குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - தாவரவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) | 12th Botany : Chapter 3 : Chromosomal Basis of Inheritance
தாவரவியல் : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)
மதிப்பீடு
1. ஒரு அயல் அறுபடியும்
கொண்டிருப்பது
அ) ஆறு வேறுபட்ட மரபணுத் தொகையம்
ஆ) மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்
இ) மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
ஈ) ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்
விடை : இ) மூன்று வேறுபட்ட மரபணுத் தொகையத்தின் இரண்டு நகல்கள்
2. பட்டியல் I ஐ பட்டியல்
II உடன் பொருத்துக
பட்டியல் I பட்டியல் II
அ) இருமடியத்துடன் ஒரு இணை குரோமோசோம்கள் அதிகமாக காணப்படுவது i. மோனோசோமி
ஆ) இருமடியத்துடன் ஒரு குரோமோசோம்கள் அதிகமாகக் காணப்படுவது - ii
டெட்ரோசோமி
இ) இரு மடியத்தில் ஒரு குரோமோசோம் குறைவாக காணப்படுதல் - iii
ட்ரைசோமி
ஈ) இரு மடியத்தலிருந்து இரண்டு தனித்தனி குரோமோசோம் குறைவாகக்
காணப்படுதல். – iv. இரட்டை மானோசோமி
அ) அ-i, ஆ-iii, இ-ii, ஈ-iv
ஆ ) அ-ii, ஆ-iii, இ-iv, ஈ-i
இ) அ-ii, ஆ-iii, இ-i, ஈ-iv
ஈ) அ-iii, ஆ-ii, இ-i, ஈ-iv-
விடை : இ) அ-ii, ஆ-iii, இ-i, ஈ-iv
3. பின்வரும் எந்தக்
கூற்றுகள் சரியானவை?
1) முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர் சேர்க்கை வழித்தோன்றல்கள்
மட்டுமே வெளிப்படுத்துகின்றன.
2) முழுமையான பிணைப்பில் பிணைந்த மரபணுக்கள் குறுக்கேற்றத்தை
வெளிப்படுத்துகின்றன.
3) முழுமையற்ற பிணைப்பில் இரண்டு பிணைந்த மரபணுக்கள் பிரிவடையலாம்.
4) முழுமையான பிணைப்பில் குறுக்கேற்றம் நடை பெறுவதில்லை
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 3 மற்றும் 4
ஈ) 1 மற்றும் 4
விடை : இ) 3 மற்றும் 4
4. மக்காச்சோளத்தில்
முழுமையற்ற . பிணைப்பின் காரணமாக, பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின்
விகிதங்கள்
அ) 50:50
ஆ) 7:1:1; 7
இ) 96:4:36
ஈ) 1:7:7:1
விடை : ஆ) 7:1:1:7
5. புள்ளி
சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு
வேறுபட்ட பதிலீடு முறையே
அ) A → T, T → A,
C → G மற்றும் G → C
ஆ) A → G,
C → T, C → G மற்றும் T → A
இ) C → G,
A → G, T → A மற்றும் G → A
ஈ) G → C,
A – T, T → A மற்றும் C → G
விடை : ஆ) A → G, C → T, C → G மற்றும் T → A
6. ஒரு செல்லில் ஒருமடிய
குரோமோசோமின் எண்ணிக்கை 18 எனில், இரட்டை மானோசோமி மற்றும் ட்ரைசோமி நிலையில்
குரோமோசோம்களின் எண்ணிக்கை
அ) 35 மற்றும் 37
ஆ) 34 மற்றும் 35
இ) 37 மற்றும் 35
ஈ) 17 மற்றும் 19
விடை : அ) 35 மற்றும் 37
7. மரபுக்குறியின் AGC
யானது AGA வாக மாற்றமடையும் நிகழ்வு
அ) தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்
ஆ) பொருளுணர்த்தாத சடுதிமாற்றம்
இ) கட்ட நகர்வு சடுதிமாற்றம்
ஈ) நீக்குதல் சடுதிமாற்றம்
விடை : அ) தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்
8. கூற்று : காமா
கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
காரணம் : ஏனெனில்
அணுவிலிருந்து வரும் எலக்ட் ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச்
செல்கிறது
அ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி காரணம் கூற்றுக்குத் தவறான விளக்கம்
ஈ. கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை : இ). கூற்று சரி காரணம் கூற்றுக்குச் தவறான விளக்கம்.