நீர் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நீர் பாதுகாப்பு | 6th Science : Term 3 Unit 2 : Water
நீர் பாதுகாப்பு
புவியில் காணப்படும் நீரின் அளவு மாற்றத்திற்கு உட்படாமல் எப்போதும்
ஒரே மாதிரியாகவே உள்ளது. ஆனால் அந்நீரினை உபயோகிக்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும்
மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனை நாம் நீர்ப்
பற்றாக்குறை என அழைக்கிறோம்.
நீர்ப் பற்றாக்குறைக்கான காரணங்கள் யாவை?
மேலும் தெரிந்து கொள்க:
நீர்வாழ்
விலங்குகள்
பனிக்காலங்களில்,
குளிர்ந்த நாடுகளில் ஏரிகள் மற்றும் குளங்கள் குளிர்ச்சியடைந்து நீரின் மேற்பரப்பில்
திண்மநிலை உருவாகின்றன. இருந்தபோதிலும் பனிப்படலங்கள் பனிப்படலத்திற்கு கீழ் வசிக்கும்
நீர்வாழ் விலங்குகள் இறப்பதில்லை. ஏனெனில் மிதக்கும் பனிப்படலமானது ஒரு பாதுகாப்புப்
படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவதனை அனுமதிப்பதில்லை. எனவே நீரின்
மேற்பரப்பு மட்டுமே குளிர்ச்சியடைந்து பனியாக மாறுகின்றது. இக்காரணங்கள் நீர்வாழ் விலங்குகளுக்கு
சாதகமாக அமைந்து அவை உயிர்வாழ உதவுகின்றன.
நீர்ப் பற்றாக்குறைக்கான முதன்மையான காரணங்கள்
1. மக்கள் தொகைப் பெருக்கம்
2. சீரான மழை பொழிவின்மை
3. நிலத்தடி நீர்மட்டம் குறைதல்
4. நீர் மாசுபடுதல்
5. நீரினை கவனக்குறைவாக கையாளுதல்
நாம் நீர்ப் பற்றாக்குறையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள
கவனமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் இப்புவியில் உயிரினங்கள் வாழ இயலாத
சூழல் ஏற்படும். நீரினைக் கவனமாகவும், சிக்கனமாகப் பயன்படுத்தி அதனை வருங்கால தலைமுறையினருக்காகப்
பாதுகாத்தலையே நாம் நீர்ப் பாதுகாப்பு என்கிறோம்.
நீரைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
நீரைப் பாதுகாப்பதற்கென பின்பற்றப்படும் முதன்மையான இரு வழிமுறைகள்
1. நீர் மேலாண்மை
நீர்
மேலாண்மை பின்வரும் பின்வரும் காரணிகளைக் கொண்டுள்ளது
அ. மக்களிடையே நீர்நிலைகளில் கழிவுகளை வெளியேற்றுவதினால் ஏற்படும்
பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.
ஆ. நீரினைத் தூய்மைப்படுத்தி மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்
இ. விவசாயத்தில் அதிகப்படியான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின்
பயன்பாட்டினைக் குறைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மாசுபாட்டினைக் குறைத்தல்
ஈ. காடுகளைப் பாதுகாத்தல்
உ. சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்ற நவீன நீர்ப்பாசன
முறைகளை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம் பாசனத்திற்கு நீரினை சிக்கனமாகப் பயன்படுத்துதல்.
2. மழைநீர் சேகரிப்பு
மழைநீரினை நேரடியாகச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதலே மழைநீர்
சேகரிப்பு எனப்படும்.
மழைநீர் சேகரிப்பில் இரண்டு முறைகள் காணப்படுகின்றன.
அ. மழை எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலேயே சேகரித்தல்.
உதாரணமாக கட்டிடங்களின் மேல்தளத்திலிருந்து வரும் மழை நீரினை
சேகரித்தல்.
ஆ. ஓடும்
மழைநீரினை சேகரித்தல்
உதாரணமாக மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள்
அமைத்து சேகரித்தல்.
கூவம் ஒரு முகத்துவாரம்!
நீர்
நிலைகள், கடலைச் சந்திக்கும் ஈர நிலங்களுக்கு முகத்துவாரம் என்று பெயர். இதுநிலத்திலிருந்து
நன்னீரும் கடலிலிருந்து உப்பு நீரும் சந்திக்கும் இடமாகும். தனித்தன்மையான தாவர மற்றும்
விலங்கு வகைகளுக்கு உறைவிடமாக முகத்துவாரம் அமைகிறது.