கணினி அறிமுகம் | கணினி அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Computer Science : Chapter 1 : Introduction to Computers
கணினி அறிமுகம்
பகுதி - ஆ
குறு வினாக்கள்
1. கணிப்பொறி என்றால் என்ன?
விடை: கணிப்பொறி
என்பது, கொடுக்கப்பட்ட கட்டளைகளை உள்ளீடாகப் பெற்று, அதிவேகமாகச் செயல்பட்டு, விரும்பிய வெளியீட்டை வழங்கும்
ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
2. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.
பல்வேறு வகைகளிலும் திரட்டப்படும் அடிப்படை செய்தித் துணுக்கு தரவு எனப்படும்.
(எ.கா) கவிதா, 16
தகவல் என்பது முடிவுகளை எடுக்கக் கூடிய உண்மைகளின் தொகுப்பாகும்.
(எ.கா) கவிதாவின் வயது 16
3. மையச் செயலகத்தின்
(CPU) பகுதிகள் யாவை?
விடை: மையச்செயலகத்தில்
மூன்று பகுதிகள் உள்ளன. அவை கட்டுப்பாட்டகம் (CU-
Control Unit), கணித ஏரணச் செயலகம் (ALU - Arithmetic and Logic Unit) மற்றும் நினைவகம் (MU-Memory
Unity) ஆகும்.
4. கணித ஏரண செயலகத்தின்(ALU)
செயல்பாடு யாது?
விடை: மையச்செயலகத்தின்
ஒரு பகுதியாக உள்ள கணித ஏரணச் செயலகம், பல கணிப்பீடு செயல்களைத் தரவின் மீது நிகழ்த்துகிறது. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் சுருக்க செயல்கள் போன்ற கணிதச் செயல்பாடுகளை கணித ஏரணச் செயலகம் செய்கிறது. மையச் செயலகத்தில் உள்ள உள் நினைவகத்தில்
இதன் விடை சேமிக்கப்படுகிறது. கணித ஏரணச் செயலகத்தின் தருக்கச் செயல் திறனே கணிப்பொறியின் முடிவெடுக்கும்
திறனை மேம்படுத்துகின்றன.
5. கட்டுப்பாட்டகத்தின்
செயல்களை எழுதுக.
விடை: மையச் செயலகம் - நினைவகம் மற்றும் உள்ளீடு / வெளியீடு சாதனங்களுக்கு இடையே
பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது. மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச்
செயல்பாடுகளையும் இது கட்டுப்படுத்துக்கிறது.
6. நினைவகத்தின்
செயல்பாடு யாது?
விடை: தரவு, தகவல் மற்றும் நிரல்களை தற்காலிகமாக
அல்லது நிரந்தரமாகச் சேமித்து வைக்க நினைவகம் உதவுகிறது. இதுவே நினைவகத்தின் செயல்பாடு
ஆகும்.
7. உள்ளீடு
மற்றும் வெளியீடு வேறுபடுத்துக.
உள்ளீடு என்பது அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது.
வெளியீடு என்பது பயனர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தகவலைத் தெரிவிக்கும்.
8. முதன்மை
நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?
விடை:
• அழியும் வகை நினைவுகளாகும்.
• மின்சாரம் இல்லாத போது இதில் தேக்கப்பட்ட தகவல்கள்
அழிந்துவிடும்.
• தகவல்களை நேரடியாக செயல்படுத்தும்.
எ.கா. RAM, ROM
• அழியா வகை நினைவகமாகும்.
• மின்சாரம் இல்லாத போது இதில் தேக்கப்பட்ட தகவல்கள் அழியாது.
• செயலகம் இதில் உள்ள தகவல்களை நேரடியாக செயல்படுத்தாது.
எ.கா. வன்வட்டு, குறுவட்டு, ப்ளுரே வட்டு, ஃபிளாஷ் நினைவகம்.
பகுதி - இ
சிறு வினாக்கள்
1. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?
விடை:
(i) வேலையை வேகமாக
செய்யும் திறன்
(ii) கணிப்பீடுகளை துல்லியமாக செய்யும் திறன்
(iii) பல்நிரல் செயலாக்கம்
(iv) ஒரே பணியை சலிப்பின்றி திரும்ப திரும்ப செய்யும் திறன்.
(v) பிழையற்ற செயல்பாடு.
(vi) அதிக நம்பகதன்மை உடையது.
(vii) கையடக்க சாதனம்
(viii) இணை செயலாக்கம்
(ix) செயற்கை நுண்ணறிவு
(x) நிபுணர் அமைப்பு
(ix) இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு
2. கணிப்பொறியின் பயன்பாடுகளை
எழுதுக.
விடை:
(i) வியாபாரம்
(ii) விளம்பரம்
(iii) காப்பீடு
(iv) கல்வி
(v) வங்கி
(vi) தொலைத்தொடர்பு
(vii) பொறியியல்
(ரோபாட்டிக்ஸ், நானோ தொழில்நுட்பம், உயிரிப் பொறியியல்)
3. உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன?
இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது. உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன.
(எ.கா) விசைப்பலகை, சுட்டி.
4. ஏதேனும் மூன்று வெளியீட்டு
சாதனங்களை விளக்குக.
விடை:
வரைவி : வரைவி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் ஆகும். இது தாள்களில் வரைகலை வெளியீட்டை அச்சிட பயன்படுகிறது. இது படங்களை வரைய ஒற்றை நிறம்
அல்லது பல வண்ணம் கொண்ட பேனாக்களைப் பயன்படுத்துகிறது.
ஒலிபெருக்கிகள் :
ஒலிபெருக்கிகள் குரல் ஒலியை (audio) வெளியிடுகிறது. பேச்சு இணைப்பாக்கம் மென்பொருளை
ஒலிபெருக்கியுடன் பயன்படுத்திக் கணிப்பொறி குரல் வெளியீட்டை வழங்க முடியும். விமான நிலையங்கள், பள்ளிகள், வங்கிகள், இரயில் நிலையங்கள் போன்ற பல இடங்களில்
இது மிகவும் பொதுவானதாக உள்ளது.
(iii) பல்லூடகப் படவீழ்த்தி:
பல்லூடகப் படவீழ்த்தி, கணிப்பொறி திரையக வெளியீட்டைப்
பெரிய திரையில் திரையிடப் பயன்படுகின்றது. இவைகள் வகுப்பறைகளில் அல்லது கூட்ட
அரங்குகளில் விளக்கக் காட்சிகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
5. ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி
வேறுபடுத்துக.
சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் அளவிடப்படும்.
சுட்டி தீர்மானிக்கப் நகர்வதைத் பந்துக்குப் பதிலாக ஒளிப்பயன் படுத்தப்படுகிறது.
ஒளியியல் சுட்டியில் மூன்று பொத்தான்கள் உள்ளது. ஒளியியல் சுட்டிக் குறைவான உணர்திறன் கொண்டது.
சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் அளவிடப்படும்
லேசர் சுட்டி அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது.
லேசர் சுட்டி
மிகுந்த உணர்திறன் கொண்டது மற்றும் எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும்.
6. தட்டல் வகை அச்சுப்பொறியைப்
பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
தட்டல் வகை அச்சுப் பொறியில் ஒரு சிறு கம்பி, மை நாடா (ribbon) மீது தட்டி ஒரு புள்ளியை
ஏற்படுத்தும் அல்லது ஒரு முழு எழுத்தை தட்டி அந்த எழுத்தை ஏற்படுத்தும். இந்த அச்சுப்பொறிகள் இயந்திர அழுத்தத்தைப்
பயன்படுத்தி ஒரே சமயத்தில் பல படிகள் எடுக்க வகை செய்கிறது. வரி அச்சுப்பொறி மற்றும் வரிபுள்ளி
அச்சுப்பொறி ஆகியவை தட்டல் வகைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
7. ஆறாவது
தலைமுறையின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
விடை:
(i) இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு
(ii) கணிப்பொறிகள் சிறந்ததாகவும் விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும்.
(iii) செயற்கை மனிதர்கள் (Robots) உருவாக்குதல்.
(iv) இயற்கை மொழி செயலாக்கம்,
(v) குரல் அறிதல்
மென்பொருள் உருவாக்குதல்.
8. திரையகத்தின் குறிப்பிடத்தக்க
சிறப்பியல்புகளைப் பற்றி எழுதுக.
விடை:
(i) தகவலைத் திரையில்
காட்டப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வெளியீட்டு சாதனம் திரையகம் ஆகும். இது தொலைக்காட்சி பெட்டியைப் போன்றது. திரையகத்தின் படங்கள் பிக்சல்ஸ் (PIXELS) எனப்படும் படக் கூறுகளுடன்
உருவாக்கப்படுகின்றன.
(ii) ஒரே வண்ண முடைய திரையகம் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காட்டுகிறது. வண்ணத் திரையகம் பல நிறங்களில்
காட்டுகிறது. சிஆர்டி(கத்தோட் ரே டியூப்) - CRT (Cathode
Ray tube), எல்சிடி (லிக்விட் கிரிஸ்டல் டிஸ்பிளே) LCD (Liquid Crystal Display) மற்றும் எல்ஈடி(லைட் ஏமிட்டிங் டையோட்கள்- LED (Light Emitting Diodes) போன்ற பல்வேறு வகையான திரையகங்கள் கிடைக்கின்றன. திரையகம் தகவலை விஜிஏ (ஒளி உரு வரைபட வரிசை)VGA
(Video Graphics Array) மூலம் திரையில் காட்டுகிறது. விசைப்பலகை திரையகத்துடன் தொடர்பு
கொள்ள ஒளிஉரு வரைபட அட்டை (Video Graphics Card) உதவுகிறது.
(iii) இது கணிப்பொறி மற்றும் திரையகத்தின் இடையே இடைமுகமாக செயல்படுகிறது. அண்மையில் உள்ள மதர்போர்ட்களில் உள்ளிணைந்த வரைபட அட்டை வழக்கமாக உள்ளது.
பகுதி - ஈ
நெடு வினாக்கள்
1. ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களைத்
தெளிவான விளக்கப் படத்துடன் விளக்கு.
விடை:
கணிப்பொறி என்பது வன்பொருள் மற்றும் மென்பொருளின்
கலவையாகும். கணிப்பொறியில் உள்ள பருபொருள்களான மதர்போர்ட் (motherboard), நினைவகம் (memory), திரையகம் (monitor) மற்றும் விசைப்பலகை
போன்றவை வன்பொருள் ஆகும். மென்பொருள் என்பது கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளை அல்லது கட்டளைகளின்
தொகுப்பு ஆகும்.
கணிப்பொறியில், கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பணியும், உள்ளீடு செயலாக்கம் வெளியீடு என்ற
சுழற்சியை (IPO-Input Process Output -
cycle) அடிப்படையாக கொண்டு செயலாற்றுகிறது.
(i) உள்ளீட்டகம்: உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது. உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு விசைப்பலகை, சுட்டிப் போன்றவை.
(ii) மையச் செயலகம்: மையச் செயலகம் என்பது, கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளைகளை, கணிப்பொறி புரிந்துக் கொள்ளும் வகையில் மாற்றி அதனை செயலாக்கம் செய்யும் முதன்மையான
பகுதியாகும். மையச் செயலகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை கட்டுப்பாட்டகம் (CU - Control Unit), கணித ஏரணச்
செயலகம் (ALU - Arithmetic and Logic Unit) மற்றும் நினைவகம் (MU - Memory Unit)
ஆகும்.
(iii) கணித ஏரணச் செயலகம்: மையச் செயலகத்தின்
ஒரு பகுதியாக உள்ள கணித ஏரணச் செயலகம், பல கணிப்பீடு செயல்களைத் தரவின் மீது நிகழ்த்துகிறது. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் சுருக்க செயல்கள் போன்ற கணிதச் செயல்பாடுகளை கணித ஏரணச் செயலகம் செய்கிறது.
(iv) கட்டுப்பாட்டகம்: மைய செயலகம் - நினைவகம்
மற்றும் உள்ளீடு/வெளியீடு சாதனங்களுக்கு
இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது.
(v) வெளியீட்டகம்: பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தகவலைத் தெரிவிக்கும் எந்தவொரு
வன்பொருளும் வெளியீட்டகம் எனப்படும். எடுத்துக்காட்டு: திரையகம், அச்சுப்பொறி போன்றவை.
(vi) நினைவகம்: முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம்நிலை நினைவகம் என இருவகை நினைவகங்கள்
உள்ளன. தரவு மற்றும் நிரல்
கட்டளைகள் நிறைவேற்றத் தயாராக இருக்கும்போது அதனைத் தற்காலிகமாகச் சேமிக்க முதன்மை
நினைவகம் பயன்படுகிறது. தரவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க இரண்டாம்நிலை நினைவகம் பயன்படுகிறது. முதன்மை நினைவகத்திற்கு எடுத்துக்காட்டு, நேரடி அணுகல் நினைவகம் (RAM - Random Access Memory) ஆகும். வன்வட்டு (Hard disk), குறுவட்டு (CD-ROM) மற்றும் டிவிடி ரோம் (DVD
ROM) போன்றவை இரண்டாம் நிலை நினைவகத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
2. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை
விளக்குக.
3. பின்வருபவற்றை விளக்குங்கள்.
அ. மைபீச்சு
அச்சுப்பொறி, ஆ.
பல்லூடகப் படவீழ்த்தி,
இ. பட்டைக்
குறியீடு/ QR குறியீடு
படிப்பான்.
விடை:
(அ) மைபீச்சு அச்சுப்பொறி:
மைப்பீச்சு அச்சுப்பொறிகள் கருஞ்சிவப்பு (Megenta), மஞ்சள் (yellow) மற்றும் சியான் (Cyan) உள்ளடக்கிய மைகுப்பியைப்
பயன்படுத்தி வண்ண சாயலை (color tones) உருவாக்குகிறது. ஒரு நிற வண்ணத்தில் (monochrome) அச்சிடுவதற்கு கருப்பு
மைகுப்பியை பயன்படுத்துகிறது. மைப்பீச்சு அச்சுப்பொறிகள் ஒரு காகிதத் தாளில் மின்னூட்டம் பெற்ற மையைத்
தெளிப்பதன் மூலம் செயல்படுகிறது. இதன் அச்சிடும் வேகம் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 1 முதல் 20 பக்கங்களை அச்சிடும் (PPM-Page Per Minute). மைப்பீச்சு அச்சுப்பொறிகள், வெப்பம் மூலம் மின்கலன் சூடாக்குவதால்
மை காகிதத்தில் குமிழ்களாக (bubbles) தெளிக்கப்படும் தொழில்நுட்பத்தை அல்லது தகைவு மின்சாரத்தை (piezoelectricity) பயன்படுத்தி
மின்சுற்றுகள் மூலம் கட்டுப்படுத்தப்படும் சிறிய மின்னோட்டங்கள் ஜெட் வேகத்தில், அச்சுப்பொறியின் உள்ளே மையைப்
பரப்புகின்றன.
(ஆ) பல்லூடகப் படவீழ்த்தி:
பல்லூடகப் படவீழ்த்தி, கணிப்பொறி திரையக வெளியீட்டைப்
பெரிய திரையில் திரையிடப் பயன்படுகின்றது. இவைகள் வகுப்பறைகளில் அல்லது கூட்ட
அரங்குகளில் விளக்கக் காட்சிகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
(இ) பட்டைக் குறியீடு/ QR படிப்பான்:
பட்டைக் குறியீடு என்பது வெவ்வேறு தடிமன் வரிசையில்
அச்சிடப்படும் ஒரு வடிவம் ஆகும். பட்டை குறியீட்டு படிப்பான், பட்டைக் குறியீட்டைப் படித்து
அவற்றை மின் துடிப்புகளாக (electric
pulses) மாற்றி கணிப்பொறி செயலகத்திற்கு அனுப்பும்
ஒரு கருவியாகும். கணிப்பொறியில் தகவலை விரைவாகவும் பிழையின்றிப் பதிவு செய்யவும் இது
பயன்படுகிறது. கியூ.ஆர் (Q.R. Quick Response) குறியீடானது, இரு பரிமாண பட்டைக் குறியீடாகும். இது ஒரு கேமரா மூலம் படிக்கப்பட்டுப்
படத்தை உணர்த்துகிறது.