பருவம் 1 அலகு 1 | 1 ஆம் வகுப்பு கணக்கு - ஒப்பீடுகள் | 1st Maths : Term 1 Unit 1 : Geometry

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

ஒப்பீடுகள்

கலைச்சொற்கள் : உச்சி - அடி, உள்ளே - வெளியே, மேல் - அடியில், மேலே - கீழே, தொலைவில் - அருகில், பெரியது - சிறியது

அலகு 1

வடிவியல் 


ஒப்பீடுகள்


பயணம் செய்வோம்

கலைச்சொற்கள்

உச்சி - அடி

உள்ளே - வெளியே

மேல் - அடியில்

மேலே - கீழே

தொலைவில் - அருகில்

பெரியது - சிறியது


அமர்க அமர்க அமர்க

வகுப்பிற்கு உள்ளே அமர்க;

 

குதிக்க குதிக்க குதிக்க

தரையின் மேல் குதிக்க;


தவழ்க தவழ்க தவழ்க

மேசைக்கு அடியில் தவழ்க;

செல்க செல்க செல்க

மேசையிலிருந்து தொலைவில் செல்க;


வருக வருக வருக

கரும்பலகைக்கு அருகில் வருக;

விளையாடு விளையாடு விளையாடு

வகுப்பிற்கு வெளியே விளையாடு.

ஆசிரியருக்கான குறிப்பு

உச்சி - அடி, மேலே - கீழே, பெரியது - சிறியது ஆகிய இடம் சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி ஆசிரியர் பாடலைப் புனைந்து பாடலாம்.

 

உச்சி - அடி

 

கற்றல்

நீல நிறப் புத்தகம் அடுக்கின் உச்சியில் உள்ளது.

சிவப்பு நிறப் புத்தகம் அடுக்கின் அடியில் உள்ளது.


செய்து பார்

சறுக்கலின் அடியில் உள்ள சிறுவனை () செய்க.


உச்சியில் உள்ள பானையை () செய்க.


முயன்று பார்

இங்குள்ள பொருட்களைப் பையில் எவ்வாறு அடுக்குவாய்? ஏன்?


 

உள்ளே - வெளியே

 

கற்றல்


பப்பாளி விதை பப்பாளிக்கு உள்ளே உள்ளது.

முந்திரியின் கொட்டை முந்திரிக்கு வெளியே உள்ளது.

செய்து பார்

பட்டிக்கு உள்ளே இருக்கும் நாயை வட்டமிடுக.


கூட்டிற்கு வெளியே இருக்கும் குருவியை வட்டமிடுக.



முயன்று பார்

இந்த விளையாட்டுகளை எங்கே விளையாடுவாய்? ஏன்?


விடை : 

நான் மைதானத்திற்கு வெளியே கால் பந்து விளையாட்டை விளையாடுகிறேன்.

இந்த விளையாட்டுக்கு பந்தை உதைக்க இடம் தேவை, இது ஒரு உடல் விளையாட்டு.

நான் ஹால்/அறைக்குள் கேரம் விளையாடுகிறேன்.

 

மேல் - அடியில்

 

கற்றல்


ஆசிரியருக்கான குறிப்பு

தொப்பி வியாபாரியும் குரங்குகளும் கதையை ஆசிரியர் கூறி அதில் உள்ள கலைச்சொல்லான மேல்-அடியில் கருத்தினை வலுவூட்டலாம்.

செய்து பார்

மேசையின் அடியில் உள்ள பொம்மையினை வட்டமிடுக.


மெத்தையின் மேல் உள்ள பந்தினை வட்டமிடுக.


மகிழ்ச்சி நேரம்

பாலத்தின் மேல் செல்லும் தொடர் வண்டிக்கு பழுப்பு வண்ணமும் பாலத்தின் அடியில் செல்லும் கப்பலிற்கு சிவப்பு வண்ணமும் இடுக.


 

மேலே - கீழே

 

கற்றல்


நெற்றி மூக்கிற்கு மேலே உள்ளது.

வாய் மூக்கிற்குக் கீழே உள்ளது.

செய்து பார்

மரத்தின் கீழே பறக்கும் பறவையை வட்டமிடுக.


நாட்காட்டிக்கு மேலே உள்ள கடிகாரத்தை வட்டமிடுக.


மகிழ்ச்சி நேரம்

மேகங்களின் மேலே பறக்கும் விமானத்திற்குச் சிவப்பு நிறமும், கீழே பறக்கும் பட்டத்திற்கு ஆரஞ்சு நிறமும் இடுக.


 

தொலைவில் அருகில்


கற்றல்


பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் பள்ளி பேருந்து உள்ளது.

பேருந்து நிறுத்தத்திற்குத் சற்று தொலைவில் மகிழுந்து உள்ளது.

செய்து பார்

கால்பந்திற்கு அருகில் உள்ள சிறுவனின் சட்டைக்கு வண்ணமிடுக.


பால் கிண்ணத்திற்குத் தொலைவில் உள்ள பூனையை வட்டமிடுக.


முயன்று பார்

பந்தயத்தில் வெற்றி பெறப்போவது யார்? ஏன்?


விடை : ஆமை பந்தயத்தில் வெற்றி பெரும், ஏனெனில் அது வெற்றிக் கோட்டிற்கு அருகில் உள்ளது.

 

பெரியது - சிறியது

 

கற்றல்


சுறா பெரியது.

மீன் சிறியது.

செய்து பார்

பெரியதை () செய்க


சிறியதை () செய்க


மகிழ்ச்சி நேரம்

பெரிய கேக்கிற்குப் பழுப்பு நிறமும் சிறிய கேக்கிற்கு நீல நிறமும் தீட்டுக.


Tags : Geometry | Term 1 Chapter 1 | 1st Maths பருவம் 1 அலகு 1 | 1 ஆம் வகுப்பு கணக்கு.
1st Maths : Term 1 Unit 1 : Geometry : Comparisons Geometry | Term 1 Chapter 1 | 1st Maths in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : ஒப்பீடுகள் - பருவம் 1 அலகு 1 | 1 ஆம் வகுப்பு கணக்கு : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்