Science : Chapter 7 : Composition and Decomposition
கணினி அறிவியல்: நெறிமுறைசார் சிக்கல் தீர்வு
பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
பகுதி - ஆ
குறு வினாக்கள்
1. ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று
- வேறுபடுத்துக.
விடை:
நிபந்தனை : ஒரு நிலையை சோதிப்பதற்கான ஒரு சொற்றொடர் நிபந்தனை ஆகும்.
கூற்று : கணிப்பொறி ஒரு பணியை செய்வதற்காக கொடுக்கப்படும் கட்டளைகள் அடங்கிய
ஒரு சொற்றொடர் "கூற்று" எனப்படும்.
2. நிபந்தனைக்
கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக.
விடை:
3. நிபந்தனைக்
கூற்று மற்றும் சுழற்சிக் கூற்று இரண்டுமே, ஒரு
நிபந்தனை மற்றும் செயல்படு கூற்றை பெற்றிருக்கிறது எனில்,
அவை எவ்வாறு வேறுபடுகிறது?
விடை:
நிபந்தனை கூற்று : நிபந்தனை மதிப்பு மெய் எண் இருக்கும் நிலையில் மட்டுமே சில கூற்றுகளை
செயலாக்கம் செய்ய முடியும். நிபந்தனையின் மதிப்பு பொய் என இருக்கும்போது, எந்த கூற்றும் இருக்காது.
சுழற்சி கூற்று : நிபந்தனையின் மதிப்பு சோதிக்கப்பட்டு, அதன் மதிப்பு பொய் என வரும் வரை
தொடர்ந்து மீண்டும் மீண்டும் இயக்கும்.
4. ஒரு நெறிமுறைக்கும்,
நிரலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
விடை:
நெறிமுறை : நெறிமுறை என்பது ஒருங்கிணைக்கப்பட்ட கூற்றுகள் சிக்கலைத் தீர்க்க பயன்படுகின்றன.
நிரல் : நிரலாக்க மொழியை கணிப்பொறியில் செயலாக்கம் செய்து சிக்கலை தீர்க்க பயன்படுகின்றன. நிரலாக்க மொழியில் குறிப்பிடும்
நெறிமுறை நிரல் எனப்படும்.
5. செயற்கூறு அருவமாக்கம் என்றால்
என்ன?
விடை:
நெறிமுறை சார் சிக்கல், பல சிறிய சிக்கல்களாக பிரிக்கப்பட்டு, அவை அருவமாக்கப்படுவது, செயற்கூறுகள் ஆகும். ஒரு செயற்கூறு ஒரு துணை நெறிமுறை ஆகும். ஒரு முழுமையான நெறிமுறையைப் போன்று, செயற்கூறும் உள்ளீடு மற்றும் வெளியீடு
பெற்றுள்ளது.
6. ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?
விடை:
ஒரு பெரிய சிக்கல், பல சிறிய சிக்கல்களாக பிரிக்கப்பட்ட
பின்னர், ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளும் மேலும் மெருகேற்றப்படும்.
பகுதி - இ
சிறு வினாக்கள்
1. கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பாய்வு
படங்களுக்கும், போலிக்
குறிமுறை எழுதுக.
விடை:
1. Enter A, B
2. Initialize Q = 0, r = A
3. If r ≥ B, then do Q = Q + 1; r = r - B else r, q
4. Exit.
2. கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறை வரிசை
எண் 2ல்,
C பொய் எனில், அதன்
கட்டுப்பாட்டு பாய்வை காண்க.
1 S1
2 -- C is false
3 if C
4 S2
5 else
6 S3
7 S4
விடை: S1; S2; S4.
3. Case பகுப்பாய்வு என்றால் என்ன?
விடை:
தேர்ந்தெடுப்பு கூற்று, இரண்டு நிபந்தனைகளை மட்டுமே சோதிக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட நிபந்தனைகளை
சோதித்து, அதனடிப்படையில் செயலாக்கம் செய்ய Case பகுப்பாய்வு பயன்படுகிறது. Case பகுப்பாய்வு ஒரு சிக்கலை
சிறு பகுதிகளாக பிரிக்கின்றது. ஒவ்வொரு பகுதியும் தனியே தீர்க்கப்படும்.
4. தேர்ந்தெடுப்புக் கூற்றுகளைப் பயன்படுத்தி,
மூன்று Case பகுப்பாய்வுக்கு,
பாய்வுப் படம் ஒன்றை வரைக.
விடை:
5. ஒரு எண்ணை,
கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வேறுபட்ட வழிகளில்,
இரட்டிப்பாக்கும் செயற்கூறு ஒன்றை வரையறு.
(1) n + n, (2) 2 x n.
விடை:
(i) double (n)
-- உள்ளீடு : n என்பது ரியல் எண் அல்லது முழு
எண், n > 0
-- வெளியீடு : y என்பது ரியல் எண் அல்லது முழு
எண், y = n + n
(ii) double (n)
-- உள்ளீடு : n என்பது ரியல் எண் அல்லது முழு
எண், n > 0
-- வெளியீடு : y என்பது ரியல் எண் அல்லது முழு
எண், y = 2 × n.
பகுதி - ஈ
நெடு வினாக்கள்
1. A மற்றும்
B எனக் குறிக்கப்பட்டுள்ள இரண்டு கண்ணாடிக் குவளைகள் உள்ளது.
அதில், A என்று
குறிக்கப்பட்ட குவளை முழுவதும் ஆப்பிள் பாணமும், B என்று
குறிக்கப்பட்ட குவளை முழுவதும் திராட்சை பாணமும் வைக்கப்பட்டுள்ளது.
இப்போது A மற்றும்
B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து,
மற்றொன்றுக்கு மாற்றும் விவரக்குறிப்பு ஒன்றை எழுதுக.
மற்றும் விவரக்குறிப்பில் ஏற்றுக்கொள்ளும் வகையில்,
தொடர் மதிப்பிருத்து கூற்றுகளையும் எழுதுக.
விடை:
Exchange (A, B)
-- உள்ளீடு : A, B இவை இரண்டும் முழு
எண்கள் அல்லது ரியல் எண்கள். A ≠ 0, B ≠ 0
-- வெளியீடு : t என்பது முழு எண்கள் மற்றவை
t:=A; A:=B; B:=t.
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள
A, B மற்றும் C மாறிகளின் மதிப்புகளை ஒன்றிலிருந்து,
மற்றொன்றுக்கு சுழற்சியாக மாற்றும் விவரக்குறிப்பு
மற்றும் நெறிமுறையை கட்டமைக்கவும். அம்புக்குறியிடப்பட்டுள்ளபடி,
B மாறிக்கான மதிப்பு
A மாறியிலிருந்தும், C மாறிக்கான
மதிப்பு B மாறிலிருந்தும்,
A மாறிக்கான மதிப்பு
C மாறியிருந்தும் பெறப்படும்.
விடை:
Circulate (A, B, C)
-- உள்ளீடு : A,B, C இவை மூன்றும் முழு
எண்கள்
அல்லது ரியல் எண்கள், A ≠ 0, B ≠ 0, C ≠ 0
-- வெளியீடு : t1:= B; t2:=C மற்றவை
B:=A; C:=t1; A:=t2;
3. முறையே
5, 8 மற்றும் 3 லிட்டர்
கொள்ளளவு கொண்ட மூன்று கண்ணாடி குடுவைகளை தரப்படுகிறது.
அதில், 8 லிட்டர்
குடுவையில் எண்ணைய் நிரம்பியுள்ளது. மற்ற
இரண்டு குடுவைகளும் காலியாக உள்ளன. 8 லிட்டர்
குடுவையிலுள்ள எண்ணையை இரண்டு சம அளவாக பிரிக்கவும்.
பொருத்தமான மாறிகளில்,
இந்த செயல் நிலையை குறிப்பிடுக.
இந்த செயல்நிலையின் தொடக்க மற்றும் இறுதி நிலை என்ன?
மதிப்பிருத்தல் மூலமாக,
ஒரு குடுவையிலிருந்து,
மற்றொரு குடுவைக்கு மாற்றம் செய்யும் மாதிரியை உருவாக்கு.
இறுதிநிலையை பெறுவதற்கான தொடர் மதிப்பிருத்து கூற்றுகளை
எழுதுக.
விடை:
1. A := 8, B:=0, C:=0
2. E, F, T:=A, B, C
3. F: = E−3
4. T:=F−3
5. E: = E + T
6. T: = F
F: = F−2
7. F: = E−1
8. F : = F −1
T: = T+ 1
9. E : = E + T
T : = T – 3
=========
E F T
1. 8, 0, 0
2. 3, 5, 0
3. 3, 2, 3
4.
3+3
E F T
6 2 0
1, 5, 2
1, 4, 3
4, 4, 0
4. factorial(4). என்ற செயற்கூற்றின்
நெறிமுறையின் படிப்படியான இயக்கத்தை கணிக்கவும்.
factorial(n)
--inputs : n is an integer , n ≥ 0
--outputs : f = n!
f, i := 1 ,1
while i ≤ n
f, i := f × i, i+1
விடை : factorial (4)
factorial (4)
i= l,f=1;
= f= l × 1
= f = 1 × 2
= f = 2 × 3
= f = 6 × 4
= f = 24