இருவிதையிலை தாவர வேர்களில் இரண்டாம் நிலை வளர்ச்சி
இருவிதையிலை தாவர வேர்களில் நடைபெறும் இரண்டாம் நிலை
வளர்ச்சி, நிலத்திற்கு மேலே வளரும் தாவரப் பகுதிகளுக்கு உறுதியளிக்க மிகவும் அவசியமாகிறது.
இது தண்டில் நடைபெறும் இரண்டாம் நிலை வளர்ச்சியைப் போன்றதே ஆகும். எனினும், வாஸ்குலக்
கேம்பிய உருவாக்கத்தில் ஒரு தெளிவான வேறுபாடு காணப்படுகிறது.
வேரில், வாஸ்குலக் கேம்பியம் முற்றிலும் இரண்டாம் நிலை
தோற்றமாகும். இது ஃபுளோயம் கற்றைகளின் கீழே
காணப்படும் இணைப்புத் திசு, புரோட்டோசைலத்திற்கு மேலே காணப்படும் பெரிசைக்கிளின் ஒரு
பகுதி ஆகியன சேர்ந்து ஒரு தொடர் அலை வளையமாக தோன்றுகிறது. பிறகு இந்த அலை வளையமாக வட்டமாக
மாறித் தண்டில் நடைபெறும் இரண்டாம் நிலை வளர்ச்சி போலவே இரண்டாம் நிலை சைலம் மற்றும்
இரண்டாம் நிலை ஃபுளோயத்தை உருவாக்குகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
பெரிடெர்மை உள்ளடக்கிய இறந்த வெளிப்பட்டையையும்,
தொடர்ச்சியான இரண்டாம் நிலை வளர்ச்சியினால் உருவாக்கப்படும் புறணியும், ஃபுளோயம் திசுக்களையும்
மொத்தமாகக் குறிக்கும் சொல் ரிட்டிடோம் (rhytidome) ஆகும். எடுத்துக்காட்டு: குர்கஸ்.
பாலிடெர்ம்
(polyderm) வேர் மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுகிறது.
எடுத்துக்காட்டு: ரோசேசி. பெரிடெர்மின் ஒரு வரிசையிலான சூபரின் படிந்த அடுக்கின் மீதுப்
பல அடுக்குகளாலான சூபரின் படியாத செல்களைக் கொண்ட ஒரு சிறப்பு வகையான பாதுகாப்புத்
திசு.
இருவிதையிலைத் தாவர தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சிக்கும், இருவிதையிலை
தாவர வேரின் இரண்டாம் நிலை வளர்ச்சிக்கும் இடையேயான வேறுபாடுகள்