வகைப்பாட்டியலின் அடிப்படைகள் | இரண்டாம் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 7th Science : Term 2 Unit 5 : Basis of Classification
நினைவில் கொள்க
❖ வகைப்பாட்டியல் என்பது உயிரினங்களின் பண்புகள், ஒற்றுமை, மற்றும் வேற்றுமை ஆகியவற்றை கொண்டுள்ளது.
❖ உயிரினங்களை அடையாளம் காண்பதற்கும் அறிவதற்கும் வகைப்பாட்டியல் தேவைப்படுகிறது.
❖ வகைப்பாட்டியலில் பேருலகம் பெரும் பிரிவாகவும், சிற்றினம் அடிப்படை அலகாகவும் கருதப்படுகிறது.
❖ விலங்குலகம் மேலும் இரண்டு துணை உலகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
❖ முதுகெலும்பற்றவை (முதுகெலும்பற்றவிலங்குகள்)
❖ முதுகெலும்பு உடையவை (முதுகெலும்புஉடைய விலங்குகள்)
❖ முதுகெலும்பற்றவை ஒன்பது தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
❖ முதுகெலும்புடையவை ஐந்து வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
❖ தாவரங்கள் பூக்கும் மற்றும் பூவாத தாவரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் உடலமைப்பு மற்றும் கனியுறுப்பின் தன்மையைப் பொருத்து மேலும் அவை பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
❖ 1969 -ஆம் ஆண்டு R.H விட்டேக்கர்என்பவரால் ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது.
❖ ஐந்து உலக வகைப்பாடு ஐந்து பேருலகங்களை உள்ளடக்கியது. அவை மொனிரா, புரோடிஸ்டா, பூஞ்சைகள், ப்ளாண்ட்டே மற்றும் அனிமேலியா.
❖ 1623 ஆம் ஆண்டு காஸ்பர்டு பாஹின் என்பவரால் இரு சொல் பெயரிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை கரோலஸ் லின்னேயஸ் 1753 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தினார்.
❖ உயிரினங்களைப் பெயரிடுதலில் இருசொல் பெயரிடும் முறை பொதுவான முறையாகும். இது இரண்டு பெயர்களை உள்ளடக்கியது.
❖ இரு சொல் பெயரில் முதல் பெயர்பேரினத்தையும், இரண்டாவது பெயர் சிற்றினத்தையும் குறிக்கும்.
❖ கரோலஸ் லின்னேயஸ் "தற்கால வகைப்பாட்டின் தந்தை" ஆவார்.
இணையச் செயல்பாடு
வகைப்பாட்டியல்
அணுவை உருவாக்குவோமா!
படிநிலைகள்:
படி 1: கீழ்க்காணும் உரலி/விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பட்டிற்கானஇணையப் பக்கத்திற்குச் செல்க.அங்கு ஒரு பக்கம் tinytap and "PLAY" பொத்தானோடு தோன்றும்
படி 2 : இதை அழுத்தும் போது வேறு பக்கம் தோன்றும்.
படி 3: அந்த பக்கத்தில் விலங்குகள் அவைகளின் அருகில் "invertebrate or vertebrate"என்னும் பெட்டியோடு தோன்றும் . சரியான வார்த்தையை அழுத்தும் போது அது அடுத்த பக்கத்திற்கு செல்லும்
உரலி:
https://www.tinytap.it/activities/gifca/play/vertebrates-and-invertebrates
* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.
* தேவையெனில் ‘Adobe Flash’ ஐ அனுமதிக்கவும்.