உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 7 : Body Fluids and Circulation
15. தமனி மற்றும் சிரைகளை வேறுபடுத்துக.
தமனிகள்
1. இதயத்திலிருந்து இரத்தத்தை வெளியே எடுத்து செல்பவை
2. உடலின் ஆழத்தில் உள்ளது.
3. இதன் சுவர் தடித்தது, எளிதில் சிதையா வண்ணம் உள்ளது.
4. இதில் வால்வுகள் இல்லை.
5. நுரையீரல் தமனி தவிர அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தை எடுத்து செல்லும்
6. இரத்த அழுத்தம் அதிகம்
7. நுண் தமனிகள் இரத்த நுண் நாளங்களுடன் இணையுமிடத்தில் சிறிய சுருக்குத் தசை உண்டு
சிரைகள்
உடலின் பகுதிகளிலிருந்து இரத்தத்தை இதயத்திற்கு எடுத்து வருபவை.
உடலின் மேற்பரப்பில் (தோலுக்கு அடியில் உள்ளது)
இதன் சுவர் மெல்லியது.
நுரையீரல் சிரை தவிர, அனைத்து சிரைகளும் ஆக்ஸிஜன் அற்ற இரத்தத்தை எடுத்து வரும்.
இரத்த அழுத்தம் குறைவு
சுருக்கு தசை கிடையாது
16. திறந்த வகை சுற்றோட்டம் மற்றும் மூடிய வகை சுற்றோட்டங்களை வேறுபடுத்துக.
திறந்த வகை சுற்றோட்டம்
இதயத்திலிருந்து உந்தி தள்ளப்படும் இரத்தம், இரத்த குழலின் வழியாக, உடற்குழிக்குள் செல்லும் உடற்குழி ஹீமோசீல் எனப்படும்.
எ.கா. கணுக்காலிகள், மெல்லுடலிகள்
மூடிய வகை சுற்றோட்டம்
இதயத்திலிருந்து உந்தி தள்ளப்படும் இரத்தம், இரத்த நாளங்களுக்குள் செல்லும்
எ.கா. வளைதசை புழுக்கள், முதுகெலும்பிகள்
17. மிட்ரல் வால்வு மற்றும் அரைசந்திர வால்வுகளை வேறுபடுத்துக.
மிட்டரல் வால்வு
1. இது இடது ஆரிக்குலார் வென்டிரிக்கிள் துளையில் உள்ளது.
2. இரத்தத்தை ஆரிக்கிளிலிருந்து வென்டிரிக்களுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கிறது.
3. இரத்தம் பின்னோக்கி செல்வதை தடுக்கிறது.
4. இதயம் சுருங்கும் போது மிட்டரல் மூடுவதால் லப் என்ற ஒலி உண்டாகிறது.
5. கார்டேடென்டினே என்ற தசை நாண் இவ்வால்வுடன் இணைக்கப்படவில்லை.
அரை சந்திர வால்வு
இது நுரையீரல் தமனி மற்றும் மகா தமனி தொடங்கும் இடத்தில் உள்ளது.
இரத்தத்தை வென்ட்ரிக்கிளிலிருந்து நுரையீரல் தமனி மற்றும் மகாதமனிக்குள் செல்ல அனுமதிக்கிறது.
முன்னோக்கி சென்ற இரத்தம் பின்னோக்கி வருவதை தடுக்கிறது.
இதயம் விரியும் போது பிரை வால்வுகள் மூடுவதால் 'டப்' என்ற ஒலி உண்டாகிறது.
கார்டேடென்டினே பிரை வால்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.
18. வலது வென்ட்ரிக்கிள் சுவர் இடது வென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது ஏன்?
இடது வென்ட்ரிக்களின் சுவர் தடித்தது
காரணம் :-
• வலது வென்ட்ரிக்கள் சுருங்குவதால் இரத்தம் சுத்த இரத்தம் நுரையீரல் சிரை மூலம் நுரையீரலுக்கு மட்டும் செல்கிறது. இதற்கு அதிக இரத்த அழுத்தம் தேவையில்லை.
• இடது வென்ட்ரிக்கள் சுருங்கும் போது மகா தமனி மூலம் உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்கிறது. இதற்கு அதிக அழுத்தம் தேவைப்படுவதால், இடது வென்ட்ரிக்களின் சுவர் தடித்துள்ளது, இதனால் வென்ட்ரிக்கிள் சுருங்கும் போது அதிக அழுத்தம் கொடுக்கிறது.
19. ஒருவரின் உணவில் இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் விளைவுகள் யாவை?
1. இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைகிறது.
2. ஹீமோகுளோபின் அளவு குறைவதால் மூச்சுத்திணறல் நோய் உண்டாகிறது.
3. இரும்புச் சத்து குறைவால் அனிமியா என்ற நோய் உருவாகிறது.
4. இரும்பு குறைவால் ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறன் குறைகிறது.
20. இதயத்துடிப்பு தோன்றுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் நடைபெறும் முறையை விவரி.
• மனித இதயம் மயோஜெனிக் வகையைச் சார்ந்தது.
• இதயத் துடிப்பை பேஸ் மேக்கர் துவக்கி வைக்கிறது, மொத்த இதயத்தின் துடிப்பு விகிதத்தையும் இக்கணுவே தீர்மானிக்கிறது.
• இந்த பேஸ் மேக்கர் வலது சைனு ஏட்ரியல் கணுவில் அமைந்துள்ளது.
• வலது ஆரிக்கிளின் இடது பகுதியில் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் முடிச்சு உள்ளது.
• இம் முடிச்சிலிருந்து இரு கிஸ்ஸின் கற்றைகள், வென்ட்ரிக்குலார் இடைச்சுவர் வழியாக கீழ்நோக்கி சென்று பர்கின்ஜிநாரிழையாக வென்ட்ரிக்களின் சுவரில் பரவியுள்ளது.
இதயதுடிப்பு தோன்றுதல்:-
• வலது ஏட்ரியத்தில் மேலுள்ள பேஸ் மேக்கர் முதலில் மின் தூண்டுதலை துவக்கி வைக்கிறது.
• முதலில் இத்தூண்டல் ஆரிக்களில் பரவுகிறது.
• பின்பு இத்தூண்டல் ஆரிக்குலார் வென்ட்ரிக்கிள் கணு வழியாக ஹிஸ்சின் கற்றை வழியாக பர்கின்ஜி நாரிழைக்கு வருகிறது.
• பர்கின்ஜி நாரிழை வெண்ட்ரிக்கிளை சுருங்கச் செய்கிறது.
கட்டுப்படுத்துதல்:-
• பேஸ் மேக்கர் மின் முனைப்பியக்க நீக்கம் (depolarsation) மூலம் செல் சவ்வை கிளர்ச்சியடையச் செய்கிறது.
• சோடியம் உள்ளே நுழைவதாலும், பொட்டாசியம் வெளியேற்றம் குறைவதாலும் தொடக்கத்தில் மின் முனைப்பியக்க நீக்கம் மெதுவாக நிகழ்கிறது.
• குறைந்த பட்ச மின்னழுத்த வழி மூலம் கால்சியம் கால்வாய் தூண்டப்பட்டு துரித மின் முனைப்பியக்க நீக்கம் தோன்றுகிறது. இதனால் செயல் நிலை மின்னழுத்தம் தோன்றுகிறது.
• பேஸ் மேக்கர் செல்கள் K+ வெளியேற்றத்தால் மீண்டும் மெதுவாக மின் முனைப்பியக்கம் அடைகிறது.
21. நிணநீர் என்றால் என்ன? அதன் பயன் யாது?
நிணநீர் நாளங்களில் உள்ள திரவத்திற்கு நிணநீர் என்று பெயர்.
பயன்கள்:-
1. உடல் செல்களில் உள்ள உணவுப் பொருள்கள், CO2 மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவைகளை கடத்த உதவுகிறது.
2. உடல் செல்களை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.
3. நிணநீர் முடிச்சுக்கள் – லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்கிறது.
4. இரத்த கன அளவை ஒரே சீராக வைக்கிறது
5. குடலுறிஞ்சிகளில் உள்ள லாக்டியல் நாளத்தில் உள்ள நிணநீர் மூலம் கொழுப்பு பொருளை உறிஞ்சுகிறது.
22. இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எப்போது மற்றும் எப்படி உண்டாக்கப்படுகின்றன.
இதய சுழற்சியின் போது வால்வுகளின் இயக்கத்தால் லப் மற்றும் டப் என்ற இருவித ஒலிகள் உண்டாகிறது. இவ்ஒலிகளுக்கு இதய ஒலிகள் என்று பெயர்.
• லப் ஒலி :- வென்ட்ரிக்கிள் சுருங்கும் போது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடுவதால் உண்டாகிறது.
• டப் ஒலி :- வென்ட்ரிக்கிள் விரியும் போது நுரையீரல் தமனி மற்றும் மகா தமனியிலுள்ள பிரை சந்திர வால்வுகள் மூடுவதால் உண்டாகிறது.
23. சொல் சோதனை :- லிம்போசைட்டுகள், சிவப்பு செல்கள், லியுகோசைட்டுகள், பிளாஸ்மா, எரித்ரோசைட்டுகள், வெள்ளை அணுக்கள், ஹீமோகுளோபின், ஃபேகோசைட், பிளேட்டுலெட்டுகள், இரத்த உறைவு.
24. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும்.