கணினி அறிவியல் - ஒருங்கிணைப்பு | 11th Computer Science : Chapter 7 : Composition and Decomposition

   Posted On :  24.09.2022 07:14 pm

11வது கணினி அறிவியல் : அலகு 7 : பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்

ஒருங்கிணைப்பு

கணிப்பொறி ஒரு பணியை செய்வதற்காக கொடுக்கப்படும் கட்டளைகள் அடங்கிய ஒரு சொற்றொடர் "கூற்று” (Statements) எனப்படும்.

ஒருங்கிணைப்பு (Composition)


கணிப்பொறி ஒரு பணியை செய்வதற்காக கொடுக்கப்படும் கட்டளைகள் அடங்கிய ஒரு சொற்றொடர் "கூற்று” (Statements) எனப்படும். நாம் ஏற்கனவே மதிப்பிருத்துக் கூற்றைப் பற்றி பார்த்துள்ளோம். இது மாறிகளில் உள்ள மதிப்புகளை மாற்றுவதற்கு பயன்படும் ஒரு எளிய கூற்று ஆகும். நெறிமுறைகளின் படிநிலை அமைப்புக்கு ஏற்ப, ஒரு கூற்று, பல கூற்றுகளைக் கொண்டு அமைக்கப்படலாம். அவ்வாறு, அமைக்கப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட கூற்றுகளை "கூட்டு கூற்றுகள்" (Compound Statements) அழைக்கிறோம்.


கட்டுப்பாட்டு பாய்வு கூற்றுகள், கூட்டு கூற்றுகளாகும். இவை கட்டுப்பாட்டு பாய்வின் போக்கை, செயலாக்கத்தின் நிலைக்கு ஏற்ப மாற்றுகிறது. மூன்று முக்கிய கட்டுப்பாட்டு பாய்வு கூற்றுகள் உள்ளது. அவை, 


தொடர் கூற்றுகள் (Sequential)


தேர்ந்தெடுப்பு கூற்றுகள் (Alternative) 


சுழற்சிக் கூற்றுகள் (Iterative)


ஒரு கட்டுப்பாட்டு பாய்வு கூற்று இயங்கும் போது, செயலாக்கத்தின் நிலையானது ஆய்வு செய்யப்பட்டு, அந்த நிலையின் மதிப்புக்கு ஏற்ப, அடுத்து செயலாக்கம் செய்யப்பட வேண்டிய கூற்று தேர்ந்தெடுக்கப்படுகிறது. 


1. தொடர் கூற்றுகள்


தொடர் கூற்று என்பது, தொடர்ச்சியான ஒன்றுக்கும் மேற்பட்ட கூற்றுகள் ஒன்றிணைந்த அமைப்பாகும். நெறிமுறையில் அவை எந்த வரிசையில் எழுதப்பட்டதோ, அதே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக இயங்குவதால், அவை தொடர் கூற்றுகள் என்று அழைக்கப்படுகின்றது. அதன் கட்டுப்பாட்டு பாய்வு தொடர்ச்சியான ஒன்றாகும். S1 மற்றும் S2 என்ற இரண்டு கூற்றுகள் உள்ளதாக கொள்வோம். இந்த இரண்டு கூற்றுகளை தொடர் கூற்றாக அமைக்க, 

o     S1

 

o     S2

 

என எழுதவேண்டும். இந்த தொடர் கூற்றில், S1 முதலிலும், S2 இரண்டாவதாகவும் இயங்கும். படம் 7.2ல் இந்த இரண்டு கூற்றுகளின் பாய்வை காட்டும் பாய்வுப் படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், S1 லிருந்து S2க்கு செல்லும் அம்புக்குறி, முதலில் S1 இயங்கி, அதன் பின் S2 இயங்கும் என்பதை காட்டுகிறது.


ஒரு சிக்கலை தீர்ப்பதற்கு, P என்ற உள்ளீட்டை S என்ற கூற்று தீர்த்து, Q என்ற வெளியீடாக தருவதற்கான, நெறிமுறை பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

-- P

 

S

 

-- Q


ஒரு சிக்கல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டால், முதலில் சிக்கல் தீர்வு கூற்றான S என்பது, S1 மற்றும்  S2 என்ற இரண்டு தீர்வுக் கூற்றுகளாக பிரிக்கப்பட  வேண்டும். S1 கூற்று, P என்பதை உள்ளீடகப் பெற்று, R என்பதை வெளியீடாக தரும், இதுவே முதல் சிக்கலின் தீர்வு ஆகும். இந்த முதல் சிக்கலின் தீர்வு, இரண்டாவது சிக்கலின் தீர்வுக் கூற்றான S2க்கு உள்ளீடாக செயல்பட்டு, இறுதி முடிவு Q கிடைக்கும். இதற்கான எளிய நெறிமுறை பின்வருமாறு. 


-- P



S1



-- R



S2



-- Q


எடுத்துக்காட்டு 7.1: எடுத்துக்காட்டு  6.1.2 ல்  கொடுக்கப்பட்ட விவசாயி, ஆடு,  புல்லுக்கட்டு மற்றும் ஓநாய் சிக்கலை தீர்க்கலாம். 

விவசாயி, ஆடு, புல்லுக்கட்டு மற்றும்  ஓநாய்  நான்கின் நிலையை, நான்கு மாறிகளாகவும், அவைகள் இருக்கும் ஆற்றின்  பக்கங்களை அந்த நான்கு மாறிகளுக்கான மதிப்புகளாக குறிப்பிடலாம். தொடக்க நிலையில், அனைத்து நான்கு மாறிகளின் மதிப்பும் L (இடது பக்கம்) என்க. இறுதி நிலையில், இந்த நான்கு மாறிகளின் மதிப்பும் R (வலது பக்கம்) என மாற வேண்டும். இந்த செயல்முறையை (அதாவது, தொடக்க நிலையிருந்து, இறுதி நிலைக்கு மாறுதல்) செய்வதற்கு, S என்ற கூற்றை கட்டமைப்பது இதன் நோக்கமாகும்.

1.  -- farmer, goat, grass, wolf = L, L,  L, L

 

2. S

 

3. -- farmer , goat , grass , wolf = R, R, R, R


தொடர் மதிப்பிருத்து கூற்றுகளை, S என கட்டமைக்கலாம். அவ்வாறு கட்டமைக்கும் போது, சிக்கலை தீர்ப்பதற்கான சில அடிப்படை  விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிக்கலை தீர்க்க, கீழ்காணும் விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

1. ஆடு மற்றும் ஓநாய் ஆகியவை ஒரே நிலை மதிப்பை பெறக்கூடாது

(அல்லது) 


2. ஆடு மற்றும் புல்லுக்கட்டு ஆகியவை ஒரே  நிலை மதிப்பை பெறும்போது, விவசாயி  அதற்கு எதிரான மதிப்பை பெறக்கூடாது. 


படம் 7.3 இந்த விதிமுறைகளை கவனத்தில் கொண்டு கட்டமைக்கப்பட்ட மதிப்பிருத்து கூற்றுகளை காட்டுகிறது.



வரிசை எண்கள் 1 மற்றும் 15 நீங்கலாக, வரிசை எண் 7ல் ஆடு மற்றும் புல்லுக்கட்டு ஆகியவை ஒரே நிலை மதிப்பை பெற்றுள்ளன. அதே நேரத்தில், விவசாயியும் அதே மதிப்பை பெற்றுள்ளார். வரிசை எண் 9ல், ஆடு மற்றும் ஓநாய் ஆகியவை ஒரே மதிப்பை பெற்றுள்ளன, அதே நேரத்தில், விவசாயியும் அதே மதிப்பை பெற்றுள்ளார். எனவே, மேலே குறிப்பிடப்பட்ட  விதிமுறைகளை மீறாமல், சிக்கலை தீர்ப்பதற்கான தொடர் கூற்றுகள் அமைக்கும் நோக்கம் நிறைவேறியுள்ளது. 


2. தேர்ந்தெடுப்பு கூற்றுகள்

ஒரு நிலையை சோதிப்பதற்கான ஒரு சொற்றொடர் "நிபந்தனை" (Condition) ஆகும். C என்பது ஒரு நிபந்தனை, S1 மற்றும் S2 ஆகிய இரண்டும் கூற்றுகள் எனில், 

if C

 

S1

 

else

 

S2


மேலே கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறை கூற்றுக்களுக்கு, தேர்ந்தெடுப்பு கூற்றுகள் என்று பெயர். அது கீழ்கண்டவாறு செயல்படுகிறது. 


1. முதலில், என் மதிப்பு மெய் அல்லது பொய் என சோதிக்கும். 


2. C ன் மதிப்பு மெய் என இருந்தால் S1கூற்றையும், பொய் என இருந்தால் S2 கூற்றையும் செயல்படுத்தும். 


போலிக் குறிமுறையில், S1 மற்றும் S2 தேர்ந்தெடுப்பு கூற்றுகள் if மற்றும் else என்ற சிறப்புச் சொற்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருக்கும். படம் 7.4ல் தேர்ந்தெடுப்பு கூற்றுக்கான பாய்வுப் படம் கொடுக்கப்பட்டுள்ளது. நிபந்தனை பெட்டி C ஆனது இரண்டு வெளியேறும் அம்புக்குறிகளை கொண்டுள்ளது True (மெய்) என குறிக்கப்பட்ட அம்புக்குறி, S1 பெட்டியை நோக்கி அமைந்துள்ளது. False (பொய்) என குறிக்கப்பட்ட அம்புக்குறி S2 பெட்டியை நோக்கி அமைந்துள்ளது. S1 மற்றும் S2 லிருந்து வெளியேறும் அம்புக்குறிகள் இரண்டுமே, தேர்ந்தெடுப்புக்கு அடுத்துள்ள ஒரே பெட்டியை நோக்கி செல்வதை காணலாம்.



நிபந்தனை கூற்று (Conditional Statement)

சில நேரங்களில், நிபந்தனை மதிப்பு மெய் என இருக்கும் நிலையில் மட்டும் சில கூற்றுகளை செயலாக்கம் செய்ய வேண்டிய சூழல் இருக்கலாம். அதவாது, நிபந்தனை மதிப்பு பொய் என இருக்கும் போது, செயலாக்கம் செய்ய எந்த ஒரு கூற்றும் இருக்காது. இதுவும் தேர்ந்தெடுப்புக் கூற்றுக்கு நிகரானது ஆனால், இதில் else (இல்லாவிட்டால்) கூற்றுகள் ஏதுமின்றி காலியாக இருக்கும். இந்த வகையான தேர்ந்தெடுப்பு கூற்று “நிபந்தனை கூற்று” என்று அழைக்கப்படுகிறது.

C என்பது நிபந்தனை, S என்பது ஒரு கூற்று எனில்,

if C

S

மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகள் "நிபந்தனை" கூற்றுகள் என்று அழைக்கப்படுகிறது. இது கீழ்கண்டவாறு செயல்படும். 


1. C ன் மதிப்பு மெய் அல்லது பொய் என சோதிக்கும். 


2. Cன் மதிப்பு மெய் எனில், S கூற்றை செயல்படுத்தும், பொய் எனில், எதுவும் நிகழாது. 


படம் 7.5ல் நிபந்தனை கட்டுப்பாட்டு பாய்வை குறிக்கும் பாய்வுப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.



எடுத்துக்காட்டு 7.2

இரண்டு எண்களில் சிறிய எண்ணை கண்டுபிடித்தல்: a மற்றும் b என்ற இரண்டு எண்கள் கொடுக்கப்படுகிறது. தேர்ந்தெடுப்பு கூற்றை பயன்படுத்தி, அவற்றில் சிறிய எண் எது என்பதை காண வேண்டும். சிறிய எண்-யை result என்ற மாறியில் சோமிக்க வேண்டும். a மற்றும் b இவற்றில் சிறியது எது என்பதை, a b என்று குறிப்பிட வேண்டும். (எடுத்துக்காட்டாக 4 2 = 2; -5 16 = -5). சிறிய எண்ணை கண்டுபிடிப்பதற்கான நெறிமுறை பின் வருமாறு:

 

minimum(a, b)

 

 

--input s : a , b

 

 

--outputs: result = a ↓ b

 

minimum என்ற இந்த நெறிமுறை கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது


1. minimum(a, b)


2. -- a,b


3. if a < b

4. result : = a

5. else

6. result = b

7. -- result = a b


3. Case பகுப்பாய்வு


தேர்ந்தெடுப்பு கூற்று, இரண்டு நிபந்தனைகளை மட்டுமே சோதிக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட  நிபந்தனைகளை சோதித்து, அதனடிப்படையில் செயலாக்கம் செய்ய Case பகுப்பாய்வு பயன்படுகிறது. Case பகுப்பாய்வு ஒரு சிக்கலை சிறு பகுதிகளாக பிரிக்கின்றது. ஒவ்வொரு பகுதியும் தனியே 1 தீர்க்கப்படும். C1, C2 மற்றும் C3 ஆகியவை நிபந்தனைகள் S1, S2, S3 மற்றும் S4 ஆகியவை கூற்றுகள் எனில், அதன் case பகுப்பாய்வு கூற்றுகள் வருமாறு: 

1. case C1

2. S1

3. case C2 

4. S2

5. case C3

6. s3

7. else

8. S4


C1, C2 மற்றும் C3 ஆகிய மூன்று நிபந்தனைகளும் ஒன்றன் பின் ஒன்றாக சோதிக்கப்படும், முதலாவது நிபந்தனையின் சோதிப்பு மதிப்பு, மெய் எனில், அதனைத் தொடந்து உள்ள கூற்று செயல்பட்டு, case பகுப்பாய்வு கூற்று நிறைவு பெறும். C1, C2 மற்றும் C3யின் எந்த ஒரு நிபந்தனை சோதிப்பு மதிப்பும் மெய் என இல்லாத நிலையில், தானமைவாக S4 கூற்று செயல்படும்.


1. நிபந்தனைகள் முழுமையாக வரையறுக்கப்பட்டது: ஏதேனும் ஒரு நிபந்தனை மெய் என இருக்கும். எந்த ஒரு நிபந்தனையும் மெய் என இருக்கவில்லை எனில், தானமைவான நிபந்தனை மெய் ஆகும்.


2. பொதுவற்ற நிபந்தனைகள் : ஒரே ஒரு நிபந்தனை மெய் என இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட நிபந்தனைகள் மெய்யாக இருந்தாலும். Case பகுப்பாய்வு, முதலாவதாக இருக்கும் ஒரே ஒரு மெய் கூற்றை மட்டுமே செயல்படுத்தும். மூன்று நிபந்தனைகளும் பொதுவற்றதாக இருந்தால், நான்கு நிபந்தனைகளாவது 

1. C1 

2. C2 

3. C3 

4. C1, C2, c3 இவற்றுள் எதுவும் இல்லை 


எடுத்துக்காட்டு 7.3. இரண்டு எண்களை ஒப்பிட்டு, கீழ்காணும் வெளியீட்டை  தருவதற்கான நெறிமுறை எழுதுதல்.


முதலில், மேற்காண் நிலையை a < b, a = b மற்றும் a > b என்ற மூன்று முழுமையான பொதுவற்ற நிபந்தனைகளாக பிரிக்க வேண்டும். பின்னர், case பகுப்பாய்வை பயன்படுத்தி, compare( ) வரையறுக்க வேண்டும். 

1.           compare(a, b)

 

2.           case a < b

 

3.           result := -1

 

4.           case a = b

 

5.           result := 0

 

6.           else -- a > b

 

7.           result : = 1


4 சுழற்சிக் கூற்று (Iterative statement): 


C என்ற நிபந்தனையை பொருத்து, ஒரு கூற்றை மீண்டும், மீண்டும் இயக்கும் செயல்நுட்பம் “சுழற்சி” எனப்படும். C என்பது ஒரு நிபந்தனை, S என்பது ஒரு கூற்று எனில், 

while C 

S

மேற்காண் கூற்று ஒரு சுழற்சி கூற்றாகும். இது பின்வருமாறு செயல்படும்.  


1. C என்ற நிபந்தனை மெய் அல்லது பொய் என்பதை சோதிக்கும். 


2. C நிபந்தனை மெய் எனில், S கூற்றை செயல்படுத்தும். பின்னர், மீண்டும் படிநிலை 1க்கு திரும்பும். C நிபந்தனை பொய் எனில் எந்த செயலும் நடைபெறாது. 


பொதுவாக, சுழற்சி கூற்றுகள் "மடக்கு" (Loop) எனப்படும். மேற்காண் இரண்டு படிநிலைகளில், முதலில் C என்ற நிபந்தனை மதிப்பு சோதிக்கப்பட்டு, S என்ற கூற்று, நிபந்தனை மதிப்பு பொய் என வரும் வரை தொடர்ந்து மீண்டும், மீண்டும் இயக்கப்படும். C நிபந்தனை மதிப்பு பொய் என வந்தவுடன் மடக்கு சுழற்சி நிறுத்தப்படும், மேலும், கட்டுப்பாட்டு பாய்வு, சுழற்சிக் கூற்றுக்கு வெளியே உள்ள கூற்றுகளை இயக்கும். நிபந்தனை C, மடக்கின் நிபந்தனை (Loop condition) என்றும், S என்ற கூற்று மடக்கின் உடற்பகுதி (Loop body) என்றும் குறிப்பிடப்படும். ஒரு முறை மடக்கின் நிபந்தனை சோதிக்கப்பட்டு, மடகின் உடற்பகுதியிலுள்ள கூற்றுகள் இயக்கப்படுவது ஒரு சுழற்சி என்று அழைக்கப்படுகிறது. நிபந்தனை C மதிப்பு பொய் என்பது, நிபந்தனையின் முடிவு (termination condition) ஆகும்.

படம் 7.6ல் சுழற்சிக் கட்டுப்பாட்டு பாய்வு, பாய்வுப்படமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், C என்ற நிபந்தனை பெட்டி, True மற்றும் False எனக்குறிக்கப்பட்ட இரண்டு வெளியேறும் அம்புக்குறிகளை கொண்டுள்ளது. True என்ற அம்புக்குறி S பெட்டியை நோக்கி சுட்டுகிறது. நிபந்தனை C மெய் எனில், S பெட்டி இயங்கும். பின்னர், கட்டுப்பாட்டு பாய்வு C பெட்டிக்கு திரும்பி விடும். False என குறிக்கப்பட்ட அம்புக்குறி, சுழற்சி உடற்பகுதிக்கு (புள்ளிகளால் அமைக்கப்பட்ட பெட்டி) வெளியே செல்கின்றது. C நிபந்தனை மதிப்பு பொய் எனில், மடக்கு முடிவுற்று, கட்டுப்பாட்டு பாய்வு, மடக்கிற்கு அடுத்து உள்ள பெட்டிக்கு செல்லும்.


எடுத்துக்காட்டு 7.4: A என்ற எண்ணை B என்ற எண்ணால் வகுத்து, ஈவு மற்றும் மீதியை கணக்கிடுவதற்கான சுழற்சி நெறிமுறை ஒன்றை கட்டமைக்கவும். 

எடுத்துக்காட்டு 6.6ல் வகுக்கப்பட்ட நெறிமுறை திட்டத்தின் படி இந்த நெறிமுறை கீழ்கண்ட விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். 

divide (A, B)  

-- inputs: A ஒரு முழு எண் மற்றும் B

-- outputs : q மற்றும் r; such that A = q X B + r

---மற்றும் --0 r < B 

இப்போது, நெறிமுறை திட்டத்தின் படி, நம்மால் ஒரு சுழற்சி நெறிமுறையை கட்டமைக்க முடியும்.

divide (A, B) 

-- inputs: A ஒரு முழு எண் மற்றும் B  

-- outputs : ஏ மற்றும் r; A = q X B + r மற்றும்

0 < r < B 

q,r: = 0, A 

while r > B

q, r := q + 1, r - B

படம் 7.1ல் இந்த நெறிமுறைக்கான பாய்வுப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.


A மற்றும் B மாறிகளின் மதிப்பாக முறையே 22 மற்றும் 5 யை எடுத்துக்கொண்டு, மேற்காண் நெறிமுறை படிப்படியாக எவ்வாறு இயங்கும் என்பதை காணலாம். அட்டவணை 7.1ன் ஒவ்வொரு வரிசையும், ஒரு சுழற்சியை குறிக்கும். மேலும், ஒரு சுழற்சியின் இறுதியில், கோவைகளின் மதிப்பு மற்றும் மாறிகளின் மதிப்பு எவ்வாறாக இருக்கும் என்பதையும் காட்டும். முந்தைய சுற்றில் மாறியின் மதிப்பு, நடப்பு சுற்றின் கோவையின் மதிப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டு மாறிகளான q மற்றும் r -ன் மதிப்புகள் ஒவ்வொரு சுற்றிலும் மாறுபடுவதை காணலாம். உள்ளீட்டு மாறிகளான A மற்றும் B யின் மதிப்பு மாறுவதில்லை. சுற்று 0 என்பது, மடக்கு தொடங்குவதற்கு முந்தைய மதிப்புகளை குறிக்கும். 4வது சுற்றின் இறுதியில், கொடுக்கப்பட்ட நிபந்தனை ( B) = ( 5) என்பது பொய் என்று இருக்கும். அப்போது, (q, r) = (4, 2) என்ற மதிப்புகளுடன் மடக்கு நிறைவு பெறும்.

அட்டவணை 7.1: divide (22,5) நெறிமுறையின் படிப்படியான இயக்கம் 



எடுத்துக்காட்டு 7.5: 

எடுத்துக்காட்டு 6.3ல் கொடுக்கப்பட்டுள்ள, குரோமிலேண்டில் பச்சோந்திகள் என்ற சிக்கலில், இரண்டு வகையான பச்சோந்திகள் ஒரே எண்ணிக்கையில் இருக்கும் என எடுத்துக்கொள்க. இரண்டு வகையான பச்சோந்திகளும் சந்திக்கும் போது, மூன்றாவது வகையான பச்சோந்தியின் நிறத்திற்கு மாறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் சந்திப்புகளை ஏற்பாடு செய்வதற்கான நெறிமுறை ஒன்றை எழுதுதல். முடிவில் அனைத்து பச்சோந்திகளும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். 

பச்சோந்திகளின் எண்ணிக்கையை a, b, c என்ற மூன்று மாறிகளில் குறிப்பிடலாம். அவற்றின் தொடக்க மதிப்புகள் முறையே A, B, C என்க. a = b என்பது உள்ளீ டு எனில், a = b = 0 மற்றும் C = A + B + C என்பது வெளியீடாக இருக்க வேண்டும். இந்த நெறிமுறைக்கு monochromatize என்று பெயரிடலாம். இந்த நெறிமுறை திட்டம் வருமாறு:

monochromatize(a, b, c)

 

--inputs: a=A, b=B, c=C, a=b

 

--outputs : a = b = 0 , c = A+B+C


ஒவ்வொரு சுழற்சியிலும், ஒரே எண்ணிக்கையிலான இரண்டு வகையான, பச்சோந்திகள் சந்தித்துக்கொள்ளும்போது, அவை அவற்றின் நிறத்தை மூன்றாவது வகையான பச்சோந்தியின் நிறத்திற்கு மாற்றிக்கொள்ளும். 

எடுத்துக்காட்டாக, A, B, C = 4, 4, 6 எனில், அவற்றின் தொடர்ச்சியான சந்திப்பின் முடிவு பினவருமாறு அமையும். 

அட்டவணை 7.2: ஒரே எண்ணிக்கையில் உள்ள இரண்டு வகையான பச்சோந்திகளுக்கிடையான தொடர் சந்திப்பு


ஒவ்வொரு சந்திப்பிலும், a மற்றும் மயின் மதிப்புகளில் 1 குறையும் மற்றும் C மதிப்பு 2 அதிகரிக்கும். இதன் தீர்வை, சுழற்சி நெறிமுறையில் குறிப்பிடலாம். 

monochromatize(a, b, c)



--inputs: a=A, b=B, c=C, a=b

 

--outputs: a = b = 0, c = A+B+C

 

while a > 0

 

a, b, c := a-1, b-1, c+2


படம் 7.7ல் இந்த நெறிமுறை பாய்வுப்படமாக கொடுக்கப்பட்டுள்ளது. 



Tags : Computer Science கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 7 : Composition and Decomposition : Composition Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 7 : பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் : ஒருங்கிணைப்பு - கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 7 : பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்