எண்கள் | பருவம்-2 அலகு 2 | 2வது கணக்கு - எண்களை ஒப்பிடுதல் மற்றும் உருவாக்குதல் | 2nd Maths : Term 2 Unit 2 : Numbers
அலகு 2
எண்கள்
எண்களை ஒப்பிடுதல் மற்றும் உருவாக்குதல்
எண்களை ஒப்பிடுதல்
i) கொடுக்கப்பட்டுள்ள எண்சோடிகளில் பெரிய எண்ணை வண்ணமிடுக.
ii) கொடுக்கப்பட்டுள்ள எண்சோடிகளில் சிறிய எண்ணை ‘✔’ செய்க.
iii) கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்குச் சமமான எண்ணை ஒவ்வோர் எண் தொகுதியிலிருந்தும் இணைக்க.
மிகப் பெரிய மற்றும் மிகச்சிறிய எண்
(i) கொடுக்கப்பட்டுள்ள ஈரிலக்க எண்களை ஒப்பிடுவோம்.
20, 70, 90 ஆகிய எண்களை எடுத்துக்கொள்க.
இங்கே, 2 பத்துகள் என்பது 7 பத்துகளை விடச் சிறியது. 7 பத்துகள் என்பது 9 பத்துகளை விடச் சிறியது.
எனவே, கொடுக்கப்பட்டுள்ளவற்றில் 2 பத்துகள் என்பது மிகச்
சிறியது மற்றும் 9 பத்துகள் என்பது மிகப்பெரியது. 20 மிகச்சிறிய எண் மற்றும் 90 மிகப்பெரிய
எண் ஆகும்.
(ii) பத்தாம் இடத்தில் ஒரே எண்ணாக அமைந்த எண்களை ஒப்பிடுவோம். 25,23,26
இங்கே பத்துகள் சமமாக உள்ளன. எனவே ஒன்றுகளை ஒப்பிடுவோம். 23, 25, 26
3, 5 மற்றும் 6 ஆகிய எண்களிலிருந்து,
6 ஒன்றுகள் பெரியது; 3 ஒன்றுகள் சிறியது.
எனவே, 26 மிகப்பெரிய மற்றும் 23 ஒன்றுகள் மிகச் சிறிய எண்ணாகளாகும்.
(iii) ஒன்று மற்றும் பத்தாமிடத்தில் வெவ்வேறு எண்களைக் கொண்ட எண்களை ஒப்பிடுவோம். 25, 31, 40
பத்துகளில் உள்ள இலக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை ஒப்பிடுவதில் முக்கியத்துவம் ஏதும் இல்லை.
எனவே, இவற்றில் பத்தாமிடத்தை ஒப்பிட்டாலே போதுமானது: 25, 31, 40
இங்கு 4 பத்துகள் என்பது மிகப்பெரியது.
2 பத்துகள் என்பது மிகச்சிறியது.
எனவே, 40 மிகப்பெரிய எண்ணாகும், 25 மிகச் சிறிய எண்ணாகும்.
மிகப்பெரிய எண்ணை வட்டமிடுக.
i) 34, 35, 39.
ii) 30, 80, 50.
iii) 41, 79, 19, 48.
iv) 62, 54, 76, 67.
v) 75, 57, 63, 36.
மிகச் சிறிய எண்ணைக் கட்டமிடுக.
i) 70, 20, 10.
ii) 89, 82, 85.
iii) 35, 43, 17, 29.
iv) 59, 51, 15, 57.
v) 91, 19, 96, 69.
சரியான விடையை வட்டமிடுக.
1. 85 என்பது மிகப்பெரிய எண்ணாக உள்ள எண் தொகுதி 60, 85, 58.
(i) 90, 74, 85
(ii) 60, 85, 58
2. 50, 40, 18, 71 ஆகியவற்றில் மிகச் சிறிய எண் 18
(i) 18
(ii) 71
(iii) 50
(iv) 42
3. 62, 45, 75, 52 ஆகியவற்றில் மிகப் பெரிய எண் 62 ஆகும். இல்லை
(i) ஆம்
(ii) இல்லை
ஈரிலக்க எண்ணை உருவாக்குதல்
0 முதல் 9 வரையும் 10 முதல் 90 வரையும் உள்ள இரண்டு தொகுதி எண் அட்டைகளை
எடுத்துக்கொள்ளவும்.
2. மாணவர்களை அழைத்து ஒவ்வொரு தொகுதியிலும் ஓர் அட்டையை எடுக்கச் செய்க.
மீண்டும் இடம் பெறாமல் ஈரிலக்க எண்களை உருவாக்குதல்
45 என்ற ஈரிலக்க எண்ணைக் கருதுவோம். இதனை உருவாக்க 40 மற்றும் 5 என்ற இரண்டு எண் அட்டைகள் தேவை.
54 என்ற ஈரிலக்க எண்ணைக்கருதுவோம். இதனை
உருவாக்க (45இல் இலக்கம் மாறுபட்டுள்ளது). 50 மற்றும் 4 என்ற அட்டைகளைத்
தேர்ந்தெடுப்போம்.
மீண்டும் இடம் பெறும் ஈரிலக்க எண்களை உருவாக்குதல்
எடுத்துக்காட்டாக, 66 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம். இதனை உருவாக்க 60 மற்றும் 6 என்ற எண் அட்டையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மற்ற மாணவர்களை வெவ்வேறு எண் அட்டைகளை எடுக்கச் செய்து மீண்டும் இடம்பெறும் மற்றும் இடம்பெறாத ஈரிலக்க எண்களை உருவாக்கச் செய்யலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் அட்டைகளைப் பயன்படுத்தி 2 இலக்க எண்களை உருவாக்குக. உங்களுக்காக ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
இலக்கங்களை மீண்டும் பயன்படுத்தி ஈரிலக்க எண்களை உருவாக்குதல்
பத்துகள் 30 70 90
இலக்கங்களை ஒருமுறை மட்டும் பயன்படுத்தி ஈரிலக்க எண்களை உருவாக்குதல்
இரண்டு பகடைகளை எடுத்து உருட்டவும். உருவாக்கப்பட்ட ஈரிலக்க எண்களைக்குறித்துக் கொள்க. (ஒருமுறை மட்டும் மற்றும் மீண்டும் பயன்படுத்தி)
எடுத்துக்காட்டு : பகடையில் 2 மற்றும் 5 ஆகிய எண்கள் கிடைத்தால் அவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கொடுக்கப்பட்டுள்ள எண்களைப் பயன்படுத்தி அனைத்து ஈரிலக்க எண்களை உருவாக்கி அட்டவணையை நிறைவு செய்க.
ஈரிலக்க எண்களை நிறைவு செய்க. (இலக்கங்களை ஒருமுறை மற்றும் மீண்டும் பயன்படுத்தி)
6, 8 : 68, 88, 66, 86
5, 7 : 57, 75, 55, 77