Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | உடல் பராமரிப்பு

உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - உடல் பராமரிப்பு | 7th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

   Posted On :  09.05.2022 06:23 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும்

உடல் பராமரிப்பு

மனித உடல் அமைப்பு ஒரு மகத்தான அதிசயம். இது தொடர்ந்து செயல்படக்கூடிய உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்களை உள்ளடக்கியது. மனித உடலை ஓர் இயந்திரத்துடன் ஒப்பிடலாம்.

உடல் பராமரிப்பு

மனித உடல் அமைப்பு ஒரு மகத்தான அதிசயம். இது தொடர்ந்து செயல்படக்கூடிய உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்களை உள்ளடக்கியது. மனித உடலை ஓர் இயந்திரத்துடன் ஒப்பிடலாம். மனித உடல் முறையான பராமரிப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் நன்றாகச் செயல்படுகிறது. உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு, உடலின் அனைத்துப் பாகங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். செரிமான மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம் மற்றும் தசை மண்டலம் ஆகியவை ஒருங்கிணைந்து நன்கு செயல்பட வேண்டிய முக்கிய மண்டலங்கள் ஆகும். எனவே, நாம் இவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்


பற்கள் பராமரிப்பு

பல் பராமரிப்பு அல்லது வாய் சுகாதாரம் என்பது தனிநபர் ஆரோக்கியத்தின் முக்கிய அம்சமாகும். வாய் சுகாதாரம் என்பது நல்ல பற்கள் மற்றும் ஆரோக்கியமான திசுக்களால் சூழப்பட்ட ஈறுகளைக் குறிக்கிறது. உணவை மெல்வதால், உமிழ்நீர் மற்றும் செரிமானச் சுரப்புகள் சுரக்கின்றன. மெல்லும் மற்றும் ருசிக்கும் செயல் 'மாஸ்டிகேசன்' என்று அழைக்கப்படுகிறது. உணவை மென்று உண்பதால் மகிழ்ச்சியும் மன திருப்தியும் நமக்குக் கிடைக்கிறது. நமது சிறந்த தோற்றத்திற்கும் தெளிவான பேச்சுக்கும் கூட பற்கள் அவசியமாகும்.

  ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவதன் மூலம் பற்களிலும், ஈறுகளில் பற்காரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கலாம். 

  நாம் பற்களைத் தழுவும்போது (Flossing) உணவுத் துகள்கள், பற்காரை மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன. (ஆரம்பத்தில் நீங்கள் பற்களைத் தழுவும்போது, உங்கள் ஈறுகளில் சிறிது இரத்தம் கசியலாம். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அது நின்று விடும். மருத்துவரது வழிகாட்டுதல் பெற்றே இதனைச் செய்ய வேண்டும்).



பற்களைப் பாதிக்கும் நோய்கள்

நாம் வாய் சுகாதாரத்தைப் பேணாதபோது, நோய்கள் ஏற்பட்டு பற்கள் பாதிப்படைகின்றன. பற்கள் மற்றும் ஈறுகளைப் பாதிக்கும் நோய்கள், அவற்றை ஏற்படுத்தும் காரணிகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


அட்டவணை 6.1 பற்களைப் பாதிக்கும் நோய்கள்



கண் பராமரிப்பு

உடல் உறுப்புகளுள் கண் ஒரு முக்கிய உறுப்பாகும். கண்கள் உலகினைக் காணப் பயன்படும் சாளரங்களாகக் கருதப்படுகின்றன. பார்வை என்பது மிக முக்கியமான உணர்வாகும். நாம் 80% உணர்வுகளை பார்வை மூலமாகவே பெறுகிறோம். கண்களைப் பாதுகாப்பதன் மூலம், குருட்டுத்தன்மை மற்றும் பார்வை இழப்பு போன்ற குறைபாடுகளை நாம் குறைக்க முடியும். நோய்கள், சுற்றுப்புறம் மற்றும் தட்பவெப்ப நிலையிலிருந்து நாம் கண்களைக் காக்க வேண்டும்.

கண்களைப் பாதிக்கும் நோய்கள்

கண்களைப் பாதிக்கும் நோய்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் அட்டவணை 6.2 ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 6.2 கண்களைப் பாதிக்கும் நோய்கள் 


செயல்பாடு 3


படத்தை உற்று நோக்கி, கொடுக்கப்பட்ட அட்டவணையில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்பதில் சரியானவற்றைக் ( ✔ ) குறியிடுக.


இவற்றிலிருந்து நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?

கண்களைக் தேய்ப்பதும், நீண்டநேரம் தொலைக்காட்சி கணினி பார்ப்பதும் கண்ணுக்கு தீங்கு விளைவிக்கும்.குளிர்ந்த நீரில் கண்களைச் சுத்தம் செய்ய வேண்டும் கேரட்,  காய்கறி, ஆரஞ்சு, லெமன் மற்றும் சாத்துக்குடி போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட  வேண்டும்



தலைமுடி பராமரிப்பு

தலைமுடியின் ஆரோக்கியம் உடலின் ஊட்டச்சத்து நிலை மற்றும் பொது உடல் நலத்தை ஓரளவிற்குப் பிரதிபலிக்கிறது. மெல்லிய மற்றும் சிதறிய முடி, முடி உதிர்தல் ஆகியவை முடியின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறிக்கின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடுகள், பல்வேறு உடல் மற்றும் மனநல நோய்கள் ஆகியவை இளநரைக்கு வழிவகுக்கின்றன.

மயிர்க் கால்கள் (முடி வளருமிடம்) முடியை மென்மையாக வைத்திருக்க உதவக்கூடிய எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றன. வியர்வை மற்றும் இறந்த சருமச் செல்கள் உச்சந்தலையிலிருந்து வெளியேறுகின்றன. எண்ணெய், வியர்வை மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து எண்ணெய் சிக்கு உருவாகிறது. முறையாகக் கழுவப்படாவிட்டால் தலைமுடி அசுத்தமாகக் காணப்படும்.


முடியைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருத்தல் 

• தினமும் உச்சந்தலையை நன்றாகத் தேய்த்துக் குளிப்பதன் மூலம், இறந்த சருமச் செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றலாம். 

• சுத்தமான தண்ணீரில் தலைமுடியை அலசுதல், நல்ல தரமான சீப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவை முடியைப் பராமரிப்பதற்கு மிகவும் அவசியமாகும்.


Tags : Health and Hygiene | Term 1 Unit 6 | 7th Science உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 6 : Health and Hygiene : Care of the body Health and Hygiene | Term 1 Unit 6 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும் : உடல் பராமரிப்பு - உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும்