இயற்கை நிறங்காட்டி செயற்கை நிறங்காட்டி | அலகு 14 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நிறங்காட்டி | 8th Science : Chapter 14 : Acids and Bases

   Posted On :  29.07.2023 08:36 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள்

நிறங்காட்டி

நிறங்காட்டி அல்லது அமில - கார நிறங்காட்டி என்பது ஒரு வேதிப் பொருளாகும். ஒரு வேதிப்பொருள் அமிலத்தன்மை உடையதா அல்லது காரத்தன்மை உடையதா என்பதை பொருத்தமான இது நிறமாற்றத்தின் அடிப்படையில் இது குறிக்கிறது. இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ இருக்கலாம். 1. இயற்கை நிறங்காட்டி 2. செயற்கை நிறங்காட்டி

நிறங்காட்டி

நிறங்காட்டி அல்லது அமில - கார நிறங்காட்டி என்பது ஒரு வேதிப் பொருளாகும். ஒரு வேதிப்பொருள் அமிலத்தன்மை உடையதா அல்லது காரத்தன்மை உடையதா என்பதை பொருத்தமான இது நிறமாற்றத்தின் அடிப்படையில் இது குறிக்கிறது. இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ இருக்கலாம்.


1. இயற்கை நிறங்காட்டி

இயற்கை நிறங்காட்டி என்பது இயற்கை மூலத்திலிருந்து பெறப்படும் வேதிப்பொருள் ஆகும். லிட்மஸ், மஞ்சள் சாறு, செம்பருத்திப் பூ மற்றும் பீட்ரூட் சாறு ஆகியவை இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படும் இயற்கை நிறங்காட்டிகளாகும்.


மஞ்சள் நிறங்காட்டி

மஞ்சள் தூளில் சிறிதளவு நீரைச் சேர்த்து மஞ்சள் தூள் பசை தயாரிக்கப்படுகிறது. இது மை உறிஞ்சும் தாள் அல்லது வடிதாளின் மீது பூசப்பட்டு உலர்த்தப்படுகிறது. ஒரு கரைசலின் அமில மற்றும் காரத் தன்மையைக் கண்டறிய மஞ்சள் தூள் நிறங்காட்டி பயன்படுகிறது. அமிலக் கரைசலில் மஞ்சள் நிறங்காட்டி எந்த ஒரு குறிப்பிடத்தக்க நிற மாற்றத்தையும் தராது. அது மஞ்சளாகவே இருக்கும். ஆனால்,காரக்கரைசலில் அது மஞ்சள் நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறுகிறது.



செயல்பாடு 4

மஞ்சள் கரைபடிந்த ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக்கொள். வீட்டில் பயன்படுத்தும் சலவை சோப்பைக் கொண்டு துணியைத் துவைக்கவும். நிறத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? ஏன் இந்த மாற்றம் ஏற்படுகிறது?


செம்பருத்திப்பூ நிறங்காட்டி

வெந்நீரில் சில செம்பருத்திப் பூ இதழ்களைப் போட்டு 5 முதல் 10 நிமிடம் வரை ஊறவைக்கவும். இது ஒரு கரைசலை உருவாக்கும். இக்கரைசலை வடிகட்டி, நிறங்காட்டியாகப் பயன்படுத்தலாம். இந்த நிறங்காட்டியை அமிலக்கரைசலில் சேர்க்கும் போது இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தையும், காரக்கரைசலில் சேர்க்கும் போது பச்சை நிறத்தையும் அது தருகிறது.


பீட்ரூட் சாறு நிறங்காட்டி

நாம் உண்ணும் பீட்ரூட்டிலிருந்து சாற்றை எடுத்து நிறங்காட்டியாகப் பயன்படுத்தலாம். ஒரு கரைசலானது அமிலமா அல்லது காரமா என்பதை அடையாளம் காண இது பயன்படுகிறது.


செயல்பாடு 5

சிறிய பீட்ரூட் ஒன்றை எடுத்துக்கொண்டு அதை சிறு துண்டுகளாக வெட்டவும். அவற்றை சூடான நீரில் கொதிக்க வைத்து சாற்றை வடிகட்டவும். பின்னர் இரண்டு சோதனைக் குழாய்களை எடுத்துக்கொண்டு ஒரு சோதனைக்குழாயில் சோடியம் ஹைட்ராக் கரைசலையும் மற்றொரு சோதனைக்குழாயில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறையும் எடுத்துக் கொள்ளவும். இந்த இரண்டு ஆய்வுக் குழாய்களிலும் பீட்ரூட் சாறினை சிறிதளவு சேர்க்கவும். நிகழும் நிறமாற்றத்தை கூர்ந்து கவனிக்கவும். இதிலிருந்து நீங்கள் என்ன அறிகிறீர்கள்?


லிட்மஸ் நிறங்காட்டி

லிட்மஸ் தாள் பொதுவாக ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் ஒரு அமில - கார நிறங்காட்டி ஆகும். லிட்மஸ் என்பது ஒரு இயற்கையான நிறங்காட்டி. இது லைக்கன்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது கரைசல் வடிவிலோ அல்லது லிட்மஸ் கரைசலை உறிஞ்சிவதன் மூலம் தயாரிக்கப்பட்ட வடிதாள் வடிவிலோ கிடைக்கின்றது. இந்தத் தாள் சிவப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கும். நீல லிட்மஸ் தாள் அமிலக் கரைசலில் சிவப்பு நிறமாகவும், சிவப்பு லிட்மஸ் தாள் காரக் கரைசலில் நீல நிறமாகவும் மாறும்.




2.  செயற்கை நிறங்காட்டி

செயற்கையான பொருள்களிலிருது தயாரிக்கப்பட்ட நிறங்காட்டி செயற்கை நிறங்காட்டி என் அழைக்கப்படுகிறது. பினாப்தலீன் மற்றும் மெத்தில் ஆரஞ்சு ஆகியவை நிறங்காட்டிகளுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.

பினாப்தலீன்

பினாப்தலீன் ஒரு நிறமற்ற சேர்மம். பினாப்தலீனுடன் ஆல்கஹால் கலந்த கரைசல் நிறங்காட்டியாகப் அமிலக்கரைசலில் பயன்படுகிறது. நிறமற்றதாகவும், இது காரக் கரைசலில் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறும்.

மெத்தில் ஆரஞ்சு

சூடான நீரில் திட நிலையிலுள்ள மெத்தில் ஆரஞ்சு கரைக்கப்பட்டு வடிகட்டி நிறங்காட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அமிலக்கரைசலில் சிவப்பு நிறமாகவும், காரக் கரைசலில் மஞ்சளாகவும் நிறமாற்றம் அடைகிறது.

அமில மற்றும் கார ஊடகத்தில் வெவ்வேறு வகையான நிறங்காட்டிகள் அடையும் நிறமாற்றம் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


Tags : Natural and Synthetic indicators | Acids and Bases | Chapter 14 | 8th Science இயற்கை நிறங்காட்டி செயற்கை நிறங்காட்டி | அலகு 14 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 14 : Acids and Bases : Indicators Natural and Synthetic indicators | Acids and Bases | Chapter 14 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள் : நிறங்காட்டி - இயற்கை நிறங்காட்டி செயற்கை நிறங்காட்டி | அலகு 14 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள்