பருமனறி பகுப்பாய்வு | வேதியியல் செய்முறை ஆய்வக பரிசோதனை - சோடியம் ஹைடிராக்சைடின் நிறையறிதல் | 12th Chemistry : Practicals
சோடியம் ஹைடிராக்சைடின் நிறையறிதல்
நோக்கம்:
பருமனறி பகுப்பாய்வின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள செறிவறியா சோடியம் ஹைடிராக்சைடு கரைசலில் 250mLல் கரைந்துள்ள சோடியம் ஹைடிராக்சைடின் நிறையினைத் தீர்மானித்தல். இதற்கென, 0.0948N திறனுடைய திட்ட சோடியம் கார்பனேட் கரைசல் மற்றும் HC1 இணைப்புக் கரைசல் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.
தத்துவம்
தரம்பார்த்தல் வினைகள் (நடுநிலையாக்கல் வினைகள்)
Na2CO3 + 2HC1 → 2NaC1 + CO2 + H2O
NaOH + HC → NaC1 + H2O
சுருக்கமான செய்முறை:
செய்முறை
தரம் பார்த்தல்- II
இணைப்பு HC1 vs Na2CO3 திட்ட க்கரைசல்
பியூரெட்டை நீரினால் நன்கு கழுவ வேண்டும். பின்னர் தரம் பார்த்தலுக்கென கொடுக்கப்பட்டுள்ள HC1 இணைப்புக் கரைசலில் சிறிதளவு, பியூரெட்டில் எடுத்துக் கொண்டு அக்கரைசல் பியூரெட் முழுமையும் படுமாறு சுழற்றிக் கழுவுதல் வேண்டும். இதன் பிறகு, கொடுக்கப்பட்டுள்ள HC1கரைசலைக் கொண்டு பியூரெட்டில் பூஜ்ஜியக் குறியீட்டு அளவு வரை நிரப்புக. மிகச்சரியாக 20mL திட்ட சோடியம் கார்பனேட் கரைசலை பிப்பெட்டைக் கொண்டு உறிஞ்சி எடுத்து நன்கு கழுவப்பட்ட கூம்புக் குடுவையில் இடுக. மேலும் இதனுடன் இரு துளிகள் மெத்தில் ஆரெஞ்சு நிறங்காட்டியைச் சேர்க்க. கரைசல் வெளிறிய இளமஞ்சள் நிறத்தைப் பெறும். இக்கரைசலை பியூரெட்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட HC1 கரைசலுடன் தரம் பார்க்க. தரம்பார்த்தல் நிறைவடையும் நிலையில் கரைசல் அமிலத் தன்மையைப் பெறுவதால் நிறங்காட்டியானது வெளிறிய மஞ்சள் நிறத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறமாக மாறும். இதுவே முடிவு நிலையாகும். இந்நிலையில் பியூரெட் அளவீட்டினை அட்டவணையில் குறித்துக் கொள்க. ஒத்த தரம் பார்த்தல் அளவீடுகளைப் பெறும் வரையில் தரம் பார்த்தலை மீளவும் நிகழ்த்தவும்.
தரம் பார்த்தல்- II
இணைப்பு HC1 கரைசல் VS Na2CO3 திட்டக் கரைசல்
கணக்கிடுதல் HC1 இணைப்புக் கரைசலின் கனஅளவு (V1) = ---------------mL
HC1 இணைப்புக் கரைசலின் திறன் (N1) = --------------N
Na2CO3 திட்ட கரைசலின் கனஅளவு (V2) = ----- 20--------mL
Na2CO3 திட்ட கரைசலின் திறன் (N2) = 0.0948 N
பருமனறி பகுப்பாய்வுத் தத்துவத்தின்படி, V1 × N1 = V2× N2
N1 = V2 × N2 / V1
HC1 இணைப்புக் கரைசலின் திறன் (N1)
தரம் பார்த்தல்- II
திறனறியா NaOH கரைசல் VS HC1 இணைப்புக் கரைசல்
பியூ ரெட்டை நீரினால் நன்கு கழுவ வேண்டும். பின்னர் தரம் பார்த்தலுக்கு என கொடுக்கப்பட்டுள்ள திறனறியா HC1 கரைசலில் சிறிதளவு பியூரெட்டில் எடுத்துக் கொண்டு அக்கரைசல் பியூ ரெட் முழுமையும் படுமாறு சுழற்றிக் கழுவுதல் வேண்டும். இதன் பிறகு, கொடுக்கப்பட்டுள்ள HC1கரைசலைக் கொண்டு பியூரெட்டில் பூஜ்ஜியக் குறியீட்டு அளவு வரை நிரப்புக. மிகச்சரியாக 20mL இணைப்புக் கரைசலைக் NaOH பிப்பெட்டைக் கொண்டு உறிஞ்சி எடுத்து நன்கு கழுவப்பட்ட கூம்புக் குடுவையில் இடுக. மேலும் இதனுடன் இரு துளிகள் பினாஃப்தலின் நிறங்காட்டியினைச் சேர்க்க. இக்கரைசல் இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும். இக்கரைசலை பியூரெட்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட HC1 கரைசலுடன் தரம்பார்க்க. தரம்பார்த்தல் வினை நிறைவடையும் நிலையில் கரைசல் அமிலத் தன்மை பெறுவதால் நிறங்காட்டியானது இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து நிறமற்றதாகும். இதுவே முடிவு நிலையாகும். இந்நிலையில் பியூரெட் அளவீட்டினை அட்டவணையில் குறித்து கொள்க. ஒத்த தரம் பார்த்தல் அளவீடுகளை பெறும் வரையில் தரம் பார்த்தலை மீளவும் நிகழ்த்தவும்.
தரம் பார்த்தல்- II
இணைப்பு HC1 கரைசல் VS திறனறியா சோடியம் ஹைடிராக்சைடு கரைசல்
கணக்கிடுதல்
திறனறியா சோடியம் ஹைடிராக்சைடுகரைசலின் கனஅளவு (V1) = -----20----mL
திறனறியா சோடியம் ஹைடிராக்சைடு கரைசலின் திறன் (N1) = -----------N
HC1 இணைப்புக் கரைசலின் கனஅளவு (V2) = -----------mL
HC1 இணைப்புக் கரைசலின் திறன் (N2) = ---------------------N
பருமனறி பகுப்பாய்வு தத்துவத்தின்படி, V1 × N1 = V2 × N2
N1 = V2 × N2 / V1
திறனறியா சோடியம் ஹைடிராக்சைடு கரைசலின் திறன் N1
நிறை கணக்கிடுதல்
1லிட்டர் கரைசலில் கரைந்துள்ள படிக சோடியம் ஹைடிராக்சைடு நிறை = சோடியம் ஹைடிராக்சைடு கரைசலின் திறன் (நார்மாலிட்டியில்) x சமான நிறை
250 mL கரைசலில் கரைந்துள்ள படிக சோடியம் ஹைடிராக்சைடின் நிறை = சோடியம் நிறை ஹைடிராக்சைடு திறன் × 40 × 250 / 1000
= 1000 கிராம்
முடிவு
கொடுக்கப்பட்ட கரைசலில் 250 mL-ல் கரைந்துள்ள படிக சோடியம் ஹைடிராக்சைடின் நிறை -----------------------கிராம்.