வேதிய ஒருங்கிணைப்பு | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 11 : Chemical Coordination and Integration
14. உடல்சமநிலைப்பேணுதல் (ஹோமியோஸ்டாசிஸ்) பற்றி எழுதுக.
உடல் சமநிலைப் பேணுதல் என்பது பல்வேறு ஒருங்கிணைப்பு மண்டலங்கள் மூலம் உடலின் உட்புறச் சூழ்நிலையை நிலையாக இருக்கச் செய்வதாகும்.
உடலின் உட்புறச் சூழ்நிலையை நிலையாக வைத்துக் கொள்ள நாளமில்லா சுரப்பி மண்டலமும், நரம்பு மண்டலமும் உதவுகிறது.
நாளமில்லாச் சுரப்பு:
1. a. இரத்தத்தில் கால்சியம் அளவு குறையும் போது பாராதைராய்டு சுரப்பி அதிக அளவு பாரா தைராய்டு ஹார்மோனைச் சுரந்து இரத்தத்தில் கால்சிய அளவை அதிகரிக்கச் செய்கிறது.
b. இதே வேளையில் இரத்தத்தில் கால்சிய அளவு அதிகரித்து விட்டால், பாராதைராய்டு சுரப்பி சுரக்கும் மற்றொரு ஹார்மோனான கால்சிடோனின் பாராதைராய்டு ஹார்மோனுக்கு எதிராக செயல்பட்டு கால்சியத்தின் அளவை குறைக்கிறது.
2. a. அட்ரினல் சுரப்பி சுரக்கும் அட்ரினலின் நெருக்கடி காலத்தில் இதயத்துடிப்பு விகிதம், மற்றும் இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது.
b. அட்ரினல் சுரப்பி சுரக்கும் மற்றொரு ஹார்மோனான, நார் அட்ரினலின், இதயத்துடிப்பு விகிதம் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
நரம்பு மண்டலம்:
1. a. பரிவு நரம்பு மண்டலம், உணர்ச்சி மற்றும் அதிர்ச்சி வேளையில், கண்ணீர் சுரப்பியை தூண்டி கண்ணீரை சுரக்கச் செய்கிறது.
b. எதிர் பரிவு மண்டலம், உணர்ச்சி மற்றும் அதிர்ச்சி குறைந்தவுடன், கண்ணீர் சுரப்பை குறைக்கிறது.
15. ஹார்மோன்கள் என்பவை வேதித்தூதுவர்கள் எனப்படும் — வாக்கியத்திற்கு வலுசேர்க்கவும்.
ஹார்மோன்கள் நமது உடலில் கரிம வினையூக்கிகளாகவும் துணை நொதிகளாகவும் செயல்பட்டு இலக்கு உறுப்புகளில் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வதால் இவை வேதித்தூதுவர்கள் எனப்படும்.
16. அண்ட உருவாக்கத்தில் ஈஸ்ட்ரோஜன் பங்கைக் குறிப்பிடுக.
• ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கிராபியன் பாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டி விடுகின்றன.
• பாலிக்கிள்கள் வளர்ச்சியடைந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சுரக்கிறது.
• இக்ஹார்மோன் முட்டை உருவாக்கத்தை செயல்படுத்துகிறது.
• லுயூட்டியல் நிலையில் முட்டை விடுபடுதலில் லூயூட்டினைசிங் ஹார்மோன் பங்கு கொள்கிறது.
17. தைராய்டு சுரப்பியின் அசினி பற்றி எழுதுக.
• தைராய்டு சுரப்பி இரண்டு கதுப்புகளையுடையது. ஒவ்வொரு கதுப்பும் பல நுண்கதுப்புகளால் ஆனது.
• நுண் கதுப்புகள் அசினி என்னும் பாலிகிள்களால் ஆனது. ஒவ்வொரு அசினஸின் சுரப்புத் தன்மையுடைய கனசதுர எபித்தீலிய செல்களை சுவராகப் பெற்றுள்ளன.
• அசினஸின் உட்பகுதி தைரோகுளோபுலின் மூலக்கூறுகள் கொண்ட அடர்த்தி மிக்க கூழ்ம கிளைகோ புரதக் கலவையால் நிரம்பியுள்ளது.
18. டையாபெட்டிஸ் மெலிட்டஸ் மற்றும் டையாபெட்டிஸ் இன்சிபிடஸ் ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்களைக் குறிப்பிடுக.
டையாபெட்டிஸ் மெலிட்டஸ்
இன்சுலின் குறைவாக சுரந்தால், குளுக்கோஸ் பயன்பாடு குறைகிறது. கல்லீரல் மற்றும் தசைகள் குளுக்கோஸை க்ளைகோஜென்னாக மாற்ற இயலாது. எனவே அதிக குளுக்கோஸ் இரத்தத்தில் கலந்து இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்நிலை டயஸபடிஸ் மெலிட்டஸ் எனப்படும்.
டையாபெட்டிஸ் இன்சிபிடஸ்
• ADH ஹார்மோன் நியுரோஹைபோபைஸிஸ் மூலம் சுரக்கப்படும். இக்ஹார்மோன் நீர் உறிஞ்சுதலை அதிகப்படுத்தி சிறுநீர்வழி அதிக நீர் வெளியேற்றத்தை தடை செய்கிறது.
• ADH சுரப்பு குறைந்தால் அதிக நீர் சிறுநீர் வழியாக வெளியேறுதலால் டயாபடிஸ் இன்சிபிடஸ் என்னும் நீர்த்தத சிறுநீர் உருவாக்க நிலை ஏற்படுகிறது.
19. அக்ரோமெகாலியின் அறிகுறிகளைக்குறிப்பிடுக.
பெரியவர்களுக்கு வளர்ச்சி ஹார்மோன் அதிகரிப்பதால் இந்நிலை தோன்றுகிறது.
• கை எலும்புகள், கால் பாத எலும்புகள், தாடை எலும்புகள் மிகை வளர்ச்சி பெறுகின்றன. இன உறுப்புகளின் ஒழுங்கற்ற செயல்பாடுகள்.
• வயிற்றுறுப்புகள் நாக்கு, நுரையீரல், இதயம், கல்லீரல், மண்ணீரல், நாளமில்லா சுரப்பிகளான தைராய்டு அட்ரீனல் போன்றவை பெரிதாதல்.
20. கிரிடினிசத்தின் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
• குறை தைராய்டு சுரப்பு காரணமாக இந்நிலை உண்டாகிறது. இதனால் குறைவான எலும்பு வளர்ச்சி, பால் பண்பில் முதிர்ச்சியின்மை மனவளர்ச்சி குறைதல், தடித்து சுருங்கிய தோல், தடித்த துருத்திய நாக்கு, உப்பிய முகம், குட்டையான தடித்த கை மற்றும் கால்கள்.
• குறைந்த அடிப்படை வளர்ச்சிதைமாற்றம், குறைந்த நாடித்துடிப்பு, குறைந்த உடல் வெப்பநிலை, இரத்த கொலஸ்ட்டரால் அளவு அதிகரிப்பு.
21. தைராய்டு சுரப்பி அமைப்பைப் பற்றி சுருக்கிஎழுதுக.
• தைராய்டு சுரப்பி மிகப் பெரிய நாளமில்லாச் சுரப்பியாகும். இதன் பக்கக் கதுப்புகள் இரண்டும் 'இஸ்துமஸ்' எனப்படும். மையத்திசுத் தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது.
• ஒவ்வொரு கதுப்பும் பல நுண் கதுப்புகளல் ஆனது. நுண்கதுப்புகள் அசினி எனும் பாலிக்கிள்களால் ஆனது. அசினஸ் ஒவ்வொன்றும் சுரப்புதன்மையுடைய கனசதுர எப்பிதீலியச் செல்களை சுவராக பெற்றுள்ளன.
• அசினஸின் உட்பகுதி தைரோகுளோபுலின் மூலக்கூறுகள் கொண்ட அடர்த்தி மிக்க கூழ்மக்ளைக்கோ புரதக் கலவையால் நிரம்பியுள்ளது.
22. அட்ரினல் கார்டெக்ஸின் அடுக்குகளையும் அதன் சுரப்புகளையும் எழுதுக.
• அட்ரீனல் கார்டெக்ஸ் மூன்று அடுக்குகளைக் கொண்டது. அவை சோனா குளோமருலோசா சோனாபாஸிகுலேட்டா, சோனாரெடிகுலாரிஸ் ஆகும்.
• சோனா குளோமருலோசா 15% பகுதி தாது கலந்த கார்டிகாய்டுகளை சுரக்கிறது.
• கார்டெக்ஸின் அகன்ற நடுப்பகுதி (75%) சோனா பாஸிகுலேட்டா. இது குளுக்கோ கார்டிகாய்டுகளான கார்டிசோல், கார்டிகோஸ்டிரோன் மற்றும் குறைந்த அளளவு அட்ரீனல் ஆன்ட்ரோஜன், எஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கின்றது.
• சுமார் 10% அளவுடைய உட்பகுதி சோனா ரெட்டிகுலாரிஸ் அட்ரீனல் ஆன்ட்ரோஜன் குறைந்த அளவு எஸ்ட்ரோஜன் மற்றும் குளுக்கோ கார்டிகாய்டுகளைச் சுரக்கிறது.
23. ஹைபர்கிளைசீமியா மற்றும் ஹைபோகிளைசீமியா - வேறுபடுத்துக.
ஹைபர் க்ளைசீமியா
• இரத்தத்தில் இயல்புக்கு அதிக அளவு குளுக்கோஸ் இருத்தல் ஹைபர் க்ளைசிமியா எனப்படும். குறைவான இன்சுலின் சுரத்தலால் இந்நிலை ஏற்படுகிறது.
• ஹைப்போ க்ளைசீமியா
• இரத்தத்தில் குளுக்கோஸ் இயல்புகக்கு குறைவான நிலையில் காணப்பட்டால் அது ஹைப்போ க்ளைசிமியா எனப்படும். அதிக அளவு இன்சுலின் சுரத்தலால் இந்நிலை ஏற்படலாம்.
24. கோலி சிஸ்டோகைனின் (CCK) பணிகளைக் குறிப்பிடுக.
• உணவில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலத்தைப் பொறுத்து முன்சிறுகுடலில் கோலிசிஸ்டோகைனின் (CCK) சுரக்கின்றது.
• பித்தப்பையின் மீது செயல்பட்டு பித்த நீரை முன்சிறுகுடலில் வெளியிடுகிறது. கணையநீர் உற்பத்தியாகி வெளிவருவதையும் தூண்டுகிறது.
25. வளர்ச்சி ஹார்மோன் இயல்பான உடல் வளர்ச்சிக்கு முக்கியமானது. இக்கூற்றை நியாயப்படுத்தவும்.
• வளர்ச்சி ஹார்மோன் அனைத்துத் திசுக்களின் வளர்ச்சியையும் வளர்சிதை மாற்றச் செயல்களையும் மேம்படுத்துகிறது.
1) இது கார்போஹைட்ரேட் புரதம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
2) புரத உற்பத்தி விகிதத்தை உயர்த்துகின்றது.
3) குருத்தெலும்பு உருவாக்கத்தை தூண்டுகிறது.
4) எலும்பு உருவாக்கத்தை தூண்டுகிறது.
5) நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாதுஉப்புக்களை உடலில் நிறுத்திக் கொள்ளச் செய்கிறது.
6) அடிபோஸ் திசுக்களில் உள்ள கொழுப்பு அமிலங்களை விடுவிக்கவும் செல்களின் ஆற்றல் தேவைக்கான குளுக்கோஸ் பயன்பாட்டு வீதத்தைக் குறைக்கிறது.
7) குளுக்கோஸ் நம்பியுள்ள மூளை போன்ற திசுக்களுக்காக அதனைச் சேமிக்கிறது.
26. பீனியல் சுரப்பி ஒரு நாளமில்லாச் சுரப்பி - இதன் பணியைப் பற்றி எழுதுக.
• பீனியல் சுரப்பி மெலடோனின் எனும் ஹார்மோனைச் சுரந்து நாளமில்லா சுரப்பியாக செயல்படுகிறது.
• இது நாள்சார் ஒருங்கமைவு இயக்கத்தினைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
• நம் உடலில் தூக்க-விழிப்பு சுழற்சி முறையாக நடைபெறச் செய்கிறது.
• இன உறுப்புகளின் பால் முதிர்ச்சி கால அளவை நெறிப்படுத்துகிறது.
• உடலின் வளர்சிதை மாற்றம், நிறமியாக்கம், மாதவிடாய் சுழற்சி மற்றும் தடைகாப்பு செயல்கள் ஆகியவற்றிலும் மெலடோனின் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
27. அட்ரினலின் ஹார்மோன் பணிகளை விவாதி.
1) கல்லீரலில் உள்ள கிளைக்கோஜனை சிதைத்து குளுக்கோஸாக மாற்றுகிறது.
2) சேமிப்பு செல்களில் உள்ள கொழுப்பை கொழுப்பு அமிலங்களாக சிதைத்து வெளியேற்றுகிறது.
3) இதயத்துடிப்பு வீதம் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றது.
4) தோலின் மென்தசைகள் மற்றும் உள்ளுறுப்புத் தமனிகளைத் தூண்டி இரத்த ஓட்டத்தை குறைக்கிறது.
5) எலும்புத் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
6) எலும்புத்தசை, இதயத்தசை மற்றும் நரம்புத்திசுக்களின் வளர்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகின்றது. எனவே அட்ரினலின் அவசர கால ஹார்மோன் அல்லது Flight and Fright ஹார்மோன் என அழைக்கப்படுகிறது.
28. கணையச்சுரப்பியை உடலிலிருந்து நீக்கினால் ஏற்படும் விளைவுகளை நிறுவுக.
• நோய் நிலையின் காரணமாக கணையம் நீக்கப்படுதல் கணைய நீக்கம் ஆகும்.
• ஹைப்போ க்ளைசிமியா அல்லது ஹைப்பர் க்ளைசிமியா நிலை ஏற்படலாம்.
• ஏனெனில் இன்சுலின் மற்றும் குளுக்ககான் முழுமையாக இல்லாத நிலையில் டயபடிஸ் மெலிட்டஸ் ஏற்படலாம். குறைவான கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் காணப்படும்.
1) உடல் மெலிவு ஏற்படலாம்.
2) வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
3) பசி ஏற்படாது
4) சோர்வு மற்றும் வாந்தி ஏற்படும்.
5) கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
6) மனம் சார்ந்த குறைபாடு மற்றும் கற்றலில் குறைபாடு ஏற்படும்.
29. சிறுநீரகம் ஒரு நாளமில்லாச் சுரப்பியாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை விவரி.
• சிறுநீரகம் ஒரு நாளமில்லா சுரப்பியாக செயல்படுகிறது. சிறுநீரகம் ரெனின் எரித்ரோபாய்டின் மற்றும் கால்சிட்ரியால் எனும் ஹார்மோன்களை சுரக்கின்றன.
• ஜக்டாக்ளாமருலார் செல்களில் சுரக்கப்படும் ரெனின் இரத்தத்தில் ஆஞ்சியோடென்சின் உருவாகும் போது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றது.
• JGA செல்களில் உருவாகும் மற்றொரு ஹார்மோனை எரித்ரோபாய்டின் எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டுகிறது.
• நெப்ரானின் அண்மைச் சுருள் நுண்குழல் சுரக்கும் கால்சிட்ரியால் எனும் ஹார்மோன் செயல்படு நிலையிலுள்ள வைட்டமின் B3 ஆகும்.
• குடலில் இருந்து கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உட்கிரகித்தலை உயர்த்தி எலும்பு உருவாக்கத்தை துரிதப்படுத்துகிறது.
30. இரைப்பை குடற்பாதை ஹார்மோன்களின் பணிகளை விரிவாகக் குறிப்பிடவும்.
• கேஸ்ட்ரின்; கோலிசிஸ்டோகைனின்; செக்ரிட்டின் மற்றும் இரைப்பைத் தடை பெப்டைடு போன்ற ஹார்மோன்களை இரைப்பை குடற்பாதையில் உள்ள சிறப்பு நாளமில்லாச் சுரப்பு செல் தொகுப்பு சுரக்கின்றது.
• கேஸ்ட்ரின் இரைப்பை சுரப்பிகளைத் தூண்டி ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்ஸினோஜனைத் தூண்டுகிறது.
• உணவில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலத்தைப் பொறுத்து முன்சிறுகுடலில் கோலிசிஸ்டோகைனின் சுரக்கின்றது.
• CCK பித்தப்பையின் மீது செயல்பட்டு பித்த நீரை முன்சிறு குடலினுள் வெளியிடுகிறது.
• கணையத்தின் அசினிசெல்கள் மீது செக்ட்ரிடின் செயல்பட்டு நீர் மற்றும் பைகார்பனேட் அயனிகளைச் சுரந்து உணவின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குகின்றது.
• இரைப்பைத் தடைபெப்டைடு (GIP) இரைப்பை சுரப்பையும் அதன் இயக்கத்தையும் தடுக்கின்றது.