Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

கணினி அறிமுகம் | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. | 11th Computer Science : Chapter 1 : Introduction to Computers

11வது கணினி அறிவியல் : அலகு 1 : கணினி அறிமுகம்

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்

அலகு 1

கணினி அறிமுகம்

மதிப்பாய்வு

பகுதி - அ

 

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப் பொருள்

அ. வெற்றிடக்குழல்

ஆ. திரிதடையகம்

இ. ஒருங்கிணைந்த சுற்றுகள்

ஈ. நுண்செயலிகள்

[விடை: அ. வெற்றிடக்குழல்]

 

2. தற்காலிக நினைவகம் எது?

அ. ROM

ஆ. PROM

இ. RAM

ஈ. EPROM

[விடை: இ. RAM]

 

3. வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.

அ. விசைப்பலகை

ஆ. நினைவகம்

இ. திரையகம்

ஈ. சுட்டி

[விடை: இ. திரையகம்]

 

4. உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.

அ. அச்சுப்பொறி

ஆ. சுட்டி

இ. வரைவி

ஈ. படவீழ்த்தி

[விடை: ஆ. சுட்டி]

 

5. கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

அ. வெப்ப அச்சுப்பொறி

ஆ. வரைவி

இ. புள்ளி அச்சுப்பொறி

ஈ. மைபீச்சு அச்சுப்பொறி

[விடை: ஆ. வரைவி]

 

6. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

அ. தொடுதிரை

ஆ. திரையகம்

இ. ஒலி பெருக்கி

ஈ. அச்சுப் பொறி

[விடை: அ. தொடுதிரை]

 

7. ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.

அ. உடன் தொடக்கம்

ஆ. தண் தொடக்கம்

இ. தொடு தொடக்கம்

ஈ. மெய் தொடக்கம்

[விடை: அ. உடன் தொடக்கம்]

 

8. Post-ன் விரிவாக்கம்.

அ. Post on self Test

ஆ. Power on Software Test

இ. Power on Self Test

ஈ. Power on Self Text

[விடை: இ. Power on Self Test]

 

9. கீழ்வருவனவற்றுள் எது ஒரு முதன்மைநினைவகமாகும்?   

அ. ROM

ஆ. RAM

இ. Flash drive

ஈ. Hard disk

[விடை: ஆ. RAM]

 

10. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

அ. முதலாம்

ஆ. இரண்டாம்

இ. மூன்றாம்

ஈ. நான்காம்

[விடை: இ. மூன்றாம்]

 

Tags : Introduction to Computers | Computer Science கணினி அறிமுகம் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 1 : Introduction to Computers : Choose the correct answer Introduction to Computers | Computer Science in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 1 : கணினி அறிமுகம் : சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. - கணினி அறிமுகம் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 1 : கணினி அறிமுகம்