Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | புத்தக வினாக்கள் விடைகள்

உயிரினங்களின் அமைப்பு நிலைகள் | அறிவியல் - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 13 : Structural Organisation of Animals

   Posted On :  29.07.2022 06:16 pm

10வது அறிவியல் : அலகு 13 : உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

புத்தக வினாக்கள் விடைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க. II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. IV. பொருத்துக: V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி: VI. குறு வினாக்கள்: VII. நெடு வினாக்கள் : VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள் : (HOTS) IX. மதிப்பு சார் வினாக்கள் :

உயிரினங்களின் அமைப்பு நிலைகள் (அறிவியல்)

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

 

1. அட்டையின் இடப்பெயர்ச்சி உறுப்புகள்

அ) முன் ஒட்டுறுப்பு

ஆ) பின் ஒட்டுறுப்பு

இ) சீட்டாக்கள்

ஈ) எதுவுமில்லை

 

2. அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

அ) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)

ஆ) புரோகிளாட்டிடுகள்

இ) ஸ்ட்ரோபிலா

ஈ) இவை அனைத்தும்

 

3. அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி?

அ) கழிவு நீக்க மண்டலம்

ஆ) நரம்பு மண்டலம்

இ) இனப்பெருக்க மண்டலம்

ஈ) சுவாச மண்டலம்

 

4. அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது.

அ) வாய்

ஆ) வாய்க்குழி

இ) தொண்டை

ஈ) தீனிப்பை

 

5. அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை

அ) 23

ஆ) 33

இ) 38

ஈ) 30

 

6. பாலூட்டிகள் ______________ விலங்குகள்.

அ) குளிர் இரத்த

ஆ) வெப்ப இரத்த

இ) பாய்கிலோதெர்மிக்

ஈ) இவை அனைத்தும்

 

7. இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள் ______________

அ) ஓவிபேரஸ்

ஆ) விவிபேரஸ்

இ) ஓவோவிவிபேரஸ்

ஈ) அனைத்தும்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. சீரண (7 கண்டத்தின்) மண்டலத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.

2. ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் உருவானால் அது இருமுறை தோன்றும் பல்லமைப்பு எனப்படும்.

3. அட்டையின் முன் முனையிலுள்ள கதுப்பு போன்ற அமைப்பு முன் ஒட்டுறிஞ்சு எனப்படும்.

4. இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு சாங்கிவோரஸ் என அழைக்கப்படுகிறது.

5. யூரியா நைட்ரஜன் சார்ந்த கழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கிறது.

6. முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை 37

 

III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

 

1. இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிபாரின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.

விடை: சரி

 

2. விந்து நாளம் அண்டம் வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது. விடை: தவறு

விந்து நாளம் விந்து வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது.

 

3. முயலின் கண்ணில் டிம்பானிக் சவ்வு என்ற மூன்றாம் கண் இமை உள்ளது. இது அசையக் கூடியது.

விடை: தவறு

முயலின் கண்ணில் நிக்கிடேட்டிங் சவ்வு என்ற மூன்றாம் கண் இமை உள்ளது. இது அசையக் கூடியது.

 

4. முயலின் முன்கடைவாய்ப் பற்களுக்கும் பின்கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா எனப்படும்.

விடை: தவறு

முயலின் கோரை பற்களுக்கும் பின்கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா எனப்படும்.

 

5. முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்போரா குவாட்ரி ஜெமினா என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.

விடை: தவறு

முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்பஸ் கலோசம் என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.

 

IV. பொருத்துக:

 

1. கலம் I ஐ கலம் II மற்றும் III உடன் சரியாகப் பொருத்தி விடையைத் தனியே எழுதுக.


விடை:

உறுப்புகள் : சூழ்ந்துள்ள சவ்வு :அமைவிடம்

மூளை : மூளை உறைகள் : மண்டையோட்டுக் குழி

சிறுநீரகம் : கேப்ஸ்யூல் : வயிற்றறை

இதயம் : பெரிகார்டியம் : மார்பறையில்

நுரையீரல் : புளூரா : மீடியாஸ்டினம்

 

V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி:

 

1. ஹிருடினேரியா கிரானுலோசாவின் பொதுப் பெயரை எழுதுக.

இந்திய கால்நடை அட்டை

2. அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது?

தோல்

3. முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக.

2033 / 1023

4. அட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன?

அட்டையின் உடலில் பதினொன்று இணை விந்தகங்கள் உள்ளன.

5. முயலில் டையாஸ்டீமா எவ்வாறு உருவாகின்றது?

வெட்டு பற்களுக்கும், முன்கடைவாய் பற்களுக்கும் இடையே உள்ள இடைவெளி டையாஸ்டீமாவை ஏற்படுத்துகிறது.

6. இரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் எவை?

நுரையீரல்

7. அட்டையின் எந்த உறுப்பு உறிஞ்சு கருவியாகச் செயல்படுகிறது?

தொண்டை பகுதி

8. CNS-ன் விரிவாக்கம் என்ன?

மைய நரம்பு மண்டலம்

9. முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட் (வேறுபட்ட) பல்லமைவு எனப்படுகிறது?

நான்கு வகையான பற்கள் காணப்படுகிறது. எனவே வேறுபட்ட பற்கள் ஆகும்.

10. அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது?

வாய்க்கு வெளிப்புறமாக துருத்தி கொண்டிருக்கும் தாடைகளின் மூலம் விருந்தோம்பிகளின் தோலில் மூன்று ஆர அல்லது y வடிவ காயத்தை ஏற்படுத்துகிறது.

 

VI. குறு வினாக்கள்:

 

1. முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன்?

மூச்சுக்குழாயின் வழியே காற்று எளிதாகச் சென்று வரும் வகையில் அதன் சுவர்கள் குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்படுகின்றன.

 

2. அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.

தொண்டை இரத்தத்தை உறிஞ்சப் பயன்படுகிறது.

உடலின் இரு முனைகளிலும் உள்ள ஒட்டுறிஞ்சிகள் அட்டையை விருந்தோம்பியுடன் உறுதியாக இணைத்துக்கொள்ளப் பயன்படும் கவ்வும் உறுப்புகளாகச் செயல்படுகின்றன.

அட்டையின் வாயினுள் காணப்படும் மூன்று தாடைகள் விருந்தோம்பியின் உடலில் வலியில்லாத Y - வடிவ காயத்தை உருவாக்க உதவுகின்றன.

உமிழ் நீர்ச் சுரப்பிகளால் உருவாக்கப்படும் ஹிருடின் என்ற பொருள் இரத்தத்தை உறைய விடுவதில்லை. எனவே தொடர்ச்சியாக இரத்தம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

பக்கக் கால்களும் மயிர்க் கால்களும் காணப்படுவதில்லை. ஏனெனில் இவ்வுறுப்புகள் எந்த வகையிலும் தேவையில்லை.

 

VII. நெடு வினாக்கள் :

 

1. அட்டையின் இதய அமைப்புக்கேற்ப அதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?

விடை:

இரத்த உடற்குழி மண்டலம் மூலம் அட்டையில் சுற்றோட்டம் நடைபெறுகிறது.

இரத்தக்குழாய்களுக்குப் பதிலாக இரத்தம் போன்ற திரவத்தால் நிரப்பப்பட்ட இரத்த உடற்குழிக் கால்வாய்கள் அமைந்துள்ளன.

 

2. அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக.

விடை:

வளைதல் (அ) ஊர்தல் முறை

நீந்துதல் இயக்கம்

 

3. முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தைப் படம் வரைந்து விளக்குக.

விடை:

முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலம் ஓரிணை விந்தகங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய நாளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விந்தகங்கள் விந்து செல்களை உற்பத்தி செய்கின்றன.

விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும், தோலாலான விதைப்பைகளினுள் அமைந்துள்ளன.

ஒவ்வொரு விந்தகமும் விந்து நுண்குழல்கள் என்ற சுருண்ட குழல்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

இக்குழல்களில் விந்து செல்கள் முதிர்ச்சியடையும் போது, அவை சேகரிக்கும் நாளங்களில் தேக்கப்பட்டு, எபிடிடைமிசுக்குக் கடத்தப்படுகின்றன.

இருபக்க விந்து நாளங்களும் சிறுநீர்ப்பைக்கு சற்று கீழே சிறுநீர் வடிகுழாயில் இணைகின்றன.

சிறுநீர் வடிகுழாய் பின்னோக்கி சென்று, ஆண்குறியில் சேர்கிறது.

இனப்பெருக்கத்தில் பங்குகொள்ளும் மூன்று துணைச் சுரப்பிகள் உள்ளன.

அவை முறையே புராஸ்டேட் சுரப்பி, கௌப்பர் சுரப்பி மற்றும் கழிவிடச் சுரப்பிகள் ஆகும்.

 

VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள் : (HOTS)

 

1. அர்ஜீன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு காய்ச்சல் வந்ததால் மருத்துவரை சந்திக்கச் செல்கிறான். அவன் மருத்துவமனைக்குச் சென்றபோது, அட்டையால் தீவிரமாக கடிக்கப்பட்ட ஒரு நோயாளி சிகிச்சை பெறுவதைக் காண்கிறான். மிகவும் கொடூரமாக இருப்பதை கண்ட அர்ஜீன், மருத்துவரிடம் அட்டை மனிதனின் தோலில் ஒட்டும்போதே அது கடிப்பதை ஏன் உணர முடிவதில்லை என வினவுகிறான். அதற்கு மருத்துவர் அளித்த விடை என்னவாக இருக்கும்?

அட்டை கடிக்கும்போது விருந்தோம்பிகளின் தோல்களில் மயக்க தன்மை கொண்ட திரவத்தை உட்செலுத்துகிறது. இதனால் கடிக்கும் போது வலி ஏற்படாது.

 

2. சைலேஷ் தன் வீட்டில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறான். அவற்றில் சில முயல்களும் உள்ளன. ஒரு நாள் முயல்களுக்கு உணவளிக்கும் போது அவற்றின் பற்கள் வித்தியாசமாக இருப்பதை கவனிக்கிறான். இது குறித்து அவனுடைய தாத்தாவிடம் கேட்கிறான். அந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா? விவரி.

முயலுக்கு கோரைப் பற்கள் கிடையாது. முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப் பகுதி டயாஸ்டீமா அல்லது பல் இடைவெளி என அழைக்கப்படுகிறது. மெல்லும் போதும் அரைக்கும் போதும் உணவை கையாளுவதற்கு இந்த பல் இடைவெளி பயன்படுகிறது.

 

IX. மதிப்பு சார் வினாக்கள் :

 

1. அட்டையில் பல வகையான சீரண சுரப்பு மற்றும் நொதிகள் காணப்படுவதில்லை. ஏன்?

* அட்டையில் வழுவழுப்பு சுரப்பி உள்ளது. இது அட்டை விருந்தோம்பிகளில் மேல் ஓட்டும்போது கீழே விடுபடாமல் தடுக்க உடல் முழுவதும் ஈரபதத்தை சுரக்கிறது.

* அட்டைக்கு ஒழுங்கான முறையில் விருந்தோம்பிகள் கிடைப்பதில்லை. ஆனால் கிடைக்கும் போது போதுமான அளவு இரத்தத்தை உறிஞ்சி வைத்துக் கொண்டு மெதுவாக சீரணமாகிறது.

* அட்டை ஒரு முழுமையான உணவை எடுத்துக் கொண்டால் சீரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாகலாம்.

 

2. முயலின் உணவு மண்டலம் தாவர உண்ணி வகையான ஊட்டத்திற்கு ஏற்றாற் போல் எவ்வாறு அமைந்துள்ளது?

* தாவர உண்ணிகளுக்கு ஊன்உண்ணிகளை விட சிறந்த செரிமான மண்டலம் உள்ளது, ஏனெனில் மாமிச உணவை விட தாவர உணவு செரிமானம் ஆவது கடினம்.

* ஏனெனில் அதில் செல்லுலோஸ் உள்ளது தாவர உண்ணிகளுக்கு ஊன் உண்ணிகளை விட நீளமான குடல் உள்ளது. எனவே, செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.




Tags : Structural Organisation of Animals | Science உயிரினங்களின் அமைப்பு நிலைகள் | அறிவியல்.
10th Science : Chapter 13 : Structural Organisation of Animals : Book Back Questions with Answers Structural Organisation of Animals | Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 13 : உயிரினங்களின் அமைப்பு நிலைகள் : புத்தக வினாக்கள் விடைகள் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் | அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 13 : உயிரினங்களின் அமைப்பு நிலைகள்