அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு கணக்கு - எடையைக் கிராம் மற்றும் கிலோகிராமில் மாற்றுதல் | 3rd Maths : Term 2 Unit 3 : Measurements
எடையைக் கிராம் மற்றும் கிலோகிராமில் மாற்றுதல்
நாம் எடையை அளக்க மில்லிகிராம், கிராம் மற்றும் கிலோகிராமைப் பயன்படுத்துகிறோம்.
அதிக எடையுடைய பொருள்கள் கிலோகிராமில் அளக்கப்படுகின்றன. இதனைச் சுருக்கமாகக் கிகி எனக் கூறலாம்.
குறைவான எடையுள்ள பொருள்கள் கிராமில் அளக்கப்படுகின்றன. இதனைச் சுருக்கமாகக் கி எனக் கூறலாம்.
1கிலோ கிராம் = 1000 கிராம்
1 கிராம் = 1000 மில்லிகிராம்
எடையை மாற்றுதல்
உங்களுக்குத் தெரியுமா?
½ கிகி = 500 கிராம்
¼ கிகி = 250 கிராம்
¾ கிகி = 750 கிராம்
1கிகி = பத்து 100 கி பொட்டலங்கள்
=10 × 100 கி = 1000 கி
2கிகி = இருபது 100 கி பொட்டலங்கள்
=20 × 100 கி = 2000 கி
3கிகி அரிசியை நிரப்பத் தேவைப்படும் 100கி பொட்டலங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடவும்.
2 கிகி = 3000 கி
= 3000 கி / 100 கி
= 30 பொட்டலங்கள்