அளவீடுகள் | பருவம்-3 அலகு 3 | 2வது கணக்கு - எடையை ஒப்பிடுதல் | 2nd Maths : Term 3 Unit 3 : Measurement
அலகு 3
அளவீடுகள்
தெனாலிராமனும்
கிராமத்தவர்கள் இருவரும் அரசரைக் காணச் சென்றனர். அவர்கள் அரசருக்குப் பரிசுப்
பொருட்கள் எடுத்துச் சென்றனர்.
மேற்கண்ட கதையை மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அதிக எடை -
குறைவான எடை என்ற கருத்தை உணரச் செய்க.
ஊதுங்கள், கவனியுங்கள்
மேசையில்
இறகு,
இலையின் சருகு, சாவி, நகம்
வெட்டி ஆகியவற்றை வைக்கவும். பின்பு அப்பொருள்களை ஊதவும். நீங்கள் காண்பது என்ன?
இறகும், சருகும் பறந்துவிட்டன. ஆனால் நகம்
வெட்டியும், சாவியும் அப்படியே இருந்தன. ஏன்? இறகும், சருகும் இலேசானவை. சாவியும் நகம் வெட்டியும்
கனமானவை. எனவே, நாம் ஊதும்போது லேசான பொருள்கள்
பறந்துவிட்டன.
மேசையின்
மேல் உள்ள பொருட்களின் எடையை ஒப்பிடுக.
கரிக்கோல்
துருவியின் எடையானது புத்தகத்தின் எடையை விடக் குறைவு.
அழிப்பானின்
எடையைவிடக் கரிக்கோல் பெட்டியின் எடை அதிகம்.
மாணவர்கள் இரு பொருளையும் ஒரே நேரத்தில் தூக்கிப் பார்த்து எந்த
கையில் உள்ள பொருள் கனமானது அல்லது இலேசானது எனக் கூற ஆசிரியர் அறிவுறுத்தலாம்.
உங்கள்
புத்தகப் பையிலிருந்து பின்வரும் பொருட்களைத் தூக்கிப் பார்த்துப் பின்வரும்
வினாக்களுக்கு விடையளிக்கவும்.
i) எடை அதிகமுள்ள பொருளை குறியிடவும்.
ii) எடை குறைவான பொருளை வட்டமிடுக.
கீழே
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் எடையை ஒப்பிட்டு இலேசானதிலிருந்து கனமானவற்றிற்கு 1, 2 மற்றும் 3 என
வரிசைப்படுத்துக.