Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம்

இந்தியாவில் நிர்வாக அமைப்பு | அரசியல் அறிவியல் - இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் | 12th Political Science : Chapter 6 : Administrative Machinery in India

   Posted On :  03.04.2022 12:39 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : இந்தியாவில் நிர்வாக அமைப்பு

இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம்

இந்திய அரசமைப்பு உறுப்பு 148, ஒரு சுயாட்சி அதிகாரம் கொண்ட இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் (சி.ஏ.ஜி) அமைக்க வழிவகை வழங்கியுள்ளது.

இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம்

இந்திய அரசமைப்பு உறுப்பு 148, ஒரு சுயாட்சி அதிகாரம் கொண்ட இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் (சி.ஏ.ஜி) அமைக்க வழிவகை வழங்கியுள்ளது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரே இந்திய கணக்குக் மற்றும் தணிக்கைத் துறையின் தலைவர் ஆவார். அவரே அரசுக் கருவூலத்தின் பாதுகாவலர் எனலாம். மத்திய, மாநில அரசுகள் அனைத்தின் கீழ் இயங்கும் மொத்த நிதி அமைப்பினையும் கட்டுப்படுத்துகிறார்.

நிதி நிர்வாகம் தொடர்பில் இந்திய அரசமைப்பு வகுத்தளித்துள்ள விதிகள், இதனை அமலாக்கம் செய்ய நாடாளுமன்றம் இயற்றியுள்ள சட்டங்கள் ஆகியனவற்றின் படி கண்காணிப்பது இவர் கடமையாகும். இதனால் தான் அரசமைப்புப்படி "முக முக்கியத்துவம் கொண்ட அலுவலர் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்" என டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறினார். இந்திய அரசின் மக்களாட்சி அமைப்பின் அரண்களில் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரும் ஒருவர். இதர அரண்கள்: உச்ச நீதிமன்றம். தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகும்.



Tags : Administrative Machinery in India | Political Science இந்தியாவில் நிர்வாக அமைப்பு | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 6 : Administrative Machinery in India : Comptroller and Auditor General of India Administrative Machinery in India | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : இந்தியாவில் நிர்வாக அமைப்பு : இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் - இந்தியாவில் நிர்வாக அமைப்பு | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : இந்தியாவில் நிர்வாக அமைப்பு