புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் - நோய்த்தடைக்காப்பியல் : வினா விடை | 12th Zoology : Chapter 8 : Immunology
மதிப்பீடு
புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. 30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?
அ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்
ஆ) கிளாஸ்டிரிடியன் டிஃபிசைல்
இ) ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே
ஈ) சால்மோனெல்லா என்ட்ரைடிடிஸ்
விடை : இ)ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே
2. பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம் ----------------
அ) இரத்த சிவப்பணு
ஆ) லியூக்கோசைட்டுகள்
இ) இரைப்பை
ஈ) கல்லீரல்
விடை : ஈ) கல்லீரல்
3. பி.வைவாக்ஸின் ஸ்போரோசோயிட்டுகள் ---------------- ல் உருவாக்கப்பட்டது
அ) கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்)
ஆ) ஸ்போரோபிளாஸ்டுகள்
இ) ஊசிஸ்டுகள்
ஈ) ஸ்போர்கள்
விடை : இ) ஊசிஸ்டுகள்
4. ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ---------------- ஆகும்
அ) மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி
ஆ) மன மருட்சி ஏற்படுத்துபவை
இ) அ மற்றும் ஆ இரண்டும்
ஈ) மைய நரம்பு மண்டல சோர்வூட்டி
விடை : ஈ) மைய நரம்பு மண்டல சோர்வூட்டி
5. சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு
அ) ஆம்ஃபிடமைன்கள் - கிளர்வூட்டி
ஆ) லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு - போதை மருந்து
இ) ஹெராயின் - உளவியல் மருந்து
ஈ) பென்சோடைஅசபைன் - வலி நீக்கி
விடை : அ) ஆம்ஃபிடமைன்கள் - கிளர்வூட்டி
6. மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது
அ) பாக்டீரியா
ஆ) பூஞ்சை
இ) வைரஸ்
ஈ) புரோட்டோசோவா
விடை : ஆ) பூஞ்சை
7. ---------------- அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
அ) அபின்
ஆ) மது
இ) புகையிலை
ஈ) கோகெய்ன்
விடை : ஆ) மது
8. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட் ---------------- ல் காணப்படுகிறது.
அ) நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்
ஆ) மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்
இ) நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்
ஈ) பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்
விடை : அ) நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்
9. பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் கீழ்க்காணும் நிகழ்வுகள் எங்கு நடைபெறுகின்றன?
அ) கருவுறுதல் ----------------
ஆ) இனச்செல் உருவாதல் ----------------
இ) ஸ்போரோசோயிட்டுகள் வெளியேறுதல் ----------------
ஈ) சைஷோகோனி ----------------
விடை :
அ) பெண் கொசுவின் குடலில்,
ஆ) பெண் கொசுவின் உடலினுள் நுழையும் போது,
இ) கொசுவின் உமிழ் நீரிலிருந்து
ஈ) மனிதனின் கல்லீரல் செல்களில்
10. பாரடோப் என்பது
அ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி
ஆ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி
இ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி
ஈ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி
விடை : இ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி
11. ஒவ்வாமையில் தொடர்புடையது
அ) IgE
ஆ)IgG
இ) Ig
ஈ) IgM
விடை : அ)IgE
12. வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் ---------------- என அழைக்கப்படுகிறது.
அ) வேற்றிடப் பரவல்
ஆ) ஆன்கோஜீன்கள்
இ) புரோட்டோ - ஆன்கோஜீன்கள்
ஈ) மாலிக்னன்ட் நியோப்ளாசம்
விடை : அ)வேற்றிடப் பரவல்
13. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது
அ) ஒற்றை இழை ஆர்.என்.ஏ
ஆ) இரட்டை இழை ஆர்.என்.ஏ
இ) ஒற்றை இழை டி.என்.ஏ
ஈ) இரட்டை இழை டி.என்.ஏ
விடை : அ)ஒற்றை இழை ஆர்.என்.ஏ
14. எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?
அ) நினைவாற்றல் செல்கள்
ஆ) பேசா பில்கள்
இ) பிளாஸ்மா செல்கள்
ஈ) கொல்லி செல்கள்
விடை : இ) பிளாஸ்மா செல்கள்
15. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மனித உறுப்புகளில் ஒரு முதல்நிலை மற்றும் ஒரு இரண்டாம் நிலை நிணநீர் உறுப்பை அடையாளம் கண்டு அதன் பங்கினை விளக்கு.
அ) கல்லீரல்
ஆ)தைமஸ்
இ) தைராய்டு
ஈ) டான்சில்
விடை :
முதல் நிலை நிணநீர் உறுப்பு தைமஸ்
* லிம்போசைட்களின் முதிர்ச்சிக்கு தேவையான சூழலை வழங்குகிறது.
* இது T - செல்களைத் தூண்டி அவற்றை முதிர்ச்சியடையச் செய்கிறது.
* T - செல்கள் தடைகாப்பு திறன் பெற்ற செல்களாக மாற்றுகின்றன.
இரண்டாம் நிலை நிணநீர் உறுப்பு - டான்சில்
* அவை நோய் கிருமிகளை எதிர்த்து அதை அழிக்க உதவுகிறது.
* பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற கிருமிகளின் தொற்றை எதிர்க்கிறது.
16. மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்கு
* மேக்ரோஃபேஜ்கள் செல்விழங்குதல் சார்ந்த இயல்பு நோய்த்தடைகாப்பில் காணப்படுகிறது.
* இவை நுண்ணுயிரிகளை முழுமையாக விழுங்கி அவற்றை செரிக்கிறது.
* இவை பெரியதாகவும் ஒழுங்கற்ற முறையில் காணப்படும்.
* மோனோசைட்டுகள் தான் மேக்ரோஃபேஜ்களாக காணப்படுகிறது.
* இந்த மேக்ரோஃபேஜ்களில் - பாக்டீரியாலைட்டிக் நொதிகள் மற்றும் தனிச்சையான ராடிக்ள்ஸ் காணப்படுகிறது. இவை நுண்கிருமிகளை அழிக்கும் திறன் உடையது.
17. இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன? அதன் பங்கினை கூறுக.
* இன்டர்ஃபெரான்கள் வைரஸ் எதிர்ப்பு புரத கிருமி நாசினியாகும். இது வைரஸால் தாக்கப்பட்ட செல் சுரக்கிறது.
* இது தொற்றில்லா செல்களில் வைரஸ் எதிர்ப்பை தூண்டுகின்றன.
* இது கிளைக்கோ புரத மூலக்கூறாகும்.
* லியூக்கோசைட்களும், ஃபைட்ரோபிளாஸ்ட்களாலும் சுரக்கப்படுகிறது.
18. வீக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் வேதிய எச்சரிக்கை சமிக்ஞைகளை பட்டியலிடுக.
1. செரோடோனின்
2. ஹிஸ்டமைன்
3. புரோஸ்டோகிளான்டின்
4. இவை சிதைந்த மாஸ்ட் திசுக்களால் சுரக்கப்படுகிறது.
19. மனித உடலில் நுழைந்த பிறகு, ரெட்ரோவைரஸ் இரட்டிப்படையும் செயல்முறையை விளக்குக.
* ஒரு மனிதனின் உடலில் நுழைந்த பிறகு எச்.ஐ.வி மேக்ரோபேஜ் செல்களில் நுழைகிறது.
* தன்னுடைய ஆர்.என்.ஏ மரபணுத் தொகுதியை ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியின் உதவியால் வைரஸின் டி.என்.ஏ வாக மாற்றிக் கொள்கிறது.
* இந்த வைரஸ் டி.என்.ஏ விருந்தோம்பி செல்களின் டி.என்.ஏவுடன் இணைந்து வைரஸ் துகள்களை உற்பத்தி செய்கிறது.
* இவ்வாறு மேக்ரோஃபேஜ்கள் தொடர்ச்சியாக வைரஸ்களை உற்பத்தி செய்வதன் மூலம் அவை எச்.ஐ.வி தொழிற்சாலையாக செயல்படுகின்றன.
* அதே நேரத்தில் உதவி T- லிம்போசைட்டுக்களினுள் நுழைந்த எச்.ஐ.வி பெருகி சந்ததி வைரஸ்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.
* இவ்வாறாக வெளி வந்த சந்ததி வைரஸ்கள் இரத்தத்தின் மற்ற உதவி T. செல்களையும் தாக்குகின்றன.
20. இம்யுனோகுளோபுலின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்கு.
* இம்புனோகுளோபுலின் நான்கு பாலிபெப்டைடு சங்கிலிகளை கொண்டதாகும்.
* அவற்றில் ஒத்த அமைப்புடைய நீளம் குறைவான சுங்கிலிகளும் மற்றும் நீளம் அதிகமான இரண்டு கனமான சங்கலிகளும் உண்டு.
* இலகுவான சங்கிலிகளின் மூலக்கூறு எடை ஏறத்தாழ 25,000 டால்டன் மற்றும் ஏறத்தாழ 214 அமினோ அமிலம் கொண்டது.
* கனமான சங்கிலிகளின் மூலக்கூறு எடை ஏறத்தாழ 50,000 டால்டன் மற்றும் ஏறத்தாழ 450 அமினோ அமிலம் கொண்டதாகும்.
* ஒவ்வொரு இலகுவான் சங்கிலி ஒரு கனமான சங்கிலியுடனும் அதே நேரத்தில் இரண்டு கனமான சங்கிலியும் ஒன்றுடன் ஒன்று டை-சல்பைடு பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளன.
* ஏறத்தாழ நடுப்பகுதியில், அசையும் கீல் அமைப்பினை கன சங்கிலிகள் பெற்றுள்ளன.
* ஒவ்வொரு சங்கிலியும் இரு முனைகள் கொண்டுள்ளன அவை C - முனை மற்றும் N - முனை.
* ஒரு இம்யுனோகுளோபுலினில் இரண்டு பகுதிகள் உண்டு N - முனையில் - மாறுபடும் பகுதி (V-region) C - முனையில் - நிலையான பகுதி (C-region) காணப்படுகிறது.
21. இயல்பு நோய்த்தடைகாப்பு மண்டலத்தில் ஈடுபட்டுள்ள செல்கள் எவை?
* இயல்பு நோய்த்தடைகாப்பு மண்டலத்தில் ஈடுபட்டுள்ள செல்கள்
- லியூக்கோசைட்டுகள் - நியூட்ரோபிலிகள், மோனோசைட்டுகள்.
- மேக்ரோஃபேஜ்கள்
- சேதமடைந்த திசுக்கள்
- இயற்கைக் கொல்லி செல்கள்
22. தடுப்பு மருந்துகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
* இது அந்த நோய்க்கிருமிகள் ஒத்த பலவீனமாக்கப்பட்ட அல்லது செயலாக்கமிழந்த அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியாகவோ அல்லது அவற்றின் நச்சுப்பொருள்களாகவோ அல்லது அதன் புறப்பரப்பு புரதமாகவோ இருக்கலாம்.
* தடுப்பு மருந்துகளின் வகைகள்
முதல் தலைமுறை தடுப்பு மருந்து
- வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து எ.கா. MMR
- கொல்லப்பட்ட தடுப்பு மருந்துகள் - எ.கா. - சாலக்போலியோ
- நச்சு அல்லது வேதிப்பொருள் தடுப்பு மருந்துகள் எ.கா. - DPT
இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்து
- நோயூக்கிகளின் புறப்பரப்பு எதிர்ப்பொருள் தூண்டிகளைக் கொண்டவையாகும்.
எ.கா. கல்லீரல் அழற்சி, ஃ தடுப்பு மருந்து.
மூன்றாம் தலைமுறை தடுப்பு மருந்து
- செயற்கையாக தயாரிக்கப்பட்ட தூய்மையான ஆற்றல் மிக்க தடுப்பு மருந்துகளாகும். எ.கா. மறுசேர்க்கை தடுப்பு மருந்து ஆகும்.
23. எச்.ஐ.வியால் தொற்றிய ஒரு நபருக்கு எய்ட்ஸ் உள்ளதா? என்பதை எவ்வாறு கண்டறிவாய்?
எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய எளிய இரத்த பரிசோதனை முறைகள் உள்ளன.
- எலிசா சோதனை - இது முதல்நிலை சோதனை ஆகும்.
- வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை - உறுதிபடுத்தும் சோதனையாகும்.
- எச்.ஐ.வி 1 - நியூக்ளிக் அமிலம் சோதனையாகும்.
- ஆர்.என்.ஏ சோதனை - இது விலை உயர்ந்தது.
- PCR சோதனை - எச்.ஐ.வி யின் ஆர்.என். ஏ சோதனையாகும்.
24. சுயதடைகாப்பு நோய் என்பது திசை மாற்றப்பட்ட தடைகாப்பு துலங்குலாகும் - நியாயப்படுத்துக.
* சுய தடை காப்பு குறைபாடு என்பது இலக்கு தவறிய தடைகாப்பு துலங்குகலாகும்.
* இது சுய மற்றும் அயல் மூலக்கூறுகளை பிரித்தறிய இயலாத தன்மையினால் ஏற்படுவதாகும்.
* நமது உடலில் சுய எதிர்ப்பொருட்களையும் மற்றும் செல்நச்சாக்க T செல்களையும் உற்பத்தி செய்து நமது திசுக்களை அழிக்கின்றன.
* இதுவே சுய தடைக் காப்பு நோய் எனப்படும்.
* இது இரு வகைப்படும்
- உறுப்பு சார்ந்த சுயதடைக்காப்பு நோய்
எ.கா அடிசன் நோய் கிரேவின் நோய்
- உறுப்பு சாரா சுயதடைக்காப்பு நோய்
எ.கா ரூமாட்டிக் மூட்டுவலி தண்டுவட மரப்பு நோய்
25. ஒரு நோயாளி காய்ச்சல் மற்றும் குளிருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மீரோசோயிட்டுகள் அவரது இரத்தத்தில் காணப்பட்டன. உன்னுடைய கண்டறிதல் என்ன?
* நோயாளியின் இரத்த மாதிரியை எடுத்து சோதித்தால், அதில் மீரோசோயீட்டுகள் காணப்படும் பட்சத்தில் அது மலேரியா என உறுதிப்படுத்தப்படுகிறது.
* மலேரியா நோய்க்கான அறிகுறிகள் - மலேரியா வலிப்பு, அதிகப்படியான காய்ச்சல் மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட குயினைன் மருந்து மலேரியாவை கட்டுப்படுத்த உதவுகிறது.
* சின்கோனா மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட குயினைன் மருந்து மலேரியாவை கட்டுப்படுத்த உதவுகிறது.
* மற்றும் கொசுக்களின் இளம்வுயிரிகளை உண்ணும் கம்பூசியா போன்ற மீன்களை வளர்க்கலாம்.
- கதவு மற்றும் ஜன்னல்களில் கொசு வலை அடிக்கலாம்.
26. அ) யானைக்கால் நோயை ஏற்படுத்தும் யானைக்கால் புழுவின் அறிவியல் பெயரை எழுதுக.
ஆ) யானைக்கால் நோயின் அறிகுறிகளை எழுதுக.
இ)இந்த நோய் எவ்வாறு பரவுகிறது.
விடை :
அ) உச்சரீரியா பான்கிராஃப்டி என்ற ஒட்டுண்ணிதான் யானைக்கால் நோயை ஏற்படுத்துகிறது.
ஆ) புழுக்களின் திரட்சியால் நிணநீர் மண்டலத்தில் ஏற்படும் அடைப்பு நிணநீர் முடிச்சுகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
அ) இந்த நோய் பெண் கியுலக்ஸ் கொசுவின் மூலம் பரவுகிறது.
27. போதை மருந்துகள் மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை வரிசைப்படுத்துக.
போதை மருந்துகள் மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விலகும்போது ஏற்படும் விலகல் அறிகுறிகள்
1. லேசான நடுக்கம் முதல் வலிப்புவரை
2. கடுமையான கிளர்ச்சி
3. மன அழுத்த உணர்வு
4. கவலை, பதட்டம், படபடப்பு
5. எரிச்சல், தூக்கமின்மை
6. தொண்டை வறட்சி
28. ‘சாதாரண சளிக்கு' எதிராக தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாதது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
* சாதாரண சளிக்கு எதிராக தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாது.
* ஏனென்றால் ஏறத்தாழ 200 வகையான வைரஸ்கள் சாதாரண சளிக்கு காரணமாக இருக்கின்றன.
* அதனால் எல்லா வகையான வைரஸ்க்கும் நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது சிரமம்.
29. தொண்டை அடைப்பான் மற்றும் டைஃபாய்டு ஆகியவற்றின் நோய்க்காரணிகள், பரவும் முறை மற்றும் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
தொண்டை அடைப்பான்:
நோய்க்காரணி : சையனோ பாக்டீரியம் டிபதிரியா
* பரவும் முறை - கேழைத்துளிகள் மூலம்.
* அறிகுறி - காய்ச்சல், தொண்டையில் புண் மூச்சுவிட சிரம்படல். டைஃபாய்டு:
* நோய்க் காரணி - சால்மோனெல்லா டைஃபி
* பரவும் முறை - மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர் வழியாக
* அறிகுறி - தலைவலி, அசௌகரியமான வயிறு, காய்ச்சல் மற்றும் வயிற்றுபோக்கு.