இரண்டாம் நிலை வளர்ச்சி - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 10 : Secondary Growth
11 வது தாவரவியல் : அலகு 10
இரண்டாம் நிலை வளர்ச்சி
மதிப்பீடு
1. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க.
வசந்த காலத்தில் கேம்பியம்
i) குறைவான செயல்பாடு கொண்டது.
ii) அதிகப்படியான சைலக் கூறுகளை தோற்றுவிக்கின்றன.
iii) அகன்ற உள்வெளி கொண்ட சைலக்குழாய்களை உருவாக்குகிறது.
அ) (i) - சரியானது ஆனால் (ii) & (iii) - சரியானவையல்ல.
ஆ) (i) - சரியானதல்ல ஆனால் (ii) & (iii) - சரியானவை.
இ) (i) & (ii) - சரியானவை ஆனால் (iii) - சரியானதல்ல.
ஈ) (i) & (ii) - சரியானவையல்ல ஆனால் (iii) - சரியானது.
2. வழக்கமாக ஒருவிதையிலை தாவரத்தில் சுற்றளவு அதிகரிப்பதில்லை. ஏனென்றால்
அ) செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டுள்ளது.
ஆ) செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டுள்ளது. கொண்டிருப்பதில்லை.
இ) கேம்பியத்தின் செயல்பாடு தடை செய்யப்படுகிறது.
ஈ) அனைத்தும் சரியானவை.
3. பட்டைத்துளை படத்தில் குறிப்பிட்டுள்ள பாகங்கள் அ, ஆ, இ, ஈ-யை கண்டறிக.
i) அ) ஃபெல்லம் ஆ) நிரப்பிச்செல்கள் இ) ஃபெல்லோடெர்ம் ஈ) ஃபெல்லோஜென்
ii) ஆ) நிரப்பிச்செல்கள் ஆ) ஃபெல்லம் இ) ஃபெல்லோஜென் ஈ) ஃபெல்லோடெர்ம்
iii) அ) ஃபெல்லொஜென் ஆ) ஃபெல்லம் இ) ஃபெல்லோடெர்ம் ஈ) நிரப்பிச்செல்கள்
iv) அ) ஃபெல்லோடெர்ம் ஆ) ஃபெல்லம் இ) நிரப்பிச்செல்கள் ஈ) ஃபெல்லோஜென்
4. வழக்கமாகக் குப்பி தக்கை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
அ) ஃபெல்லம்
ஆ) ஃபெல்லோஜென்
இ) சைலம்
ஈ) வாஸ்குலக்கேம்பியம்
5. இருவிதையிலை தாவர தண்டின் ஒரே சீரான இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது முதல்நிலை சைலத்தின் நிலை என்ன?
அ) மையப் பகுதியில் நிலைத்து நிற்கிறது.
ஆ) நசுக்கப்படும்
இ) நசுக்கப்படலாம் அல்லது நசுக்கப்படாமல் இருக்கலாம்.
ஈ) முதல்நிலை ஃபுளோயத்தை சுற்றிக் காணலாம்.