அறிமுகம் - புவியியல் - வளிமண்டலம் | 11th Geography : Chapter 6 : Atmosphere

11 வது புவியியல் : அலகு 6 : வளிமண்டலம்

வளிமண்டலம்

ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வளிமண்டலக் கூறுகளான வெப்பநிலை, அழுத்தம், காற்று, ஈரப்பதம், மேகம் மற்றும் மழைப்பொழிவு போன்றவற்றில் ஏற்படும் குறுகியகால மாற்றங்களை வானிலை என்கிறோம்.

வளிமண்டலம்

அத்தியாயக் கட்டகம்

6.1 அறிமுகம்

6.2 வளிமண்டலத்தின் கலவை

6.3 வெப்பநிலை மற்றும் வெப்பச்சமநிலை

6.4 வளிமண்டல அழுத்தம் மற்றும் காற்று

6.5 ஈரப்பதம், நீர் சுருங்குதல் மற்றும் மேகங்கள்

6.6 மழைப்பொழிவு

6.7 வளிமண்டல இடையூறுகள் (சூறாவளி மற்றும் எதிர் சூறாவளி)

 

அறிமுகம் 

"செம்மறி ஆடுகள் ஒன்றாக கூடி வாலாட்டி

நின்றால் நாளை மழை வரும்"

"எறும்புகள் கூட்டமாக நேர்க்கோட்டில்

சென்றால் மழையை எதிர்பார்க்கலாம்" என

கிராமப்புறங்களில் சொல்வதை நீங்கள்

கேட்டிருப்பீர்கள்.

குளிர்கிறது'; 'வெய்யில் அடிக்கிறது'; 'மேகம்

கருக்குது'; 'மழை பெய்கிறது'

 

போன்ற சொற்றொடர்கள் வானிலையைக் குறிக்கின்றன.

 

கற்றல் நோக்கங்கள்

வளிமண்டலக் கலவை மற்றும் வளிமண்டல அடுக்குகளின் தன்மையைப் புரிந்துகொள்ளுதல்.

வளிமண்டல செங்குத்து மற்றும் கிடைமட்ட வெப்பநிலைப் பரவலைப் புரிந்துகொள்ளுதல்.

உலகில் உருவாகும் பல்வேறு வகையான காற்று அமைப்புகளைப் பற்றி விளக்குதல்.

மழைப்பொழிவின் வடிவம் மற்றும் வகைகளைக் கண்டறிதல்.


ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வளிமண்டலக் கூறுகளான வெப்பநிலை, அழுத்தம், காற்று, ஈரப்பதம், மேகம் மற்றும் மழைப்பொழிவு போன்றவற்றில் ஏற்படும் குறுகியகால மாற்றங்களை வானிலை என்கிறோம். வானிலையானது நிலையற்றது. வானிலை இடத்திற்கு இடம், நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம் பெரிதும் மாறுபடுகிறது.

மாறாக, காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட காலத்திற்கான வானிலையின் சராசரி ஆகும். உலக வானிலையியல் அமைப்பு (IWMO) காலநிலை சராசரியைக் கணக்கிட தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கான பல்வேறுபட்ட வானிலைக் கூறுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. காலநிலைநிரந்தரமானது. இது ஒரு இடத்தின் நிலையான சூழலைக் குறிக்கிறது.

காலநிலை (Climate) என்ற சொல் 'க்ளைமா' (Clima) என்ற பண்டைய கிரேக்க சொல்லிலிருந்து வந்தது. க்ளைமா (Clima) என்றால் சரிவு அல்லது சாய்வு என்று பொருள்படும். புவியானது க்ளைமேட்டா (Climata) என்று அழைக்கப்படும் ஏழு அட்சரேகைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சராசரி வானிலையைக் குறிக்கும் க்ளைமேட்டா (Climata) என்ற சொல் நவீன ஐரோப்பிய மொழியில் 'கிளைம்' அல்லது 'கிளைமேட்' (Climate) என வழக்கத்திற்கு வந்தது.




Tags : Introduction | Geography அறிமுகம் - புவியியல்.
11th Geography : Chapter 6 : Atmosphere : Atmosphere Introduction | Geography in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 6 : வளிமண்டலம் : வளிமண்டலம் - அறிமுகம் - புவியியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 6 : வளிமண்டலம்