Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | எதிர்ப்பொருள் தூண்டிகள், எதிர்ப்பொருள் தூண்டிகளின் வகைகள்

நோய்த்தடைக்காப்பியல் - எதிர்ப்பொருள் தூண்டிகள், எதிர்ப்பொருள் தூண்டிகளின் வகைகள் | 12th Zoology : Chapter 8 : Immunology

   Posted On :  13.05.2022 04:28 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 8 : நோய்த்தடைக்காப்பியல்

எதிர்ப்பொருள் தூண்டிகள், எதிர்ப்பொருள் தூண்டிகளின் வகைகள்

எதிர்பொருள் தூண்டிகள் எனும் சொல்லுக்கு இருவிதமாக பொருள் கொள்ளப்படுகிறது. ஒன்று இவை தடைக்காப்பு துலங்கலை உண்டாக்கும் மூலக்கூறுகளை விளக்குகிறது. மற்றொன்று முன்னர் உருவாகிய எதிர்ப்பொருளுடன் வினைபுரியும் மூலக்கூறுகளைக் குறிக்கிறது.

எதிர்ப்பொருள் தூண்டிகள் (Antigens)

எதிர்பொருள் தூண்டிகள் எனும் சொல்லுக்கு இருவிதமாக பொருள் கொள்ளப்படுகிறது. ஒன்று இவை தடைக்காப்பு துலங்கலை உண்டாக்கும் மூலக்கூறுகளை விளக்குகிறது. மற்றொன்று முன்னர் உருவாகிய எதிர்ப்பொருளுடன் வினைபுரியும் மூலக்கூறுகளைக் குறிக்கிறது. பொதுவாக எதிர்ப்பொருள் தூண்டிகள் என்பவை கண்டுபிடிக்கக் கூடிய தடைக்காப்பு துலங்கல்களை ஏற்படுத்தும் பெரிய சிக்கலான மூலக்கூறுகளாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பொருள் அல்லது T-செல் புற ஏற்பியுடன் வினைபுரியும் ஒரு பொருளே எதிர்ப்பொருள் தூண்டி எனப்படும். மேலும் இச்சொல், தடைகாப்பு தூண்டி (Immunogen) என்பதற்கு இணைபொருட்சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

முதன்மை திசுபொருத்த எதிர்ப்பொருள் தூண்டிகள்  என்பவை செல்களின் புறபரப்பில் காணப்படும் எதிர்பொருள் தூண்டிகளாகும். இவை தடைக்காப்பு துலங்கல்களை தூண்டுவதன் விளைவாக ஒரே இன உயிரிகளுக்கிடையே மாற்றப்படும் உறுப்புகள் நிராகரிக்கப்படுகிறது. (Rejection of Allografts)

தடைக்காப்பு தூண்டி (Immunogen) என்பவை தடைக்காப்பு துலங்கல்களை தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு ஆகும். ஹாப்டென்கள் (Haptens) என்பவை தடைகாப்பு துலங்கலைத் தூண்டாத, ஆனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட எதிர்ப்பொருளுடன் வினைபுரியக்கூடியதாகும்.

எதிர்ப்பொருள் தூண்டிக்கெதிரான தடைக்காப்பு துலங்கல்களை அதிகரிக்க செய்கின்ற வேதிப்பொருள் துணையூக்கிகள் (Adjuvants) எனப்படும். எபிடோப் (Epitope) என்பவை எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதியாகும். மேலும் இது எதிர்ப்பொருள் தூண்டி நிர்ணயக்கூறுகளாகும். பாராடோப் (Paratope) என்பது எதிர்ப்பொருள் தூண்டி பிணையும் பகுதியாகும். எதிர்ப்பொருளின் பகுதியான இது எதிர்ப்பொருள் தூண்டிகளைக் கண்டறிந்து அவற்றுடன் பிணைகின்றன.


எதிர்ப்பொருள் தூண்டிகளின் வகைகள் 

உருவாக்கத்தின் அடிப்படையில் எதிர்பொருள் தூண்டிகளை ‘புறந்தோன்றி எதிர்ப்பொருள் தூண்டிகள்’ மற்றும் ‘அகந்தோன்றி எதிர்ப்பொருள் தூண்டிகள்’ என இருவகையாக பிரிக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?

எதிர்ப்பொருள் உருவாக்கும் திறன் (Antigenicity) என்பது ஒரு எதிர்ப்பொருள் தூண்டி ஒரு குறிப்பிட்ட தடைக்காப்பு துலங்கலால் உருவான எதிர்ப்பொருளுடன் வினைபுரிய அனுமதிக்கும் பண்பாகும்.

நுண்ணுயிரிகள், மகரந்த துகள்கள் மருந்து பொருட்கள் மற்றும் மாசுபடுத்திகள் வெளிச்சூழலில் இருந்து விருந்தோம்பியின் உடலில் நுழைவதால் அவைகள் புறந்தோன்றி எதிர்பொருள் தூண்டிகள் என அழைக்கப்படுகின்றன. தனி உயிரியின் உடலுக்குள்ளே உருவாகும் எதிர்ப்பொருள் தூண்டிகள் அகந்தோன்றி எதிர்பொருள் தூண்டிகளாகும். எ.கா மனித இரத்தவகை எதிர்பொருள் தூண்டிகள்.


Tags : Immunology நோய்த்தடைக்காப்பியல்.
12th Zoology : Chapter 8 : Immunology : Antigens and Types of antigens Immunology in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 8 : நோய்த்தடைக்காப்பியல் : எதிர்ப்பொருள் தூண்டிகள், எதிர்ப்பொருள் தூண்டிகளின் வகைகள் - நோய்த்தடைக்காப்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 8 : நோய்த்தடைக்காப்பியல்