எண்கள் | பருவம்-2 அலகு 2 | 2வது கணக்கு - எண்களை வரிசைப்படுத்துதல் | 2nd Maths : Term 2 Unit 2 : Numbers
எண்களை வரிசைப்படுத்துதல்
கவிதா தன்னுடைய பொம்மைகளைக் கீழே உள்ளவாறு வரிசைப்படுத்தினாள். அவள் அடுக்கிய வரிசைமுறையைக் கணித்துக் கூறுக.
கலைச் சொற்கள் : ஏறுவரிசை, இறங்குவரிசை
அகர வரிசைப்படி வரிசைப்படுத்துதல்
நாம் பொருட்களை அகர வரிசைப்படியும் வரிசைப்படுத்தலாம்.
அகர
வரிசையில் பொருட்களின் பெயர்கள். அம்மா, ஆடு, இலை, ஈ, உரல், ஊதல், எலி, ஏணி
கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை அகர வரிசைப்படுத்திக் கோடிட்ட இடத்தை நிரப்புக.
சங்கு, சாமந்தி, சீப்பு, சுண்டைக்காய், சூரியகாந்தி, செங்கல், சேவல்
ஆசிரியர் இந்தப் பயிற்சியை பல்வேறு பொருட்களைக் கொண்டு செயல்பாடாக விரிவாக்கம் செய்யலாம்.
உங்கள் வகுப்பில் பயிலும் மாணவர்களின் பெயர்களைச் சிறிய தனித்தனி அட்டையில் எழுதுக. அவற்றை அகர வரிசைப்படுத்துக.
ஆசிரியர் ஒரே எழுத்தில் தொடங்கும் பெயர்களை எப்படி வரிசைப்படுத்தலாம் என்று வழிமுறை கூறி உதவலாம்.
ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசை
ஏறுவரிசை அல்லது அதிகரிக்கும் வரிசை
எண்ணிக்கை முறையில் வாழைப்பழங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
எண்கள் மிகச்சிறிய எண்ணிலிருந்து மிகப்பெரிய எண்வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வரிசை முறைக்கு ஏறு வரிசை என்று பெயர்.
இறங்கு வரிசை அல்லது குறையும் வரிசை
எண்கள், மிகப்பெரிய எண்ணிலிருந்து மிகச்சிறிய எண்வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வரிசை முறைக்கு இறங்கு வரிசை என்று பெயர்.
தட்டுகளில் பழங்கள் எண்ணி வைக்கப்பட்டுள்ளன. நாம் அவற்றில் உள்ள பழங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரிசைப்படுத்தலாம்.
ஏறுவரிசை : 5, 7, 9, 10.
இறங்கு வரிசை : 10, 9, 7, 5.
1. கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணி அவற்றின் எண்ணிக்கையை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.
i)
விடை : 13, 8, 10, 12
ஏறுவரிசை : 8, 10, 12, 13
இறங்கு வரிசை : 13, 12, 10, 8
ii)
விடை : 10, 12, 6, 8
ஏறுவரிசை : 6, 8, 10, 12
இறங்கு வரிசை : 12, 10, 8, 6
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.
i) 9, 5, 7, 3
ஏறுவரிசை : 3, 5, 7, 9
இறங்கு வரிசை : 9, 7, 5, 3
ii) 4, 12, 15, 17
ஏறுவரிசை : 4, 12, 15, 17
இறங்கு வரிசை : 17, 15, 12, 4
iii) 8,6,10,3
ஏறுவரிசை : 3, 6, 8, 10
இறங்கு வரிசை : 10, 8, 6, 3
இரண்டு இலக்க எண்களில் ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசை
கொடுக்கப்பட்டுள்ள எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் அமைப்போம் : 34, 67, 84, 27, 49. ஆகியவற்றை ஏறு வரிசையில் அமைக்க அந்த எண்களின் பத்தாமிடத்தைப் பார்ப்போம். 34, 67, 84, 27, 49.
2 பத்துக்கள் என்பது மிகச்சிறியன, அதற்கு அடுத்த வரிசையில் அமைவது 3 பத்துக்கள். அதனைத் தொடர்ந்து வருவது 4 பத்துகள், 6 பத்துகள் மற்றும் 8 பத்துகள் ஆகும். இதே முறையில் நாம் எண்களை மிகச்சிறியதிலிருந்து மிகப்பெரியது வரை அமைக்கலாம்.
ஏறு வரிசை = 27, 34, 49, 67, 84.
மேற்கண்ட எண்களை இறங்கு வரிசையில் அமைக்க, அந்த எண்களை மிகப்பெரியதிலிருந்து மிகச்சிறியது வரை வரிசைப்படுத்தலாம்.
இறங்கு வரிசை = 84, 67, 49, 34, 27.
பயிற்சி
எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் அமைக்க.
i) 12, 24, 35, 17, 9.
விடை:
ஏறுவரிசை : 9, 12, 17, 24, 35
இறங்குவரிசை : 35, 24, 17, 12, 9
ii) 39, 70, 44, 86, 71.
விடை:
ஏறுவரிசை : 39, 44, 70, 71, 86
இறங்குவரிசை : 86, 71, 70, 44, 39
iii) 94, 81, 90, 70, 69.
விடை:
ஏறுவரிசை : 69, 70, 81, 90, 94
இறங்குவரிசை : 94, 90, 81, 70, 69
iv) 73, 54, 87, 17, 42.
விடை:
ஏறுவரிசை : 17, 42, 54, 73, 87
இறங்குவரிசை : 87, 73, 54, 42, 17
வகுப்பறைச் செயல்பாடு
* 0 - 9 வரை எழுதப்பட்ட எண்ணட்டைகளை எடுத்துக்கொள்க.
* மாணவர்களை 2 குழுக்களாகப் பிரிக்கவும். ஒரு குழுவிலிருந்து 3 மாணவர்களை அழைத்து எவையேனும் 3 எண்களை (எ.கா) 3,
2, 5 தேர்ந்தெடுத்து அவற்றைக் கொண்டு ஈரிலக்க எண்களை உருவாக்கச்
செய்தல் வேண்டும்.
* அடுத்த குழுவில் உள்ள மாணவர்கள் அவர்கள் உருவாக்கிய எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் அமைத்தல் வேண்டும்.
பின்வரும் எண்களை ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்திப் பூந்தொட்டிகளுக்கு எண்கள் இடுக.
72,17,88,15,93,10,60,53,21,44,39,78,65,49.
i) 21 - லிருந்து தொடங்கி எண்களின் ஏறு வரிசையை எழுதுக.
21, 39, 44, 49, 53, 60, 65
ii) 88 - லிருந்து தொடங்கி எண்களின் இறங்கு வரிசையை எழுதுக.
88, 78, 72, 65, 60, 53, 49