Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - தாவரவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 12th Botany : Chapter 3 : Chromosomal Basis of Inheritance

12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

தாவரவியல் : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் : புத்தக வினாக்கள் மற்றும் - முக்கியமான கேள்விகள் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

தாவரவியல் : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் 


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

மதிப்பீடு


1. ஒரு அயல் அறுபடியும் கொண்டிருப்பது 

அ) ஆறு வேறுபட்ட மரபணுத் தொகையம் 

ஆ) மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள் 

இ) மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள் 

ஈ) ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்

விடை : இ) மூன்று வேறுபட்ட மரபணுத் தொகையத்தின் இரண்டு நகல்கள் 


2. A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10CM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்புகருமுட்டை AB/ab என்பதோடு ab/ab யை சோதனை கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றல்களில் ஒவ்வொரு வழித்தோன்றல்களிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம். 

அ) 25AB, 25ab, 25Ab, 25aB 

ஆ) 10AB, 10ab 

இ) 45AB, 45ab 

ஈ) 45AB, 45ab, 5Ab, 5aB

விடை : இ) 45AB, 45ab 

 

3. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக 

பட்டியல் I  பட்டியல் II 

அ) இருமடியத்துடன் ஒரு இணை குரோமோசோம்கள் அதிகமாக காணப்படுவது   i. மோனோசோமி

ஆ) இருமடியத்துடன் ஒரு குரோமோசோம்கள் அதிகமாகக் காணப்படுவது - ii டெட்ரோசோமி 

இ) இரு மடியத்தில் ஒரு குரோமோசோம் குறைவாக காணப்படுதல் - iii ட்ரைசோமி 

ஈ) இரு மடியத்தலிருந்து இரண்டு தனித்தனி குரோமோசோம் குறைவாகக் காணப்படுதல். – iv. இரட்டை மானோசோமி

அ) அ-i, ஆ-iii, இ-ii, ஈ-iv 

ஆ) அ-ii, ஆ-iii, இ-iv, ஈ-i 

இ) அ-ii, ஆ-iii, இ-i, ஈ-iv 

ஈ) அ-iii, ஆ-ii, இ-i, ஈ-iv- 

விடை : இ) அ-ii, ஆ-iii, இ-i, ஈ-iv

 

4. பின்வரும் எந்தக் கூற்றுகள் சரியானவை? 


அ) 1 மற்றும் 2 

ஆ) 2 மற்றும் 3 

இ) 3 மற்றும் 4 

ஈ) 1 மற்றும் 4 

விடை : இ) 3 மற்றும் 4 

 

5. முப்புள்ளி சோதனைக் கலப்பின் மூலம் துல்லிய மான மரபணு வரைபடம் வரையமுடியும் ஏனெனில் இதன் அதிகரிப்பினால் 

அ) ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது 

ஆ) இரட்டை குறுக்கேற்றம் சாத்தியமாகிறது 

இ) பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது 

ஈ) மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது

விடை : ஆ) இரட்டை குறுக்கேற்றம் சாத்திய மாகிறது 

 

6. மக்காச்சோளத்தில் முழுமையற்ற . பிணைப்பின் காரணமாக, பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள் 

அ) 50:50 

ஆ) 7:1:1; 7 

இ) 96:4:36

ஈ) 1:7:7:1

விடை : ஆ) 7:1:1:7 

 

7. ஒரே குரோமோசோமில் GSLH என்ற மரபணுக்கள் அமைந்துள்ளது மறுகூட்டிணைவு விழுக்காடு L - க்கும் G க்கும் இடையே 12% S க்கும் L க்கும் இடையே 50%, Hக்கும் Sக்கும் இடையே 20% எனில் மரபணுக் களின் சரியான வரிசையை எழுதுக. 

அ) GHSL

ஆ) SHGL 

இ) SGHL

ஈ) HSLGI

விடை : இ) SGHL 

 

8. புள்ளி சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு வேறுபட்ட பதிலீடு முறையே 

அ) A → T, T  A, C  G மற்றும் G  C 

ஆ) A  G, C  T, C  G மற்றும் T  A 

இ) C  G, A  G, T  A மற்றும் G  A

ஈ) G  C, A – T, T  A மற்றும் C  G 

விடை : ஆ) A  G, C  T, C  G மற்றும் T  A 

 

9. ஒரு செல்லில் ஒருமடிய குரோமோசோமின் எண்ணிக்கை 18 எனில், இரட்டை மானோசோமி மற்றும் ட்ரைசோமி நிலையில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 

அ) 35 மற்றும் 37 

ஆ) 34 மற்றும் 35 

இ) 37 மற்றும் 35 

ஈ) 17 மற்றும் 19

விடை : அ) 35 மற்றும் 37 

 

10. மரபுக்குறியின் AGC யானது AGA வாக மாற்றமடையும் நிகழ்வு 

அ) தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம் 

ஆ) பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் 

இ) கட்ட நகர்வு சடுதிமாற்றம் 

ஈ) நீக்குதல் சடுதிமாற்றம் 

விடை : அ) தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம் 

 

11. கூற்று : காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது. 

காரணம் : ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ட் ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச் செல்கிறது 

அ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் 

ஆ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல 

இ) கூற்று சரி காரணம் கூற்றுக்குத் தவறான விளக்கம்

ஈ. கூற்று காரணம் இரண்டும் தவறு 

விடை : இ). கூற்று சரி காரணம் கூற்றுக்குச் தவறான விளக்கம். 

 

12. மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தால், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்? 

அ) 900 cM 

ஆ) 90 cM 

இ) 9cM 

ஈ) 0.9cM

விடை : இ) 9cM 

Tags : Chromosomal Basis of Inheritance | Botany குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - தாவரவியல்.
12th Botany : Chapter 3 : Chromosomal Basis of Inheritance : Choose the Correct Answers Chromosomal Basis of Inheritance | Botany in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்