வகைப்பாட்டியலின் அடிப்படைகள் | இரண்டாம் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - இருசொற் பெயரிடுதல் | 7th Science : Term 2 Unit 5 : Basis of Classification
இருசொற் பெயரிடுதல்
கான்பார்டுபாஹின், 1623 ஆம் ஆண்டு உயிரினங்களை - இரண்டு சொல் கொண்ட Ge பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தினார். இதற்கு இரு சொல் பொரிடும் முறை என்று பெயர். இதனை 1753 ஆம் ஆண்டு கரோலல் வின்னேயஸ் என்பவர் செயல்படுத்தினார். இவரே “நவீன வகைப்பாட்டியலின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
இரு சொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு உகை காவில் பெயரிடும் முறை ஆகும். இந்த முறைப்படி ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரினப் பெயரும், இரண்டாவதாக சிற்றினப் பெயருமாக இரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். ஆங்கிலத்தில் எழுதும் போது பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்திலும், சிற்றினப் பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்திலும் எழுதப்பட வேண்டும். உதாரணம் : வெங்காயத்தின் இரு சொல் பெயர் அல்லியம்சட்டைவம். அல்லியம் - பேரினப் பெயர் சட்டைவம் - சிற்றினப் பெயர் ஆகும்.
வட்டார மொழிப் பெயர் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அறியப்படும் ஒரு உள்ளூர் பெயராகும்.
இரு சொற் பெயர் என்பது என்றும் மாறாத ஒரு உலகளாவிய பெயர் ஆகும். அறிவியல் அறிஞர்கள் புதிய உயிரினங்களை இனம் கண்டு, அதனைக் குறிப்பிட்ட படிநிலையில் வைப்பதற்கு இரு சொல் பெயரிடும் முறையும் வகைப்படுத்துதலும் உதவுகிறது.
செயல்பாடு : 4
உங்கள் அருகில் உள்ள உயிரியல் பூங்காவை பார்வையிடவும் அங்குள்ள வெவ்வேறு விதமான தாவரங்களையும், விலங்குகளையும் மாணவர்கள் கண்டறியச் செய்யுங்கள். அங்கு விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் அறிவியல் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். - அவற்றைக் குறித்துக் கொண்டு வந்து உங்கள் வகுப்பு மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.