உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 7 : Body Fluids and Circulation
மதிப்பீடு:
1. நிணநீரின் பணி யாது?
அ) மூளைக்குள் ஆச்சிஜனைக் கடத்துதல்
ஆ) CO2 வை நுரையீரல்களுள் கடத்துதல்
இ) செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது.
ஈ) இரத்தச் சிவப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது,
விடை : இ) செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது.
2. இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?
அ) குளோபுலின்
ஆ) ஃபைப்ரினோஜன்
இ) அல்புமின்
ஈ) சீரம் அமைலேஸ்
விடை : ஆ) ஃபைப்ரினோஜன்
3. இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?
அ) ஃபைப்ரின்
ஆ) கால்சியம்
இ) இரத்தத் தட்டுக்கள்
ஈ) பிலிரூபின்
விடை : ஈ) பிலிரூபின்
4. நிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம்.
அ) இரத்த வெள்ளையணுக்கள் இல்லாததால்
ஆ) இரத்த வெள்ளையணுக்கள் இருப்பதால்
இ) ஹீமோகுளோபின் இல்லாததால்
ஈ) இரத்தச் சிவப்பணுக்கள் இல்லாததால்
விடை : இ) ஹீமோகுளோபின் இல்லாததால்
5. கீழ்க்கண்டவற்றுள் எதன் புறப்பரப்பில் இது இருப்பது அல்லது இல்லாமையால் இரத்த வகைகள் உருவாகிறது.
அ) வெள்ளையணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிஜென் இருப்பது (அ) உள்ளதால்
ஆ) சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிபாடி இருப்பது
இ) சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆண்டிஜென் இருப்பது
ஈ) வெள்ளையணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிபாடி இருப்பது
விடை : இ) சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆண்டிஜென் இருப்பது
6. இரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?
அ) A
ஆ) B
இ) AB
ஈ) O
விடை : இ) AB
7. இவை சிதைக்கப்படுவதால் எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீட்டாலிஸ் ஏற்படுகிறது.
அ) கருவின் இரத்தச்சிவப்பணுக்கள்
ஆ) கரு இதய இரத்தக் குழல் அடைப்பால் பாதிக்கப்படுதல்
இ) கருவின் இரத்த வெள்ளளையணுக்கள்
ஈ) கரு மினமட்டா நோயால் பாதிக்கப்படுதல்.
விடை : அ) கருவின் இரத்தச்சிவப்பணுக்கள்
8. இதயத்தில் ‘டப்’ ஒலி இதனால் ஏற்படுகிறது.
அ) ஆரிக்குலோ – வென்ட்ரிக்குலார் வால்வுகள் மூடுவதால்
ஆ) அரைச்சந்திர வால்வுகள் திறப்பதால்
இ) அரைச்சந்திரவால்வுகள் மூடுவதால்
ஈ) ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகள் திறப்பதால்.
விடை: இ) அரைச்சந்திரவால்வுகள் மூடுவதால்
9. இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்?
அ) வலது வென்ட்ரிக்கிளை விடக் குறைந்தளவு இரத்த வெளியேற்றத்தைக் கொண்ட இடது வென்ட்ரிக்கிள் மூலம் சிஸ்டமிக் இரத்த நுண்நாளங்களுக்கு இரத்தம் அளிக்கப்படுவதால்.
ஆ) இரத்த நுண்நாளங்கள் இதயத்தை விட்டுத் தள்ளியிருப்பதால் இரத்த ஓட்டம் மெதுவாக நடைபெறுகிறது.
இ) இரத்த நுண்நாளங்களின் மொத்தப் பரப்பு நுண்தமனிகளின் மொத்த பரப்பைவிடப் பெரியது.
ஈ) இரத்த நுண்நாளங்களின் சுவர், செல்களுக்குள் ஆக்ஸிஜணைப் பரிமாறும் அளவிற்கு மெல்லியதாக இல்லை.
விடை: இ) இரத்த நுண்நாளங்களின் மொத்தப் பரப்பு நுண்தமனிகளின் மொத்த பரப்பைவிடப் பெரியது.
10. நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிசிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ, அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?
அ) A-
ஆ) AB
இ) O+
ஈ) O-
விடை: இ) O+
11. கீழ்கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் எந்தப்பணி முதிர்ந்த இரத்தச் சிவப்பு அணுக்களால் மேற்கொள்ள இயலும்?
அ) புரதஉற்பத்தி
ஆ) செல்பிரிதல்
இ) லிப்பிட் உற்பத்தி
ஈ) செயல்மிகு கடத்தல்
விடை: ஈ) செயல்மிகு கடத்தல்
12. சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம்
அ) நீர்ம அழுத்தத்தைவிட அதிகம்
ஆ) திரவங்களின் நிகர வெளியேற்ற அளவில் முடியும்
இ) திரவங்களின் நிகர உறிஞ்சுதல் அளவில் முடியும்
ஈ) எவ்வித மாற்றமும் நிகழவில்லை.
விடை: அ) நீர்ம அழுத்தத்தைவிட அதிகம்
13. ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500 மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?
அ) 50
ஆ) 100
இ) 150
ஈ) 400
விடை: இ) 150
14. எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது.
அ) மென்மையான தசைகள் இல்லாமை
ஆ) வால்வுகள் இருப்பதால்
இ) சிரைகள் நிணநீர் முடிச்சுகளுக்கு அருகில் இருப்பதால்
ஈ) மெல்லிய எண்டோதீலிய சுவர் இருத்தலால்.
விடை: ஆ) வால்வுகள் இருப்பதால்