Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 2.1 (உத்தேச மதிப்பு)

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.1 (உத்தேச மதிப்பு) | 5th Maths : Term 3 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.1 (உத்தேச மதிப்பு)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.1 (உத்தேச மதிப்பு) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.1


1. கோடிட்ட இடங்களை நிரப்புக

(i) 27 அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும் உத்தேச மதிப்பு 30

(ii) 65 அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும் உத்தேச மதிப்பு 70

(iii) 1 கிலோ மாதுளையின் விலை ₹ 93 எனில், அதன் உத்தேச விலை ₹ 90

(iv) 76 வாழைப்பழங்களை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும் உத்தேச மதிப்பு 80


2. ஒரு வகுப்பில் 27 மாணவிகளும் 38 மாணவர்களும் உள்ளனர். அவர்களின் கூடுதல் மதிப்பை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பைக் காண்க.

தீர்வு:


மாணவர்களின் எண்ணிக்கையின் உத்தேச மதிப்பு  = 70 


3. ஒரு வடிவியல் பெட்டியின் விலை ₹  53, ஒரு நோட்டுப்புத்தகத்தின் விலை ₹  36 எனில், அவற்றின் விலையை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்திக் கூட்டுக. மேலும், உத்தேச மதிப்பிற்கும் உண்மையான மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.

தீர்வு:


வித்தியாசம் = உத்தேச மதிப்புஉண்மை மதிப்பு

= 90 − 89 = ₹ 1


4. கவிதா என்பவர் தன்னிடம் உள்ள 93 படங்களிலிருந்து 42 படங்களைத் தோழி நீலாவிற்கு அளித்தாள் எனில் அதன் எண்ணிக்கையை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்திக் கழிக்க. மேலும், அதன் உத்தேச மதிப்பிற்கும் உண்மையான மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தையும் காண்க.

தீர்வு:


வித்தியாசம் = உண்மை மதிப்புஉத்தேசமதிப்பு

= 51 −  50 = ₹ 1


5. ஒரு எழுதுகோலின் விலை ₹ 32 எனில், 6 எழுதுகோல்களின் விலையைக் காண்க. மேலும், அதனை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பையும் காண்க.

தீர்வு:

ஒரு எழுதுகோலின் விலை = ₹ 32

 6 எழுதுகோலின் விலை = ₹ 32 × 6

= ₹ 192 

உத்தேச மதிப்பு = ₹ 190


6. அருணிடம் ₹ 47, ராஜாவிடம் ₹ 54 உள்ளது எனில், மொத்த மதிப்பைக் காண்க. மேலும், அதனை அருகிலுள்ள நூற்றுக்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பையும் காண்க.

தீர்வு:


உத்தேச மதிப்பு = ₹100


7. ஒரு பொட்டலத்தில் 21 சாக்லேட்கள் உள்ளன எனில், 9 பொட்டலங்களில் உள்ள சாக்லேட்டுகளின் எண்ணிக்கையைக் காண்க. மேலும், அதனை அருகிலுள்ள நூற்றுக்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பையும் காண்க.

தீர்வு:

ஒரு பொட்டலத்தில் உள்ள சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 21

9 பொட்டலத்தில் உள்ள சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 9 × 21

= ₹ 189

உத்தேச மதிப்பு = ₹ 190


8. 132 கடலைமிட்டாய்கள் 12 மாணவர்களுக்கு சமமாகப் பங்கிடப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் கிடைக்கும் கடலை மிட்டாய்களின் எண்ணிக்கையையும் அதனை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்தி கிடைக்கும் உத்தேச மதிப்பையும் காண்க.

தீர்வு

12 மாணவர்களுக்கு பங்கிடப்பட்ட கடலை மிட்டாய்களின் எண்ணிக்கை = 132 

1 மாணவனுக்கு பங்கிடப்பட்ட கடலை மிட்டாய்களின் எண்ணிக்கை = 132 ÷ 12

= 11

உத்தேச மதிப்பு = 10


Tags : Numbers | Term 3 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 2 : Numbers : Exercise 2.1 (Estimation) Numbers | Term 3 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.1 (உத்தேச மதிப்பு) - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்