Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

வேதிய ஒருங்கிணைப்பு | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 11 : Chemical Coordination and Integration

11 வது விலங்கியல் : பாடம் 11 : வேதிய ஒருங்கிணைப்பு

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 11 : வேதிய ஒருங்கிணைப்பு : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு:

I. சரியான விடையைத் தேர்ந்தெடு


1. உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.

) ஒழுங்குபடுத்துதல் 

) உடல் சமநிலைபேணுதல்

) ஒருங்கிணைப்பு 

) ஹார்மோன்களின் கட்டுப்பாடு

விடை: ) உடல் சமநிலை பேணுதல்


2. கீழே தரப்பட்டுள்ள இணையில் எது முழுமையான நாளமில்லாச் சுரப்பி இணையாகும்?.

) தைமஸ் மற்றும் விந்தகம்

) அட்ரினல் மற்றும் அண்டகம் 

) பாராதைராய்டு மற்றும் அட்ரினல் 

) கணையம் மற்றும் பாராதைராய்டு

விடை: ) பாராதைராய்டு மற்றும் அட்ரினல் 


3. கீழ்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியின் தாக்கத்தினால் சுரப்பது இல்லை.

) தைராக்ஸின்

) இன்சுலின்

) ஈஸ்ட்ரோஜன்

) குளுக்கோகார்டிகாய்டுகள்

விடை: ) இன்சுலின்


4. மனித விந்தகத்தில் விந்தணுவாக்கம் எதனால் கட்டுப்படுத்தப்படுகின்றது?

) லூட்டினைசிங் ஹார்மோன்

) ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன் 

) ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன் மற்றும் புரோலாக்டின்

) வளர்ச்சி ஹார்மோன் மற்றும் புரோலாக்டின் 

விடை: ) லூட்டினைசிங் ஹார்மோன்


5. இரத்தச் சீரத்தில் கால்சியம் அளவை நெறிப்படுத்துவது

) தைராக்ஸின்

) FSH

) கணையம்

) தைராய்டு மற்றும் பாராதைராய்டு

விடை: ) தைராய்டு மற்றும் பாராதைராய்டு


6. அயோடின் கலந்த உப்பு இதனைத் தடுத்தலில் முக்கியப்பங்காற்றுகிறது

) ரிக்கெட்ஸ்

) ஸ்கர்வி

) காய்டர்

) அக்ரோமெகாலி

விடை: ) காய்டர்


7. நோய்த்தடைக்காப்புடன் தொடர்புடைய சுரப்பி எது?

) பீனியல் சுரப்பி

) அட்ரினல் சுரப்பி

) தைமஸ் சுரப்பி 

) பாராதைராய்டு சுரப்பி 

விடை: ) தைமஸ் சுரப்பி 


8. கீழ்வரும் இனவுறுப்பு ஹார்மோன்கள் பற்றிய கூற்றுகளில் சரியானதைக் குறிப்பிடவும்,

) LH துண்டுதலால் லீடிக் செல்கள் டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்கின்றன

) கார்ப்பஸ் லூட்டியத்தால் சுரக்கப்படும் புரோஜெஸ்டிரோன் குழந்தை பிறப்பின் போது பின் இடுப்புத் தசைநாண்களை மென்மையாக்குகின்றது.

) செர்டோலி செல்கள் மற்றும்கார்ப்பஸ் லூட்டியம் ஆகியவை புரோஜெஸ்டிரோனை உற்பத்தி செய்கின்றன

) உயிரியல் அடிப்படையில் கார்பஸ் லூட்டியம் உருவாக்கும் புரேஜெஸ்டிரோனும் தாய்சேய் இணைப்புப்படலம் உருவாக்கும் புரோஜேஸ்டிரோனும் மாறுபடுகின்றது.

விடை: ) LH துண்டுதலால் லீடிக் செல்கள் டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்கின்றன.


9. வளர்ச்சி ஹார்மோன் மிகை சுரப்பால் குழந்தைகளுக்குத் தோன்றுவது.

) கிரிடினிசம் 

) இராட்சதத்தன்மை 

) கிரேவின் நோய்

) டெட்டனி

விடை: ) இராட்சதத்தன்மை 


10. ஒரு கருவுற்றபெண் குழந்தையை பெற்றுள்ளார். அக்குழந்தை குட்டையான வளர்ச்சி, மூளைவளர்ச்சி குறைபாடு, குறைந்த அறிவாற்றல் திறன், இயல்புக்கு மாறான தோல் ஆகிய அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம்.

) குறைந்த அளவு வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு

) தைராய்டு சுரப்பியில் புற்று நோய்

) பார்ஸ் டிஸ்டாலிஸ் மிகைசுரப்பு

) உணவில் அயோடின் பற்றாக்குறை

விடை: ) குறைந்த அளவு வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு


11. எந்த அமைப்பால் ஹைபோதலாமஸ் முன்பகுதி பிட்யூட்டரியுடன் இணைந்துள்ளது.

). நியூரோஹைபோபைஸிஸின் டென்ட்ரைட்டுகள்

) நியூரோஹைபோபைஸிஸின்ஆக்ஸான்கள்

) பெருமூளைப் பகுதியில் இருந்து வரும்வெண்மை இழைப் பட்டைகள்

) ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு 

விடை: ) ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு 


12. கீழ்வருவனவற்றுள் சரியான கூற்று எது

) கால்சிடோனின் மற்றும் தைமோசின் ஆகியவை தைராய்டு ஹார்மோன்கள்

) பெப்சின் மற்றும் புரோலாக்டின் இரைப்பையில் சுரக்கின்றது.

) செக்ரிடின் மற்றும் ரொடாப்ஸின்ஆகியன பாலிபெப்டைடு ஹார்மோன்கள் ஆகும்

) கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டீரோன் ஆகியவை ஸ்டீராய்டு ஹார்மோன்கள் ஆகும்.

விடை: ) கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டீரோன் ஆகியவை ஸ்டீராய்டு ஹார்மோன்கள் ஆகும்.


13. கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் தைராய்டு சுரப்பி குறித்த வாக்கியங்களில் எது தவறானது எனக் கண்டுபிடி.

(i) இது RBC உருவாக்க நிகழ்வுகளைத் தடை செய்கிறது.

(ii) இது நீர் மற்றும் மின்பகுதிகளின்பராமரிப்புக்கு உதவுகின்றது.

(iii) இதன் அதிக சுரப்பு இரத்த அழுத்தத்தினை குறைக்கலாம்.

(iv) இது எலும்பு உருவாக்க செல்களைத் தூண்டுகிறது.

) (i) மற்றும் (ii) 

) (iii) மற்றும் (iv)

) (i) மற்றும் (iv)

) (i) மற்றும்(iii)

விடை: ) (i) மற்றும் (iii)

Tags : Chemical Coordination and Integration | Zoology வேதிய ஒருங்கிணைப்பு | விலங்கியல்.
11th Zoology : Chapter 11 : Chemical Coordination and Integration : Choose the Correct Answers Chemical Coordination and Integration | Zoology in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 11 : வேதிய ஒருங்கிணைப்பு : சரியான விடையை தெரிவு செய்க - வேதிய ஒருங்கிணைப்பு | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 11 : வேதிய ஒருங்கிணைப்பு