இயற்பியல் பண்புகள், வேதியியல் பண்புகள்,அமிலங்களின் பயன்கள் - காரங்கள் | 8th Science : Chapter 14 : Acids and Bases

   Posted On :  29.07.2023 08:35 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள்

காரங்கள்

குளிப்பதற்கும், துணிகளைத் துவைப்பதற்கும் நாம் சோப்புகளைப் பயன்படுத்துகிறோம். இவை வழவழப்புத் தன்மை உடையவை. ஏன் என்று சோப்புகளின் வழவழப்புத் தன்மைக்குக் காரணம் அவற்றிலுள்ள காரங்கள் ஆகும்.

காரங்கள்

குளிப்பதற்கும், துணிகளைத் துவைப்பதற்கும் நாம் சோப்புகளைப் பயன்படுத்துகிறோம். இவை வழவழப்புத் தன்மை உடையவை. ஏன் என்று சோப்புகளின் வழவழப்புத் தன்மைக்குக் காரணம் அவற்றிலுள்ள காரங்கள் ஆகும். இவை தோலில் பட்டால் அரிக்கும் தன்மையையும், கசப்புச் சுவையையும் கொண்டவை. பலவகையான வெளுப்பான்கள், சோப்புகள், சலவை சோப்புகள், பற்பசைகள் மற்றும் பல பொருள்கள் காரங்களைக் கொண்டுள்ளன. அமிலங்கள் நீரில் கரைந்து ஹைட்ரஜன் அயனிகளைத் தருகின்றன. இதற்கு மாறாக, காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருகின்றன.

எனவே, நீரில் ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரவல்ல வேதிப்பொருள்கள் பொதுவாக காரங்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH),


நீரில் கரையும் காரங்கள் அல்கலிகள் என்று அழைக்கப்படுகின்றன. சோடியம் ஹைட்ராக்சைடு பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் ஹைட்ராக்சைடு மற்றும் அம்மோனியம் ஹைட்ராக்சைடு போன்ற காரங்கள் நீரில் அதிக அளவு கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருகின்றன. எனவே, இவை அல்கலிகள் அழைக்கப்படுகின்றன. சில வேதிச்சேர்மங்களை நீரில் கரைக்கும் பொழுது ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருவதில்லை. ஆனால், அவையும் காரங்களாகும். எடுத்துக்காட்டு: சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட், கால்சியம் கார்பனேட் போன்றவை.


செயல்பாடு 3

கீழ்கண்ட பொருள்களை வகைப்படுத்துக. சோடியம் ஆக்சைடு. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் ஹைட்ராக்சைடு, அம்மோனியம் ஹைட்ராக்சைம். பெர்ரிக் ஹைட்ராக்சைடு, ஜிங்க் ஆக்சைடு. சோடியம்  கார்பனேட் (Ne_Co.) சலவைசோடா எனவும்,  பைகார்பனேட் (NaHCo) சமையல் சோடா எனவும், சோடியம் ஹைட்ராக்சைடு (Na0H காஸ்டிக் சோடா எனவும், பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KoH) காஸ்டிக் பொட்டாஷ் எனவும் வணிக ரீதியாக அழைக்கப்படுகின்றன.


 

1. காரங்களின் பண்புகள்

அ. இயற்பியல் பண்புகள்

.காரங்கள் பொதுவாக திண்ம நிலையில் காணப்படுகின்றன. ஒரு சில காரங்கள் திரவ நிலையிலும் உள்ளன. எ.கா. அம்மோனியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் ஹைட்ராக்சைடு.

.• திரவ ஊடகத்தில் உள்ளபோது காரங்கள் வழவழப்புத் தன்மையுடன் உள்ளன.

• காரங்கள் கசப்புத் தன்மை கொண்டவை.

• காரங்கள் அரிக்கும் தன்மை கொண்டவை. இவை தோல்களின் மீது அடிக்கடி படும்போது வலிமிதந்த கொப்பளங்களை ஏற்படுத்துகின்றன.

• காரங்கள் நிறமற்றவை.

• காரங்கள், நிறங்காட்டிகளின் நிறத்தை மாற்றுகின்றன. சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாகவும், மெத்தில் ஆரஞ்சு கரைசலை மஞ்சளாகவும், பினால்ப்தலீன் கரைசலை இளஞ்சிவப்பு (பிங்கி நிறமாகவும் மாற்றுகின்றன.

• காரங்களின் நீர்க் கரைசல் மின்சாரத்தைக் கடத்துகிறது.


ஆ. வேதியியல் பண்புகள்


i. உலோகங்களுடன் வினை

பொதுவாக காரங்கள் உலோகங்களுடன் வினைபுரிவதில்லை. அலுமினியம் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்கள் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் அலுமினேட்டையும் ஹைட்ரஜன் வாயுவையும் தருகின்றன.

அலுமினியம் + சோடியம் ஹைட்ராக்சைடு + நீர் சோடியம் அலுமினேட் + ஹைட்ரஜன் 2AI + 2NaOH + 2H2O 2NaAlO2 + 3H2

ii. அலோக ஆக்சைடுகளுடன் வினை

அனைத்துக் காரங்களும் அலோக ஆக்சைடுகளுடன் வினை புரிந்து உப்பு மற்றும் நீரைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, சோடியம் ஹைட்ராக்சைடு கார்பன் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் கார்பனேட்டைக் கொடுக்கிறது.


iii. அம்மோனிய உப்புகளுடன் வினை

காரங்கள் அம்மோனிய உப்புகளுடன் வினைபுரிந்து உலோக உப்புகள், அம்மோனியா வாயு மற்றும் நீரைத் தருகின்றன.

சோடியம் ஹைட்ராக்சைடு + அம்மோனியம் குளோரைடு -> சோடியம் குளோரைடு + அம்மோனியா வாயு + நீர்

NH4Cl + NaOH NaCl + NH3 + H2

அமிலங்களும், காரங்களும் ஒருசில் தனித்தன்மையான பண்புகளைப் பெற்றிருந்தாலும் சில பண்புகளில் அவை ஒத்துக்காணப்படுகின்றன அவை கீழே தரப்பட்டுள்ளன.

.• இவை இயற்கையில் அரிக்கும் தன்மை கொண்டவை.

• இவை நீர்க்கரைசலில் அயனியாக்கத்திற்கு உட்படுகின்றன.

• இவை நீர்க்கரைசலில் மின்சாரத்தைக் கடத்துகின்றன.

• இவை நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுகின்றன.

அமிலங்கள் மற்றும் காரங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் சில அட்டவணை 14.3 ல் கொடுக்கப்பட்டுள்ளன.


 

2. காரங்களின் பயன்கள்

i) குளியல் சோப்புகள் தயாரிக்க பொட்டாசியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.

ii) சலவை சோப்புகள் தயாரிக்க சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.

ii) காகிதத் தொழிற்சாலை மற்றும் ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும், மருந்துகள் தயாரிக்கவும் சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.

iv) வெள்ளை அடிக்க கால்சியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.

v) வயிற்றில் உருவாகும் அமிலத்தன்மையை நடுநிலையாக்க அலுமினியம் ஹைட்ராக்சைடு மற்றும் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு போன்ற காரங்கள் பயன்படுகின்றன.

vi) உரங்கள், நைலான்கள், நெகிழிகள் மற்றும் இரப்பர்கள் தயாரிக்க அம்மோனியம் ஹைட்ராக்சைடு பயன்படுகின்றது.


Tags : Physical properties, Chemical properties, Uses of Acids இயற்பியல் பண்புகள், வேதியியல் பண்புகள்,அமிலங்களின் பயன்கள்.
8th Science : Chapter 14 : Acids and Bases : Bases Physical properties, Chemical properties, Uses of Acids in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள் : காரங்கள் - இயற்பியல் பண்புகள், வேதியியல் பண்புகள்,அமிலங்களின் பயன்கள் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள்