நீர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக | 9th Social Science : Geography: Hydrosphere

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நீர்க்கோளம்

வேறுபடுத்துக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நீர்க்கோளம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : வேறுபடுத்துக

VI. வேறுபடுத்துக.


1. உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்

விடை:

உயர் ஓதம்:

1. புவி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுகிறது.

2. சூரியன் மற்றும் சந்திரனின் கூட்டு ஈர்ப்பு விசையானது. கடலின் மேற்பரப்பு அலைகளை வலுவடையச் செய்து உயர் அலைகளை உருவாக்குகின்றன இவை . அமாவாசை மற்றும் முழு நிலவு தினங்களில் ஏற்படுகின்றன.

தாழ் ஓதம்:

1. புவி சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்துக் கோணத்தில் வரும்போது ஏற்படுகிறது.

2. இவற்றின் ஈர்ப்பு விசையானது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதினால் உயரம் குறைவான அலைகள் உருவாகின்றன. இவை சந்திரனின் முதல் மற்றும் இறுதி கால் பகுதியில் ஏற்படுகின்றன.

 

2. கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்

விடை:

கடலடிச் சமவெளி

1. ஆழ்கடல் 'சமவெளி அல்லது ஆபிசெல் சமவெளி என்பது ஆழ்கடலில் காணப்படும் கடலடிச் சமவெளி ஆகும்.

2. ஆறுகளினால் கொண்டுவரப்பட்ட களிமண், மணல் மற்றும் வண்டல்களால் உருவாக்கப்பட்ட அடர்ந்த படிவுகளால் ஆனதுநீராக உள்ள எவ்விதத் தோற்றங்களும் அற்ற மென் சரிவைக் கொண்ட பகுதி.

கடலடிப்பள்ளம்:

1. பெருங்கடலின் மிக ஆழமான பகுதி கடலடிப்பள்ளம் அல்லது அகழி எனப்படும்.

2. படிவுகள் இல்லாதது பெரும்பாலான அகழிகள் வன்சரிவுடன் 'V'வடிவத்தில் காணப்படுகின்றன.

Tags : Hydrosphere | Geography | Social Science நீர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Hydrosphere : Distinguish the following Hydrosphere | Geography | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நீர்க்கோளம் : வேறுபடுத்துக - நீர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நீர்க்கோளம்