கழிவு நீக்கம் | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 8 : Excretion
13. நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் எதிர்கொள்ளும் அமைப்புகளை வரிசைப்படுத்துக.
அ) உட்செல் நுண்தமனி
ஆ) பௌமானின் கிண்ணம்
இ சேகரிப்பு நாளம்
ஈ) சேய்மை சுருள் நுண் குழல்
உ) கிளாமருலஸ்
ஊ) ஹென்லேயின் வளைவு
எ) அண்மை சுருள் நுண்குழல்
ஏ) சிறுநீரக பெல்விஸ்
விடை : அ; உ; ஆ; எ; ஊ; ஈ; இ; ஏ
14. பிளாஸ்மாவில் இருந்து பௌமானின் உட்பகுதிக்குள் நுழையும் கரைபொருட்கள் எதிர்கொள்ளும் மூன்று வடிகட்டல் தடை காரணிகளின் பெயர்களைக் குறிப்பிடுக. இரத்தத்திலுள்ள எவ்வகை பகுதிப் பொருட்கள் இந்தச் சிறுநீரக படலங்களால் வெளியேற்றப்படுகின்றன.
1. கிளாமருலார் இரத்த அழுத்தம் - 55mm Hg
2. கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் - 30mm Hg
3. கிளாமருலார் நீர்ம அழுத்தம் - 15mm Hg
புரதங்கள், அமினோ அமிலங்கள், குளுக்கோஸ், யூரியா, யூரிக் அமிலம், கிரியாட்டினின் ஆகிய பொருள் சிறுநீரகப் படலங்களால் வெளியேற்றப் படுகின்றன.
15. கிளாமருலார் வடிகட்டுதலை துரிதப்படுத்தும் விசைகள் யாவை? கிளாமருலார் வடிகட்டுதலுக்கான எதிர்விசைகள் யாவை? நிகர வடிகட்டுதல் அழுத்தம் என்றால் என்ன?
• கிளாமருலார் நீர்ம அழுத்தம், கிளாமருலார் இரத்த அழுத்தம்
• எதிர் விசைகள் கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம், கிளாமருலார் நீர்ம அழுத்தம்
• நிகர வடிகட்டுதலுக்கான அழுத்தம் என்பது கிளாமருலாரின் நீர்ம அழுத்தம் - (கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் + கிளாமருலார் கிண்ணத்தின் நீர்ம அழுத்தம்)
= 50mm Hg - (30mm Hg + 15mm Hg) = 10mm Hg
16. கீழ்க்கண்ட உறுப்புகளைக் கண்டறிந்து சிறுநீரக உடற்செயலியலில் அவற்றின் முக்கியத்துவத்தை விளக்குக.
அ) ஐக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு
• நெப்ரான் உட்செல் தமனியில் உள்ள சிறப்புத்திசு ஜக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு ஆகும். இதில் மாக்குலா டென்ஸா மற்றும் துகள் செல்கள் காணப்படுகின்றன.
செயல்கள்
• மார்குலா டென்ஸா செல்கள் சேய்மை சுருள் குழல்களில் திரவம் பாய்வதை உணர்கின்றன. உட்செல் தமனியில் குறுக்களவை பாதிக்கிறது.
துகள்செல்களின் செயல்கள்
• கிளாமருலஸின் வடிகட்டும் விகிதம் குறையும் போது ஜக்ஸ்டா கிளாமருலஸ் செல்களைத் தூண்டி ரெனின் ஹார்மோன் வெளியிடச் செய்கிறது. கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் ஆஞ்சியோடென்சினோஜனை ஆஞ்சியோடென்சின் I ஆக மாறுகிறது. ஆஞ்சியோடென்சின் மாற்று ஹார்மோன் ஆஞ்சியோடென்சின் I ஐ ஆஞ்சியோடென்சின் II ஆக மாற்றுகிறது. இது சேய்மை சுருள் நுண்குழலின் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து சோடியம் அயனிகள் உறிஞ்சுதலை அதிகப்படுத்துகிறது.
ஆ) போடோசைட்டுகள்
• கிளாமருலஸின் உள்அடுக்கு போடோசைட்டுகள் என்னும் எபிதீலிய செல்களால் ஆனது.
• என்டோதிலியல் செல்கள் மற்றும் கிளாமருலஸின் அடிப்படை சவ்வு வடிகட்டும் அமைப்பாக செயல்படுகிறது.
• போடோசைட்டுகள் கிளாமருலஸ் வடிகட்டுதலில் பங்கு கொள்கிறது.
இ) சிறுநீர்ப்பையிலுள்ள சுருங்குத் தசைகள்
• சிறுநீர்ப்பையின் சுருங்குத் தசைகள் சிறுநீர் வெளியேறுவதை ஒழுங்குப்படுத்துகிறது. சிறுநீர்ப்பை நிரம்பியவுடன் சிறுநீர்ப்பை விரிவடைகிறது
• உணர்ச்சி நரம்புகள் வழியாக மைய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு சிறுநீர்ப்பை சுருங்குகிறது.
• புற உடலின் இயக்கு நரம்புகள் தூண்டப்பட்டு சிறுநீர்ப்பையின் சுருக்கத் தசைகள் மூடப்படுகின்றன.
• மென் தசைகள் சுருங்கி உட்புற சுருக்குத் தசைகள் திறந்து வெளிப்புற சுருக்குத் தசைகள் தளர்வடைகின்றன.
• சுருக்குத் தசைகள் திறக்கப்பட்டு சிறுநீர் வெளியேறுகிறது.
17. மீண்டும் உறிஞ்சப்படுதல் நெப்ரானின் எப்பகுதியில் அதிகமாக நடைபெறுகிறது?
அண்மை சுருண்ட குழல்
18. நெஃப்ரானின் உட்குழிவுப் பகுதியால் உறிஞ்சப்படும் ஒரு மூலக்கூறு அல்லது அயனி செல்லும் நெஃப்ரானின் அடுத்த பகுதி எது? வடிகட்டப்பட்ட ஒரு கரைபொருள் நுண்குழலால் மீண்டும் உறிஞ்சப்படாத நிலையில் அது எங்கு செல்கிறது?
• நெஃப்ரானின் உட்குழிவுப் பகுதியில் உறிஞ்சப்படும் ஒரு மூலக்கூறு அயனி இடையீட்டுத் திசுக்களுக்கு சென்று அங்கிருந்து இரத்தத்திற்குள் செல்கிறது.
• வடிகட்டப்பட்ட ஒரு கரைபொருள் நுண்குழலில் உறிஞ்சப்படாத நிலையில் அது சிறுநீர் வழியே வெளியேற்றப்படும்.
19. நெஃப்ரானின் சுரத்தலுக்கான பகுதி எது? அயனிகள் மீள உறிஞ்சப்படுதலை நெறிப்படுத்தி pH சமநிலைப் பேணும் பகுதி எது?
1. சேய்மை சுருள் நுண்குழல், 2. சேகரிப்பு நாளம்
• சிறுநீரக நுண்குழலில் H+ மற்றும் NH3 சுரக்கப்பட்டு நுண்குழல் திரவத்தில் விடப்படுகிறது. அதாவது சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. இது இரத்தத்தின் ஹைட்ரஜன் அயனிகளின் அடர்த்தியை நிலைப்படுத்துகின்றன.
• குழலில் உள்ள வடி திரவத்தில் வெளிவிடப்படுகிற ஒவ்வொரு ஹைட்ரஜன் அயனிக்கும் ஒரு சோடியம் அயனி குழல் செல்களினால் உறிஞ்சப்படுகிறது.
• இவ்வாறு சுரக்கப்பட்ட HCO3 பை பாஸ்பேட்டுகள் மற்றும் NH3உடன் இணைந்து கார்பானிக் அமிலம் மற்றும் பாஸ்பாரிக் அமிலமாக மாறுகிறது.
• திரவத்திலுள்ள ஹைட்ரஜன் அயனி இவ்வாறு நிலைப்படுத்தப்பட்டதால் அவை மீள உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது.
20. மனித உடலில் கிளாமருலார் வடிதிரவ வீதத்தை அளவிட உதவும் கரைபொருள் எது?
• இந்த வடிதிரவத்தில் நீர், குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், யூரிக் அமிலம், கிரியாட்டினைன் புரதங்கள் உப்புகள் மற்றும் யூரியா அடங்கியுள்ளது.
• இக்கரை பொருள்கள் இதன் வடிதிரவ வீதத்தை அளவிட உதவுகிறது.
21. சிறுநீர் வெளியேற்றத்தில் பங்கேற்கும் தானியங்கு நரம்பு மண்டலப்பகுதி எது?
பிரிவு நரம்பு மண்டலம்
22. நெப்ரானின் உட்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன? நெப்ரானின் வெளிச்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன? சுயநெறிப்படுத்துதல் நடைபெறவில்லை எனக் கருத்தில் கொள்க.
• இயல்பாக உட்செல் இரத்த நாளத்தின் வழியாக அதிக விசையுடன் இரத்தம் கிளாமருலஸிற்குள் நுழையும். உட்செல் இரத்தநாளம் வெளிச்செல் இரத்தநாளத்தை விட அகன்றது இந்நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டால் கிளாமருலார் வடிதிரவ விகிதம் குறையும்.
• வெளிச்செல் இரத்த நாளத்தின் வழியே இரத்தம் இயல்பாக குறைந்த விசையுடன் வெளியேறும். இதன் சுருக்கம் வடிதிரவம் உருவாக்கும் 'விகிதத்தை பாதிக்காது
23. உயிரியல் சொற்களை கீழ்க்காணும் சொற்றொடர்களுடன் அடையாளம் காண்க. கழிவுநீக்கம், கிளாமருலஸ், சிறுநீர்ப்பை, கிளாமருலார் வடிதிரவம், சிறுநீர் நாளங்கள், சிறுநீர், பௌமானின் கிண்ணம், சிறுநீரக மண்டலம், மீண்டும் உறிஞ்சுதல், மிக்ட்யூரிஷன், சவ்வூடு பரவல், புரதங்கள் சமநிலை பேணுதல்.
i) சிறுநீர்ப்பையில் சேகரமாகும் திரவம்
சிறுநீர்
ii) பௌமானின் கிண்ணம் வழியாக இரத்தம் வடிகட்டப்படும் போது உருவாவது
கிளாமருலார் வடிதிரவம்
iii) சிறுநீர் தற்காலிகமாக சேமிக்கப்படல்
சிறுநீர்ப்பை
iv) இரத்த நுண்நாளங்களால் பின்னப்பட்ட பந்து
கிளாமருலஸ்
v) தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றல்
கழிவு நீக்கம்
vi) ஒவ்வொன்றும் கிளாமருலஸைக் கொண்டுள்ளது
பௌமானின் கிண்ணம்
vii) சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைச் சுமந்து செல்கிறது
சிறுநீர் நாளம்
viii) சிறுநீர் கழித்தலுக்கான அறிவியல் பெயர்
மிக்ட்யூரிஷன்
ix) இரத்தத்திலும், திசு திரவத்திலும் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்துதல்
சவ்வூடுபரவல்
x) சிறுநீரகங்கள், சிறுநீர் நாளங்கள் மற்றும் சிறுநீர்ப்பையைக் கொண்டுள்ளன.
சிறுநீரக மண்டலம்
xi) கிளாமருலார் வடிதிரவத்திலிருந்து தேவையான (பயனுள்ள) பொருட்களை நீக்குதல்
மீண்டும் உறிஞ்சுதல்
xii) இரத்தத்தில் மட்டும் காணப்பட்டு, கிளாமருலார் வடிதிரவத்தில் காணப்படாத கரைபொருள் எது?
பிளாஸ்மா புரதம்
24. யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்குக் கழிவுகளின் நச்சுத்தன்மை மற்றும் நீர்ப்புத் தேவையை எது நிர்ணயிக்கிறது? இது எதன் அடிப்படையில் வேறுபடுகிறது? மேற்கண்ட கழிவு நீக்க முறைகளை மேற்கொள்ளும் உயிரிகளுக்கு உதாரணம் கொடு.
• யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்குக் கழிவுகளின் நச்சுத்தன்மை மற்றும் நீர்ப்புத் தேவையை வாழிடம் நிர்ணயிக்கிறது.
• அம்மோனியா வெளியேற்ற அதிக நீர் தேவைப்படுகிறது. அம்மோனியாவை வெளியேற்றும் உயிரிகள் அம்மோனியா நீக்கிகள் (உதாரணம்) மீன்கள் இரு வாழ்விகள்
• யூரிக் அமிலப் படிகங்கள் வெளியேற்ற குறைந்த அளவு நீர் தேவைப்படும். யூரிக் அமிலத்தை கழிவு நீக்க பொருளாக கொண்ட உயிரிகள் யூரிக் அமில நீக்கிகள் (உதாரணம்) ஊர்வன, பறப்பன, பூச்சிகள், நிலவாழ் நத்தைகள்.
• யூரியாவை கழிவு நீக்கப் பொருளாக கொண்ட உயிரிகள் யூரியா நீக்கிகள்
பல்வேறு விலங்கு குழுக்களின் கழிவுநீக்கப் பொருட்கள்
25. புரோட்டோ நெஃப்ரிடியாக்களை மெட்டா நெஃப்ரிடிடயாக்களிடமிருந்து வேறுபடுத்துக
.
26. இருவாழ்வி மற்றும் முதிர் உயிரிகள் வெளியேற்றும் நைட்ரஜன் கழிவுப் பொருள்கள் யாவை?
யூரியா இருவாழ்விகளின் முதிர் உயிர்களின் கழிவுப் பொருள் ஆகும். இருவாழ்விகளின் இளம் உயிரிகளின் கழிவுப் பொருள் - அம்மோனியா
27. மனித உடலில் சிறுநீர் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
சிறுநீர் உருவாக்கத்தில்
I. கிளாமருலார் வடிகட்டுதல்
II. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்
III. குழல்களினால் சுரத்தல்
ஆகிய மூன்று நிலைகள் உள்ளன.
I. கிளாமருலார் வடிகட்டுதல்
• சிறுநீரகத்தமனி மூலம் இரத்தம் கிளாமருலஸை சென்றடைகிறது. இரத்தத்தில் அதிக அளவு நீர் கூழ்மபுரதங்கள் சர்க்கரைகள் உப்புகள் மற்றும் நைட்ரஜன் கழிவுப் பொருட்கள் உள்ளன.
• இரத்தத்தை வடிகட்டும் நிகழ்வு கிளாமருலஸில் நடைபெறுகிறது.
• கிளாமருலஸில் உள்ள இரத்த நுண்/ நாளங்களை விட்டு வெளியேறும் திரவம் பௌமானின் கிண்ணத்தை அடைகிறது. இத்திரவத்திற்கு கிளாமருலார் வடிதிரவம் என்று பெயர்.
• இது 24 மணி நேரத்தில் 170 லி-180 லிட்டர் வரை உருவாகிறது.
• உட்செல் இரத்த நாளத்தின் வழியாக அதிக விசையுடன் கிளாமருலஸீக்குள் நுழையும் இரத்தம் வெளிச்செல் இரத்த நாளத்தின் வழியே வெளியேறும் போது விசை குறைகிறது. உட்செல் இரத்தநாளம் வெளிச்செல் இரத்தநாளத்தை விட அகன்றது. இதனால் ஏற்படும் நீர்ம அழுத்தம் 55m Hg; 5nm ஐ விட பெரிய மூலக்கூறுகள் குழலுக்குள் நுழைய முடிவதில்லை காரணமாகும்.
• இரத்தத்தில் உள்ள பொருள்கள் வெளியேற கிளாமருலார் நீர்ம அழுத்தமே காரணமாகும் கிளாமருலார் இரத்த அழுத்தம் 55m Hg
• இரத்த நுண் நாளங்களின் பிளாஸ்மா புரதங்கள் இரண்டு எதிர்விசைகளை அளிக்கின்றன.
• 1.கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் -30mm Hg
• நீர்ம அழுத்தம் - 15m Hg
• இவ்விரண்டு அழுத்தங்களும் சேர்ந்து 45mm Hg (30mm Hg + 15mm H g= 45mm Hg)
• மீதமுள்ள 10 mm Hg நிகர அழுத்தமே சிறுநீரக நுண் வடிகட்டுதல் நிகழ்வுக்கு காரணமாகின்றன.
• நிகர வடிகட்டலுக்கான அழுத்தம் = கிளாமருலாரின் நீர்ம அழுத்தம்-(கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் + கிளாமருலர் கிண்ணத்தின் நீர்ம அழுத்தம்)
• =55mm Hg - 45mm Hg=10mm Hg
• கிளாமருலஸிலிருந்து பௌமானின் கிண்ணத்திற்குள் நுழையும் வடிதிரவம் முதல்நிலை சிறுநீர் எனப்படும்
இரத்த பிளாஸ்மா மற்றும் கிளாமருலார் வடிதிரவத்திலுள்ள பொருட்களின் அடர்த்தி செறிவு
II. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்
• ஒருநாளில் உருவாகும் வடிதிரவத்தின் அளவு சுமார் 170 லிட்டர் முதல்180 லிட்டர் ஆகும்.
• சிறுநீர் வெளியேற்றம் ஒரு நாளில் சுமார் 1.5 லி ஆகும். 99% வடிதிரவம் மீள உறிஞ்சப்படுகிறது.
III. அண்மைச் சுருள் நுண்குழலில் மீள உறிஞ்சப்படுதல்
• குளுக்கோஸ், லாக்டிக் அமிலம், அமினோ அமிலங்கள், சோடியம் அயனிகள், நீர் ஆகியவை வடிதிரவத்திலிருந்து மீள உறிஞ்சப்படுகின்றன.
• சோடியம் பொட்டாசியம் உந்தத்தால் செயல்மிகு கடத்தல் மூலம் இங்கு உறிஞ்சப்படுகிறது. மிகச் சிறிய அளவில் யூரியா மற்றும் யூரிக் அமிலம் மீள உறிஞ்சப்படுகின்றன.
ஹென்லே வளைவில் மீள உறிஞ்சுதல்
• ஹென்லே வளைவில் உள்ள கீழிறங்கு தூம்பின் சுவர்களில் அக்வாபோரின்கள் இருப்பதால் நீர் ஊடுருவிச் செல்லும் உப்புக்களால் ஊடுருவிச் செல்ல இயலாது.
• கீழிறங்கு தூம்பின் வழியாக நீர் வெளியேறுவதன் காரணமாக சோடியம் மற்றும் குளோரைடு அயனிகளின்அடர்த்தி வடிதிரவத்தில் அதிகமாக உள்ளது.
• ஹென்லே வளைவின் மேலேறு தூம்பின் சுவர்கள் நீரை அனுமதிப்பதில்லை. NaCl மற்றும் K அயனிகளை ஊடுருவ அனுமதிக்கிறது.
சேய்மை நுண்குழல்
• நீரை மீள எடுத்து குழலுக்குள் பொட்டாசியத்தைச் சுரக்கிறது.
• எனவே சேய்மை சுருள் நுண்குழல் திரவத்தில் நீர், சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவை எஞ்சியுள்ளது.
• இரத்தத்தில் pH ஐ ஒழுங்குபடுத்த பைகார்பனேட்கள் மீள உறிஞ்சப்படுகிறது.
• சேகரிப்பு நாளத்தின் வழியே நீர் ஊடுருவிச் செல்கிறது. பொட்டாசியம் அயனிகள் செயல்மிகு கடத்தல் மூலம் குழலினுள் விடப்படுகிறது.
• Na மீள உறிஞ்சப்படுகிறது. எனவே அடர்த்தி மிக்க சிறுநீர் உருவாகிறது.
III. குழல்களில் சுரத்தல்
• சேகரிப்பு நாளத்தில் விடிதிரவம் நுழையும் பொழுது நீர் உறிஞ்சப்படுவதால் அடர்த்தி அதிகமாக உயர் உப்படர்வு தன்மை கொண்ட சிறுநீர் உருவாகின்றது.
• குழலில் உள்ள வடிதிரவத்தில் வெளிவிடப்படுகின்றன ஒவ்வொரு ஹைட்ரஜன் அயனிக்கும் ஒரு சோடியம் அயனி குழச்செல்களினால் உறிஞ்சப்படுகிறது.
• இவ்வாறு சுரக்கப்பட்ட ஹைட்ரஜன் பை - கார்பனேட்டுகள், பை-பாஸ்பேட்டுகள் மற்றும் NH3 உடன் இணைந்து கார்பானிக் அமிலம் (H2CO3) மற்றும் பாஸ்பாரிக் அமிலமாக (H3PO4) மாறுகிறது.
• ஹைட்ரஜன் அயனி நிலைப்படுத்தப்பட்டதால் அவை மீள உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது.
28. புறணிப்பகுதி நெப்ரான்களை மெடுல்லாப்பகுதி நெப்ரான்களிடமிருந்து வேறுப்படுத்துக.
• சிறுநீரக நுண் குழல்களின் அண்மை சுருள் நுண்குழல் மற்றும் சேய்மை சுருள் நுண்குழல்கள் புறணிப்பகுதியிலும் ஹென்லியின் வளைவு மெடுல்லரி பகுதியிலும் காணப்படுகின்றது.
29. சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய் எது? எடுத்துச் செல்லப்படும் இரத்தம் தமனி இரத்தமா சிரை இரத்தமா?
I. சிறுநீரக தமனி
II. தமனி இரத்தம்
30. சிறுநீரகத்திலிருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய் எது?
• சிறுநீரக சிரை சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை சிறுநீரகத்திலிருந்து கீழ்பெருஞ்சிரைக்கு எடுத்துச் செல்கிறது.
31. குழல்களில் சுரத்தல் என்றால் என்ன? சிறுநீரக நுண்குழல்களால் சுரக்கப்படும் சில பொருட்களுக்கு உதாரணம் கொடு
I. கிளாமரூலார் நுண் வடிகட்டலில், வடிகட்டப்படாத பொருள்கள், நெஃப்ரானைச் சுற்றியுள்ள இரத்த நுண்குழல்களில் உள்ளது.
• இப்பொருள்கள் சேய்மை சுருண்ட நுண்குழல்கள் மூலம்;, இரத்தத்திலிருந்து மீண்டும் வடிதிரவத்திற்குள் உறிஞ்சப்படுகிறது.
II. சுரக்கப்படும் பொருள்கள்:
1. ஹைட்ரஜன்
2. பொட்டாசியம்
3. கிரியாட்டினின்
4. கரிம அமிலங்கள்
5. அம்மோனியா
6. பை கார்பனேட்கள்.
7. பை பாஸ்பேட்கள்
32. இரத்தக் கொள்ளளவு கட்டுப்பாட்டில் சிறுநீரகங்கள் எவ்வாறு பங்கேற்கின்றன. உடலின் இரத்தக் கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு இடைய உள்ள தொடர்பு யாது?
• இரத்தம் கொள்ளளவு குறையும் போது இரத்த அழுத்தம் குறைகிறது.
• இதை உணர்ந்த ஹைப்போதலாமஸின் ஊடுகலப்பு உணர்விகள் தூண்டப்பட்டு ஆன்டிடையூரிடிக் ஹார்மோனை நியூரோஹைப்போபைசிஸ் வெளியிடப்படுகிறது.
• சேகரிப்பு நாளம் மற்றும் சேய்மை சுருள் நுண்குழல்களின் செல் பரப்புகளில் அக்குவோபோரின்கள் அதிகரித்து நீர் மீள உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
33. சிறுநீரகப் பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் யாவை?
• ஆன்ஜியோடென்சின் II
• ஆல்டோஸ்டிரோன்
• ரெனின்
34. சிறுநீர்ப்பெருக்கெதிர் ஹார்மோனின் பணி யாது? அது எங்கே உருவாக்கப்படுகிறது? இதன் சுரப்பை அதிகரிக்கவும், குறைக்கவும்? தூண்டுவது எது?
• சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோனின் பணி, சிறுநீர் உடலிலிருந்து வெளியேறுவதை கூட்டி அல்லது குறைப்பதாகும்.
• ஆண்டி டையூரிடிக் ஹார்மோன் எனப்படும். வாஸோ பிரஸ்ஸின் சிறுநீர்ப் பெருக்கெதிர் ஹார்மோன் ஆகும்.
• இது நியூரோ ஹைபோபைசிஸ் உற்பத்தி செய்கிறது.
35. சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரானின் விளைவு யாது? மற்றும் அது எங்கே உருவாக்குகிறது?
• ஆன்ஜியோடென்சின் IIன் தூண்டுதல் அட்ரீனல் கார்டெக்ஸில் இருந்து ஆல்டோஸ்டீரான் சுரக்கிறது.
• இது சேய்மை சுருள் நுண்குழல் மற்றும் சேகரிப்பு நாளத்தில் நீர், சோடியம் அயனி மீள உறிஞ்சப்படுதல் பொட்டாசியம் அயனி வெளியேற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
• இதனால் கிளாமருலார் இரத்த அழுத்த வடிதிறன் அதிகரிக்கின்றன. இது ரெனின் ஆஞ்சியோடென்சின் ஆல்டோஸ்டிரான் மண்டல முறை எனப்படும்.(RAAS)
36. சிறுநீரகப் பணிகளை நெறிப்படுத்தும் ஹார்மோனைச் சுரப்பதில் இதயத்தின் பங்கை விளக்குக. அந்த ஹார்மோனின் பெயர் என்ன?
• இதயத்திலுள்ள ஏட்ரியல் செல் அதிகமாக விரிவடைவதன் காரணமாக ஏட்ரியத்திற்குள்
• அதிகமாக இரத்தம் பாய்கிறது. இதன் விளைவாக ஏட்ரியல் நேட்ரியூட்டிக் பெப்டைடு வெளிப்படைகிறது.
• இது சிறுநீரகத்தை அடைந்து அங்கு Na+ அயனிகளின் வெளியேற்றத்தையும் கிளாமருலஸீக்குள் இரத்தம் பாய்வதையும். அதிகரிக்கின்றது. மேலும் இவை இரத்தக் குழாய் விரிவாக்கியாகச் (vasodilator) செயல்பட்டு உட்செல் கிளாமருலார் தமனிகளை விரிவடையச் செய்கின்றன. அல்லது வெளிச் செல் கிளாமருலார் தமனிகள் மீது இரத்தக் குழாய் சுருக்கியாகச் (vaso constrictor) செயல்பட்டு அவற்றைச் சுருங்கச் செய்கின்றன.
• ஏட்ரியல் நாட்ரியூரிடிக் பெப்டைடு (ANP) அல்லது ஏட்ரியல் நாட்ரியூரிடிக் காரணி (ANF) ஆகும்.