புவியியல் - கலைச்சொற்கள் - புவியியல் நீர்க்கோளம் | 11th Geography : Chapter 5 : Hydrosphere
கலைச்சொற்கள்
1.
ஆழ்கடல் சமவெளி (Abyssal plain): மிக அகன்ற தட்டையான
பெருங்கடலின் ஆழமான தரைப்பகுதி.
2. கண்ட எழுச்சி (Continental
Rise): கண்ட
சரிவிற்கும், ஆழ்கடல் சமவெளிக்கும் இடைப்பட்ட பகுதி.
3. தனித்த பொருளாதார மண்டலம் (Exclusive
Economic Zone): கடற்கரையின்
அடிப்படை எல்லைக் கோட்டிலிருந்து 200 கடல் மைல் (370.4
கி.மீ
) தூரம் வரை காணப்படும் பகுதி.
4. நிலசந்தி (Isthmus): இரண்டு பெரிய நிலப்பகுதியை
இணைக்கக் கூடிய குறுகிய நிலப்பகுதி.
5.
ஹாட் ஸ்பாட் (Hot Spot): கவசப் பகுதியிலிருந்து பாறைகள் உருகி மாக்மா மேலெழும்பி வெளிவரும்
புவியின் மேற்பரப்பு.
6. நிரந்தர பனித்தளம் (Permafrost):
புவிப்பரப்பின் மீது தொடர்ச்சியாக
இரண்டாண்டுகளுக்கு மேல் பனி உறைந்து காணப்படும்
நிலை.
7. சுவடு கூறுகள் (Trace
Elements): ஒரு குறிப்பிட்ட மாதிரியில்
அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையில் காணப்படும் வேதியல் கூறுகளின் மிகக் குறைவான
அளவு.
8. சம உவர்ப்பிய கோடு (Isohaline): ஒரே அளவு
உவர்ப்பியத்தை கொண்டுள்ள இடங்களை
இணைக்கும் கற்பனைக் கோடு.
9. பெருகு அலை (Swell): காற்றினால் உந்தப்பட்டு உருவாகும் அலை.
இது தலக்காற்றுகளால்
பாதிக்கப்படுவது இல்லை.
10. நீர்த்தேக்கம் (Reservoir)
: நீர்
அளிப்பின் ஆதராமாக
விளங்கும் ஒரு பெரிய ஏரி