Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

கழிவு நீக்கம் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 8 : Excretion

   Posted On :  09.01.2024 12:22 am

11 வது விலங்கியல் : பாடம் 8 : கழிவு நீக்கம்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 8 : கழிவு நீக்கம் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு:


1. சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியைச் சார்ந்துள்ளது?

) பௌமானின் கிண்ணம்

) ஹென்லே வளைவின் நீளம்

) அண்மை சுருள் நுண்குழல்

) கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு

விடை : ) ஹென்லே வளைவின் நீளம்


2. பாலூட்டியின் நெப்ரானில் ஹென்லே வளைவு இல்லையெனில், கீழ்க்கண்ட எந்த நிலையை எதிர்பார்க்கலாம்?

) சிறுநீர் உருவாக்கம் நடைபெறாது

) உருவாக்கப்பட்ட சிறுநீரின் தரம் மற்றும் அளவில் எந்த மாற்றமும் இல்லை

) சிறுநீர் மிகுந்த அடர்வுடையதாக இருக்கும் 

) சிறுநீர் நீர்த்துக் காணப்படும்

விடை : ) சிறுநீர் நீர்த்துக் காணப்படும்


3. சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள நீட்சி உணர்வேற்பிகள் முற்றிலுமாக நீக்கப்படும் போது நிகழ்வதென்ன?

) தொடர் சிறுநீர் வெளியேற்றம்

) சிறுநீர் தொடர்ந்து இயல்பாக சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படும்

) சிறுநீர் வெளியேற்றம்

) சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேகரிக்கப்படுவதில்லை.

விடை : ) தொடர் சிறுநீர் வெளியேற்றம்


4. ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?

) கார்பன் டைஆக்ஸைடு

) யூரிக் அமிலம்

) யூரியா

) அம்மோனியா

விடை) யூரியா


5. தவறான இணையைக் கண்டுபிடி.

) பௌமானின் கிண்ணம்கிளாமருலார் வடிகட்டுதல்

) சேய்மை சுருள் நுண்குழல்குளுக்கோஸ் உறிஞ்சப்படுதல்

) ஹென்லேயின் வளைவு - சிறுநீர் அடர்வு

) அண்மை சுருள் நுண்குழல் - Na+ மற்றும் K+ அயனிகள் உறிஞ்சப்படுதல்

விடை : ) அண்மை சுருள் நுண்குழல் - Na+ மற்றும் K+ அயனிகள் உறிஞ்சப்படுதல்


6. போடோ சைட்டுகள் காணப்படுவது.

) பௌமானின் கிண்ண வெளிச்சுவரில்

) பௌமானின் கிண்ண உட்சுவரில்

) நெஃப்ரானின் கழுத்துப் பகுதியில்

) கிளாமருலார் இரத்த நுண்நாளங்களின் சுவரில்

விடை : ) பௌமானின் கிண்ண உட்சுவரில்


7. கிளாமருலார் வடிதிரவத்தில் அடங்கியுள்ளவை.

) இரத்தச் செல்களும் புரதங்களும் அற்ற இரத்தம்

) சர்க்கரையற்ற பிளாஸ்மா

) புரதங்களைக் கொண்ட ஆனால் செல்களற்ற இரத்தம்

) யூரியாவற்ற இரத்தம்.

விடை : ) புரதங்களைக் கொண்ட ஆனால் செல்களற்ற இரத்தம்


8. கீழ்க்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது?

) சிலிக்கேட்டுகள்

) தாது உப்புகள்

) கால்சியம் கார்பனேட்

) கால்சியம் ஆக்சலேட்

விடை : ) கால்சியம் ஆக்சலேட்


9. சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த்தேவையுடைய உயிரிகள்.

) யூரியா நீக்கிகள்

) அம்மோனியா நீக்கிகள்

) யூரிக் அமில நீக்கிகள் 

) இரசாயன நீக்கிகள்

விடை : ) யூரிக் அமில நீக்கிகள் 


10. சேய்மை சுருள் நுண்குழல் மற்றும் சேகரிப்பு நாளங்களில் ஆல்டோஸ்டீரோன் செயல்படும் போது நீர் இதன் மூலம் உறிஞ்சப்படுகிறது. 

) அக்குவாபோரின்கள்

) ஸ்பெக்ட்ரின்கள்

) குளுக்கோஸ் கடத்திகள்

) குளோரைடு கால்வாய்

விடை : ) அக்குவாபோரின்கள்


11. சிறுநீரக நுண்குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலுக்கு உதவும் ஹார்மோன்

) கோலிசிஸ்டோகைனின்

) ஆஞ்சியோடென்சின் II

) ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன்

) பான்கிரியோசைமின்

விடை : ) ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன்


12. மால்பீஜியன் நுண்குழல்கள் எதிலுள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுகின்றன.

) வாய்

) உணவுக்குழல்

) ஹீமோலிம்ப்

) உணவுப்பாதை (Alimentary canal)

விடை : ) ஹீமோலிம்ப்

Tags : Excretion | Zoology கழிவு நீக்கம் | விலங்கியல்.
11th Zoology : Chapter 8 : Excretion : Choose the Correct Answers Excretion | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 8 : கழிவு நீக்கம் : சரியான விடையை தெரிவு செய்க - கழிவு நீக்கம் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 8 : கழிவு நீக்கம்