உயிரினங்களின் அமைப்பு நிலைகள் | அறிவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 13 : Structural Organisation of Animals
உயிரினங்களின்
அமைப்பு நிலைகள்
(அறிவியல்)
நினைவில்
கொள்க
• அட்டையின் உடல் ஒரே மாதிரியான 33 கண்டங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
• ஓம்புயிரியின் உடலில் ஒட்டிக்
கொள்வதற்கும், இடப்பெயர்ச்சிக்கும் பயன்படும் இரு ஒட்டுறுப்புகளை அட்டை பெற்றுள்ளது.
• அட்டையின் உமிழ்நீர்ச் சுரப்பிகள்
இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிருடின் (எதிர் உறைவி) என்ற பொருளைச் சுரக்கின்றன.
• அட்டை ஓர் இருபால் உயிரி
• முயல்கள் முதுகு நாணுள்ள வெப்ப
இரத்த உயிரிகள்.
• முயலுக்கு கோரைப் பற்கள்
கிடையாது.
• முயலின் சுவாசம் ஓரிணை
நுரையீரல்கள் மூலம் நடைபெறுகிறது.
• இதயத்தில் இரு ஆரிக்கிள்கள், இரு
வெண்ட்ரிக்கிள்கள் என நான்கு அறைகள் உள்ளன.
• கழிவு நீக்க இனப்பெருக்க
மண்டலத்தில் சிறுநீரக அல்லது கழிவு நீக்க மண்டலம் மற்றும் இனப்பெருக்க மண்டலம்
ஆகியவை உள்ளன.
• பால் சுரப்பிகள் மாறுபாடடைந்த
தோல் சுரப்பிகள் ஆகும். இதன் சுரப்பான பால் இளம் உயிரிகளின் உணவாகும்.