Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | சுற்றுச்சூழல் இடர்பாடுகள் : வினா விடை

புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் - சுற்றுச்சூழல் இடர்பாடுகள் : வினா விடை | 12th Zoology : Chapter 13 : Environmental Issues

   Posted On :  14.04.2022 01:26 am

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 13 : சுற்றுச்சூழல் இடர்பாடுகள்

சுற்றுச்சூழல் இடர்பாடுகள் : வினா விடை

விலங்கியல் : சுற்றுச்சூழல் இடர்பாடுகள்: புத்தக வினாக்கள் / சரியான விடையைத் தேர்ந்தெடு / குறுகிய விரிவனா வினா விடை

மதிப்பீடு

புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு 


1. ‘சுத்தமான குடிநீர்ப் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை, இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது? 

அ) பிரிவு 12 

ஆ) பிரிவு 21 

இ) பிரிவு 31 

ஈ) பிரிவு 41

விடை: ஆ) பிரிவு 21 


2. 1992 இல் நடந்த ரியோ உச்சி மாநாட்டின் "செயல்திட்டம் 21” எதனுடன் தொடர்புடையது?

அ) நிலையான வளர்ச்சி 

ஆ) மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எதிர்த்துப் போராடுவது. 

இ) பசுமை இல்லவாயுக்களின் வெளிப்பாட்டை குறைக்கும் விதிமுறைகள். 

ஈ) சுத்தமான ஆற்றலுக்காக, வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்பங்களை பரிமாற்றுதல்.

விடை : அ) நிலையான வளர்ச்சி 


3. வனவிலங்கு பாதுகாப்பில் அசாதாரண தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட, கிராமப்புற பகுதிகளிலிருந்து வரும் தனிநபர்கள் அல்லது சமூகங்களுக்கு, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது எது? 

அ) இந்திராகாந்தி பர்யாவரன் புரஸ்கார்

ஆ) மேடினி புரஸ்கர், யோஜனா 

இ) அம்ரிதா தேவி பிஷ்னாய் விருது

ஈ) பித்தம்பர பன்ட் தேசிய விருது

விடை : இ) அம்ரிதா தேவி பிஷ்னாய் விருது 


4. ஸ்ட்ரேட்டோஸ்பியரின் ஒசோன் அடுக்கின் தடிமனை அளவிட பயன்படுவது  

அ) ஸீவர்ட்ஸ் அலகு (SU)

ஆ) டாப்லன் அலகு (DU) 

இ) மெல்சன் அலகு

ஈ) பீஃபோர்ட் அளவுகோல்

விடை : ஆ) டாப்லன் அலகு (DU) 


5. பூமியின் வளிமண்டலத்தில் மிக அதிகமாகக் காணப்படும் பசுமை இல்ல வாயு எது? 

அ) கார்பன் - டை - ஆக்சைடு

ஆ) நீராவி 

இ) சல்பர் டை ஆக்சைடு

ஈ) ட்ரோபோஸ்பெரிக் ஓசோன்

விடை: அ) கார்பன் - டை - ஆக்சைடு 


6. 2017 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன் - டை - ஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் நாடு எது? 

அ) அமெரிக்கா 

ஆ) சீனா 

இ) கத்தார்

ஈ) சவுதி அரேபியா

விடை: ஆ) சீனா 


7. நீர் நிலைகளில் உள்ள எண்ணெய் கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை பயன்படுத்தும் முறை 

அ) உயிரிய உருப்பெருக்கம்

ஆ) உயிரியத் தீர்வு 

இ) உயிரிய மீத்தேனாக்கம்

ஈ) உயிரிய சுருக்கம்

விடை : ஆ) உயிரியத் தீர்வு


8. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் தீங்கு வாய்ந்த புற ஊதாக் கதிர்களை தடுக்கும் ஸ்ட்ரேட்டோஸ்பியர் அடுக்கில் உள்ள ஒசோன் படலத்தின் சிதைவைத் தடுக்க உடன்படிக்கை 1989 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி ஒசோன் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

அ) மான்ட்ரியல் உடன்படிக்கை

ஆ) ஜெனிவா உடன்படிக்கை 

இ) கியோட்டோ உடன்படிக்கை

ஈ) நகோயா உடன்படிக்கை

விடை : அ) மான்ட்ரியல் உடன்படிக்கை 


9. பின்வருவனவற்றில் எது உணவுச்சங்கிலிகளின் ஊட்ட நிலைகளை கடக்கும்போது எப்போதும் குறைகின்றது? 

அ) எண்ணிக்கை 

ஆ) வேதிப்பொருள் 

இ) ஆற்றல்

ஈ) விசை 

விடை : இ)ஆற்றல் 


10. கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது? 

அ) தாமிரம் 

ஆ) வெள்ளி 

இ) பலேடியம் 

ஈ) தங்கம்

விடை : அ) தாமிரம் 


11. ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன் சேர்மங்களில் அதிகமாகக் காணப்படும் மூலக்கூறு எது? 

அ) ஹைட்ரஜன் 

ஆ) கார்பன் 

இ) குளோரின் 

ஈ) புளோரின்

விடை : இ) குளோரின் 


12. புகைப்பனி எதிலிருந்து பெறப்படுகிறது? 

அ) புகை 

ஆ) மூடுபனி 

இ) அ மற்றும் ஆ 

ஈ) அ மட்டும்

விடை : இ) அ மற்றும் ஆ


13. குடிநீரில் அதிக அளவு புளுரைடு ------------------ ஐ ஏற்படுத்துகிறது. 

அ) நுரையீரல் நோய் 

ஆ) குடல் தொற்றுகள் 

இ) புளுரோஸிஸ் 

ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை

விடை : இ) புளுரோஸிஸ்


14. விரிவாக்கம் செய்க. 

அ) CFC 

ஆ) AQI

இ) PAN 

CFC - குளோராபுளுரோ கார்பன் 

AQI - காற்று தரக்குறியீட்டு எண்

PAN - பெராக்சி அசிட்டைல் ஹைட்ரேட் 


15. புகைப்பனி என்றால் என்ன? அது நமக்கு எந்த வகையில் தீங்களிக்கின்றது?

* புகைப்பனி என்பது காற்றில் காணப்படும் சிறிய துகள்களினால் ஏற்படும். 

* புகை மற்றும் மூடுபனி என்ற இரு சொற்களின் கலவையாகும். 

தீய விளைவுகள் : 

* காற்றின் ஊடே காண்பு திறனைக் குறைக்கிறது.

* ஆஸ்த்மா நோயுடைய மக்களின் சுவாசத்தை கடினமாக்குகிறது. 


16. வீடுகள், பள்ளி அல்லது சுற்றுலாத் தலங்களில் உன்னால் உருவாக்கப்படும் கழிவுகளைப் பட்டியலிடுக. அவற்றை மிக எளிதாகக் குறைக்க முடியுமா? எந்த வகைக் கழிவுகளை குறைப்பது மிகக் கடினம் அல்லது இயலாது? 

* நெகிழிபேப்பர், காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள், ஒருமுறை பயன்படக்கூடிய சோப்பு தட்டு, கரண்டி.

* இவைகளை சரியான அளவில் பயன்படுத்தி அவைகளின் பயன்பாட்டினை குறைக்கலாம்

* பேப்பரின் இரண்டு பக்கங்களிலும் எழுதுவதன் மூலமும், மறுசுழற்சி செய்த பேப்பர்களை பயன் படுத்துவதால் அதன் பயன்பாட்டை குறைக்கலாம். 

* நெகிழி மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதால் அதன் பயன்பாட்டை குறைக்கலாம். நெகிழிபைக்களுக்கு பதிலாக உயிரியச்சிதைவடையக்கூடிய சணல் பைகளை பயன்படுத்துவதால் பள்ளி மற்றும் சுற்றுலாக்களில் போது ஏற்படும் கழிவுகளை கட்டுப்படுத்தலாம். 

* வீடுகளில் குளிப்பதற்கு சமைப்பதற்கு பயன்படும் தண்ணீ ரை குறைப்பதன் மூலம் வீட்டுக்கழிவுகளின் அளவை குறைக்கலாம். 

* உயிரியச் சிதைவடையாத நெகிழி, உலோகம் உடைந்த கண்ணாடி போன்றவைகளை குறைப்பது கடினம் ஏனெனில் அவைகளை நுண்ணுயிரிகள் முழுவதும் சிதைக்க முடிவதில்லை. 


17. உலக வெப்பமயமாதலின் தாக்கம் மற்றும் விளைவுகளை விவாதி, அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? 

பசுமை இல்ல வாயுக்களை CO, மீத்தேன் நைட்ரஸ் ஆக்சைடு ஒசோன் மற்றும் குளோரோ புளோரோ கார்பன்கள் போன்ற செயற்கை வேதிப்பொருட்கள் பசுமை இல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

விளைவுகள் : 

1. மிகை ஈர மற்றும் வறட்சிநிலைகள் ஏற்படலாம். 

2. கடல் நீர் மட்டம் உயர்தல். 

3. காலநிலை மாற்றத்தின் காரணமாக தாவர மற்றும் விலங்கினங்கள் இடம் பெயரும் 

4. தாவரங்களும் விலங்குகளையும் நேரடியாக பாதிக்கின்றன. 

5. மக்கள் உயிரினங்களின் உடல் நலத்தினை பாதிக்கும்.

கட்டுப்பாடு : 

1. மாசுகளை குறைக்க ஜ.நா.சபை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

2. காடுகள் புவிக்கோளின் நுரையீரலாகும், பாதுகாக்கவும். 

3. மரங்கள் நடுதல். 

4. வாகனங்களில் வினை வேக மாற்றிகள் மாசுபடுத்தும் வாயுக்களை குறைக்க உதவுகின்றன. 

5. காற்று மாசுபாடு சுத்திகரிப்பு அமைப்புகள் மூலம் வீட்டிற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும். 


18. பசுமை இல்ல விளைவு இல்லாவிட்டால் பூமி எவ்வாறு இருக்கும்? 

* பச்சை வீடு விளைவு ஸ்ட்ரேட்டோஸ்பியரில் ஓசோன் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியம். 

* பச்சை வீடு வாயுக்களை Co, மீத்தேன் மற்றும் நீரிழிவு சூரியனிடமிருந்து வருகின்ற கதிர்களை உறிஞ்சி பூமிக்கோளத்தைச் சுற்றி ஒரு வெப்ப போர்வையை உருவாக்குகிறது. 

* இயற்கையாக உருவாகும் பச்சை வீடு வாயுக்கள் இல்லையென்றால் பூமியின் சராசரி வெப்பநிலை 0° F அல்லது 18° c அருகில் அமையும் பூமி பனிக்கட்டியினால் மூடியிருக்கும். 

* பச்சை வீடு விளைவு இல்லையெனில் நாம் உயிர் வாழ முடியாது. 


19. குறிப்பு வரைக

அ) மிகை உணவூட்டம் 

ஆ) பாசிப் பெருக்கம் 

அ) மிகை உணவூட்டம் : 

ஊட்டச்சத்துக்களை கொண்ட நீர் நிலப்பகுதியிலிருந்து வழிந்தோடி ஏரி போன்ற நீர் நிலைகளை அடைந்து நீரின் ஊட்டச்சத்து செரிவினை அதிகப்படுத்துவது மிகை உணவூட்டம் எனப்படும்.

ஆ) பாசிப் பெருக்கம் 

* நீர் மாசுபாட்டினால் மின் உணவூட்டம் ஏற்படுகிறது >இதனால் ஏற்படும் அதிக பாசிக்களின் வளர்ச்சி பாசிப் பெருக்கத்தை உருவாக்கும். 

* அது நீர் நிலைகளின் தரத்தை பாதிக்கிறது.


20. உரம் கலந்த நீர் வழிந்தோடி நீர் நிலையில் கலப்பதால் நீர் சூழ்நிலை மண்டலத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?

உரம் கலந்த நீர் நிலைகளில் கலப்பதால் ஏற்படும் விளைவுகள் 

* நன்மையளிக்கும் பாக்டீரியாக்கள் கொல்லப்படும். 

* நீர் நிலைகளில் மிகை உணவூட்டத்தை ஏற்படுத்தும். 

* நீர் வாழ் விலங்குகளையும் அவற்றின் உற்பத்தித்திறனையும் பாதிக்கிறது. 


21. நாம் மிகை உணவூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

கழிவு நீர் மேலாண்மை மிகை உணவூட்டத்தை கட்டுப்படுத்தும். 

1. இயற்பியமுறை : 

கழிவு நீர் மிதத்தல், படிதல், வடிகட்டுதல் மற்றும் மைய விலக்கிப் பிரித்தல் மூலம் நீர்நிலைகளில் விடுவதற்கு முன் சுத்திகரிக்கப்படுகின்றன. 

2. வேதிய முறை கழிவு நீர் சுத்திகரிப்பு : 

* கரையா திடப்பொருட்களை உருவாக்குதல். 

* உயிர் வழி சிதையா பொருட்களிலிருந்து உயிர்வழி சிதையக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்தல். 

* தீமை செய்யாத பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனேற்றம் செய்தல் அல்லது ஒடுக்க வினையை மேற்கொள்ளுதல் 

3.  உயிரிய முறை :

* காற்றுள்ள நிலையில் சுத்திகரித்தல் (ஆக்ஸிஜனேற்ற குளங்கள் காற்றூட்ட உப்பு நீர் ஏரிகள்) 

* காற்றுள்ள நிலையில் சுத்திகரித்தல் - (காற்றற்ற உயிர்வினை கலன்கள் காற்றற்ற உப்பு நீர் ஏரிகள்) 


22. அண்டார்டிகாவின் மேற்பகுதியில் ஒசோன் துளை ஏன் ஏற்படுகிறது? 

* அண்டார்டிக் பகுதியில் ஏற்பட்ட தீவிரமான ஒசோன் இழப்பு ‘ஒசோன் துளை' எனப்படும். அங்கு நிலவுகின்ற சிறப்பு தட்பவெப்ப நிலையும் வேதிய அமைப்பும் இதற்கு காரணம். 

* குளிர்காலத்தில் காணப்படுகின்ற மிகக்குறைந்த வெப்பநிலை இந்த ஒசோன் துளைக்கு காரணம் ஆகும். 


23. புற ஊதாக்கதிர்களின் மிகைப்பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் யாவை? 

1. குறை அலை நீளமுள்ள தீங்கு விளைவிக்ககூடிய சூரியப்புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தை தடுக்கின்ற ஸ்டேரோப்டோஸ்டியரிலுள்ள ஓசோன் அடுக்கு மனிதச் செயல்பாடுகளால் வெளியேற்றப்படுகின்ற குளோரோ புளுரோ கார்பன் நைட்ரஜன் ஆக்சைடு வெளியேற்றத்தினால் அழிகின்றது. 

2. எனவே பூமியை அடைகின்ற புற ஊதாக்கதிர்களின் அளவு அதிகரிக்கும் 


24. காடுகளை பாதுகாப்பதில் பெண்களின் பங்கினை விவாதி.

காடுகளை பாதுகாப்பதில் பெண்களின் பங்கு : 

* 1730 ல் இராஜஸ்தானை ஆண்ட அபயசிங் மன்னர் அரண்மனையைக் கட்டுவதற்காக கெஜ்ரி மரங்களை வெட்ட ஆணையிட்டார்

* இதை அமிர்தாதேவி எனப்படும் தைரியமான பெண் அறிந்தார். 

* மன்னரின் படையினரால் மரங்கள் வெட்டப்படுவதை அறிந்த அமிர்தாதேவியும் மற்றும் பலரும் மரங்கள் வெட்டப்படுவதிலிருந்து காக்க கெஜ்ரி மரங்களை கட்டியணைத்துக் கொண்டனர். 

* மன்னரின் படையினர் 363 பிற பிஷ்னாய்களுடன் அம்ரிதா தேவியையும் கொன்றனர்.

* அவரது வீரத்தைப்பறை சாற்றும் வகையில் இராஜஸ்தான் அரசு இவரது பெயரில் அமிர்தாதேவி பிஷ்னாய் ஸ்மிருதி விருது' என்ற மாநில அளவிலான கௌரவ விருதினை வழங்குகிறது. 

சிப்கோ இயக்கம் : 

இந்த இயக்கத்திலிருந்த மக்கள் மரங்களை கட்டியணைத்து ஒப்பந்தக் காரர்களிடமிருந்து மரங்களைக் காத்தனர்.  

இவ்வியக்கங்களின் முக்கிய நோக்கம் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்தல். 


25. சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறைப்பதில் தனி நபரின் பங்கினை விவாதி? 

* தனிமனிதர்கள் வளங்களை வீணாக்குதலை குறைக்க முக்கியமாக மின்சாரச் சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டும். 

* மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தலை தவிர்த்து நடந்தோ அல்லது மிதிவண்டியை பயன்படுத்தலாம். 

* மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். 

* சணல் பைகளை பயன்படுத்தி ப்ளாஸ்டிக் பைகளை தவிர்க்கலாம். 

* நீர் வளங்களை சரியாக பயன்படுத்துதல். 

* ஒசோன் இழப்புக்கு முக்கிய காரணமான CFC குளிர்சாதனப் பெட்டிகளில் அதிகமாக பயன்படுத்துவதால் அதன் பயன்பாட்டை குறைக்கலாம். 

* சூற்றுச்சுழல் மாசடைதலின் கேடுகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 


26. மறுசுழற்சி முறைகள் மாசுபாடுகளை குறைப்பதில் எவ்வாறு உதவிபுரிகின்றன? 

* மறுசுழற்சி அதிக பச்சை வீடு வாயுக்கள் வெளிவிடுவதை தவிர்த்து நீர் மாசுபடுதலை குறைத்து ஆற்றலை சேமிக்கிறது. 

* மறுசுழற்சி மூலம் பெறப்பட்ட பொருட்கள் திடக் கழிவுகளின் அளவை குறைக்கும். பொருட்கள், தயாரிக்கும் பொருள்களை பிரித்தெடுப்பதனால் மற்றும் உருவாக்குவதில் ஏற்படும் மாசுக்களை குறைக்க உதவுகிறது. 


27. கியோட்டோ உடன்படிக்கையின் முதன்மையான நோக்கம் என்ன?

புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமான CO2 வெளியிடும் அளவை குறைப்பதே கியோட்டோ உடன்படிக்கையின் முதன்மை நோக்கம் ஆகும்.

இது 1999 டிசம்பர் 11 போடப்பட்டது. 


28. பாயங் எந்த வகையில் காடுகளை பாதுகாத்தார்? 

* “இந்தியாவின் வன மனிதன்“ என்றழைக்கப்படும் ‘ஜாகஸ் பாயங்க்' 36 வருடத்தில் 1360 ஏக்கர் அடர்ந்த காடுகளை உருவாக்கினார் 

* இன்று பாயங்கின் காடு ஜந்து வகைப் புலிகள், மான்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் பல்வேறு பறவை இனங்களுக்கு வசிப்பிடமாக விளங்குகிறது. 

* ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2012 ம் ஆண்டு “புவிதினத்தன்று" இந்தியாவின் வனமனிதன் என்ற பட்டத்தை அளித்து கௌரவப்படுத்தியது. 

* குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பண முடிப்பினை வழங்கி பாராட்டினர்.

* இவர் பத்மஸ்ரீ, விருதினையும் பெற்றவர். 


29. பின்வருவனவற்றை பற்றி சுருக்கமாக எழுதுக.

அ) வினை வேகமாற்றிகள் 

ஆ) பசுமை இல்ல வாயுக்கள் 

இ) சூழல் சுகாதாரக் கழிவறைகள் 

அ) வினை வேகமாற்றிகள் : 

வாகனங்களின் மாசுபடுத்தும் வாயுக்களை குறைக்க உதவும் கருவியாகும்.

* இவைகள் நச்சுத்தன்மையுடைய வாயுவினை குறைந்த அளவு நச்சுத்தன்மையுடைய வாயுவாக மாற்றி வெளியேற்றும். 

ஆ) பசுமை இல்ல வாயுக்கள் : 

* பசுமை வீடு வாயுக்கள் சுற்றுச்சுழலிலுள்ள வெப்பத்தை உறிஞ்சி பூமிக்குள் திருப்பி அனுப்புவதால் பூமியின் வெப்ப நிலை உயர்கிறது. 

* உதாரணம் : பச்சை வீடு வாயுக்கள் - கார்பன் - டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு O3 ஒசோன் 

இ) சூழல் சுகாதாரக் கழிவறைகள் : 

* சூழல் சுகாதாரம் என்பது உலர் மட்குக் கழிவறைகளை பயன்படுத்தி மனித கழிவை கையாளும் அமைப்பாகும். 

* சூழல் சுகாதாரக் கழிவறைகள் கழிவுநீர் உற்பத்தியினை குறைப்பதோடு மறுசுழற்சி செய்யப்பட்ட மனித கழிவிலிருந்து இயற்கை உரங்களையும் உற்பத்தி செய்கிறது. 


30. கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகளை தவிர்க்க சில தீர்வுகளைக் கூறு. 

* சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கடலில் கொட்டப்படும் கழிவுகளை தவிர்க்கப் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது. 

* தொழிற்சாலை கழிவுகளை குறைக்கவும் அவைகள் கடலில் கொட்டப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும். 

* வேதி தீங்குயிரி கொல்லி மருந்துகள் கடலில் கொட்டப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும். 

* ப்ளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். 

* வீட்டுக் கழிவுகள் நகராட்சி கழிவுகள் கடலில் கொட்டக் கூடாது.

* விவசாய கழிவுகள் கடலில் சேர்வது தடை செய்யப்பட வேண்டும். 


31. காடுகள் அழிப்பு எவ்வாறு உலக வெப்பமடைவதில் பங்காற்றுகிறது என்பதை விளக்கு. 

* காடுகள் அழிக்கப்படுதல் என்பது பிற பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் நிலங்களை உருவாக்குவதற்காக காடுகளை அழிப்பதாகும். 

* மரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது O2 வெளிவிடுகின்றன. CO2 எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

* அதனால் காடுகளை அழிப்பது O2, குறைபாட்டு வழிவகை செய்து CO2, அளவு அதிகரிக்கச் செய்து உலக வெப்பமடைதலில் பெரும் பங்கு வகிக்கிறது. 


32. “காடுகளைப் பாதுகாத்தல்” எந்த வகையில் காற்று மாசுபாட்டை குறைக்க உதவுகிறது?

* ஒளிச்சேர்க்கையின் போது CO2 உறிஞ்சப்படுகிறது. 

* CO2 ஒரு முக்கியமான மாசு ஆகும். 

* எனவே மரங்கள் காற்று மாசினை குறைக்கும். 

* காடுகள் மண் அரிப்பை தடுத்து நிலம் மாசடைதலை தடுக்கிறது.


Tags : Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers | Zoology புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல்.
12th Zoology : Chapter 13 : Environmental Issues : Environmental Issues: Questions and Answers (Evaluation) Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers | Zoology in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 13 : சுற்றுச்சூழல் இடர்பாடுகள் : சுற்றுச்சூழல் இடர்பாடுகள் : வினா விடை - புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 13 : சுற்றுச்சூழல் இடர்பாடுகள்