Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

செல்: ஒரு வாழ்வியல் அலகு | தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 6 : Cell: The Unit of Life

   Posted On :  06.07.2022 09:37 pm

11 வது தாவரவியல் : அலகு 6 : செல் : ஒரு வாழ்வியல் அலகு

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

தாவரவியல் : செல்: ஒரு வாழ்வியல் அலகு - முன்பதிவு மற்றும் முக்கியமான கேள்வி பதில் - சுருக்கமான கேள்விகள் பதில்கள், குறுகிய கேள்விகளுக்கான பதில்கள்

11 வது தாவரவியல் : அலகு 6

செல்: ஒரு வாழ்வியல் அலகு

 

6. கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் முக்கியத்துவத்தைக் கூறுக

விடை:

* ஒளிக்கதிர்களின் வீச்சளவில் உண்டாக்கப்படும் மாற்றங்கள் மூலம் அவற்றின் தீவிரத்தை மாற்றியமைத்து அதைக் கொண்டு பொருட்களின் புலப்படும் திறனை உயர்த்தி அவற்றைத் தெளிவாகப் பார்த்தறிய உதவுகிறது.

* பொருளுக்கும், பொருளருகு லென்சிற்கும் இடையே வைக்கப்பட்ட கட்டத்தகடு (phase plate) இந்த வீச்சளவு மாற்றத்தினை உண்டாக்க உதவுகிறது.

* இந்த சுற்றுப்பட்டை தடிமனாக இருப்பின் (எதிர்மறை கட்டத்தகடு) பிற நிரப்பு பகுதி மெல்யதாகவும், சுற்றுப்பட்டை மெல்லியதாக இருப்பின் (நேர்மறை கட்டத் தகடு) பிற நிரப்புப் பகுதி தடிமனாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த தடிமன் வேறுபாடு ஊடாக ஒளி பாய்ந்து அவற்றின் வேறுபடுத்தலால் கட்டவேறுபாடடைந்த கதிர்கள் பொருளினை வேறுபடுத்தி அறிய உதவுகிறது. செல்கள் திசுக்களைப் படித்தறியவும் வளர்ப்பு ஊடகத்தில் உள்வளர்ப்பின் மூலம் திசு வளர்ப்பு செய்து, செல்பகுப்பின் நிலைகளைப் படித்தறிய இந்நுண்ணோக்கி பெரிதும் உதவுகிறது. இந்த வீச்சளவு மாற்றத்தினை உண்டாக்க உதவுகிறது.

 

7. புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக

* பிஷ்ஷர் (1894) மற்றும் ஹார்டி (1899) புரோட்டோ பிளாசத்தை ஒரு பல்கூட்டுக் கூழ்மத் தொகுப்பு (Complex colloidal system) எனக் கூறினர்.

* இது நீர்மப் பொருட்களை முதன்மையாகவும், பல்வேறு கரைபொருட்களாலான குளுக்கோஸ், கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள், கனிமங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள் மற்றும் நொதிகளை உள்ளடக்கியது.

* ஒரு படித்தானதன்மை (homogenous)- நீரில் கரைபவை

* பல படித்தான தன்மை (heterogenous)- நீரில் கரையாதவை இதனாலே புரோடோபிளாசத்தின் கூழ்மத் தன்மை அமைகிறது.

 

8. புரோகேரியாட்டுகளுக்கும் யூகேரியாட்டுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.


 

9. தாவரசெல்லுக்கும் விலங்கு செல்லுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக

 

தாவரச் செல்

1. பொதுவாக விலங்கு செல்லோடு ஒப்பிடும் போது தாவரச் செல் பெரியது.

2. பிளாஸ்மா சவ்வுடன் கூடுதலாகச் செல்சுவர் காணப்படுகிறது. இது மையத்தட்டு, முதன்மை சுவர் மற்றும் இரண்டாம் நிலைச்சுவரைக் கொண்டுள்ளது.

3. பிளாஸ்மோடெஸ்மேட்டா காணப்படுகிறது.

4. பசுங்கணிகம் காணப்படுகின்றன.

5. நிலையான பெரிய வாக்குவோல்கள் காணப்படுகின்றன.

6. வாக்குவோலைச் சுற்றி டோனோபிளாஸ்டு சவ்வு காணப்படுகிறது.

7. பொதுவாகச் சென்ட்ரியோல்கள் காணப்படுவதில்லை. ஆனால் நகரும் திறன் கொண்ட கீழ்நிலை தாவரச் செல்களில் மட்டும் காணப்படுகிறது.

8. உட்கரு செல்லின் ஓரங்களில் காணப்படுகிறது.

9. லைசோசோம்கள் அரிதாகக் காணப்படுகின்றன.

10. சேமிப்பு பொருளாகத் தரசம் உள்ளது. 

விலங்கு செல்

1. தாவரச் செல்லைக் காட்டிலும் விலங்கு செல் சிறியது.

2. செல் சுவர் கிடையாது.

3. பிளாஸ்மோடெஸ்மேட்டா காணப்படுவதில்லை.

4. பசுங்கணிகம் காணப்படுவதில்லை.

5. தற்காலிகச் சிறிய வாக்குவோல்கள் காணப்படுகின்றன.

6. டோனோபிளாஸ்டு காணப்படுவதில்லை.

7. சென்ட்ரியோல்கள் காணப்படுகின்றன.

8. உட்கரு செல்லின் மையத்தில் காணப்படுகின்றன.

9. லைசோசோம்கள் காணப்படுகின்றன.

10. சேமிப்பு பொருளாகக் கிளைக்கோஜன் உள்ளது.

 

10. தாவரச் செல்லின் நுண் அமைப்பு - படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.



Tags : Cell: The Unit of Life | Botany செல்: ஒரு வாழ்வியல் அலகு | தாவரவியல்.
11th Botany : Chapter 6 : Cell: The Unit of Life : Answer the following questions Cell: The Unit of Life | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 6 : செல் : ஒரு வாழ்வியல் அலகு : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - செல்: ஒரு வாழ்வியல் அலகு | தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 6 : செல் : ஒரு வாழ்வியல் அலகு