Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | உத்தேச மதிப்பு

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - உத்தேச மதிப்பு | 5th Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  25.10.2023 06:10 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

உத்தேச மதிப்பு

தோராயங்களைக் குறிக்கப் பயன்படும் வேறு சில வார்த்தைகள் 'சுமாரான', 'ஏறத்தாழ', 'அருகிலுள்ள', ……….

அலகு − 2

எண்கள்



உத்தேச மதிப்பு

சூழ்நிலை 1

இரண்டு திராட்சைக் கொத்துகள் உள்ளன. A மற்றும் B என்ற இரண்டு திராட்சைக் கொத்துகளிலும் உள்ள திராட்சைகளின் எண்ணிக்கையை உத்தேசமாகக் காண்க.


கொத்து A இல் உள்ள திராட்சைகளின் எண்ணிக்கை 6

கொத்து B இல் உள்ள திராட்சைகளின் எண்ணிக்கை 15

திராட்சைகளின் எண்ணிக்கையைச் சரியாக எண்ணி எழுதுக.

கொத்து A இல் உள்ள திராட்சைகளின் சரியான எண்ணிக்கை 7

கொத்து B இல் உள்ள திராட்சைகளின் சரியான எண்ணிக்கை 14


சூழ்நிலை 2

திருச்சி முதல் சென்னை வரை செல்வதற்கு உத்தேசப் பேருந்துக்கட்டணம் ₹ 300 ஆகும். சரியான பேருந்துக் கட்டணம் ₹ 286 ஆகும்,


எனவே, துல்லியமான மதிப்புகளுக்கு அருகிலமையும் மதிப்புகளே தோராயமான மதிப்புகள் ஆகும்.

தோராயத்திற்கான குறியீடு ஆகும். 


அறிந்து கொள்வோம்

தோராயங்களைக் குறிக்கப் பயன்படும் வேறு சில வார்த்தைகள் 'சுமாரான', 'ஏறத்தாழ', 'அருகிலுள்ள', ……….


செயல்பாடு 1

கட்டங்களைப் பூர்த்திச் செய்து மகிழ்க (தனித்தனியாக

ஒரு சீப்பில் உள்ள வாழைப்பழங்களின் எண்ணிக்கை ________

உனது கையில் உள்ள புளியங்கொட்டைகளின் எண்ணிக்கை ______

சிறிய வேம்புக் குச்சியில் உள்ள இலைகளின் எண்ணிக்கை  ________

உனது எடை    _______

உனது ஆசிரியரின் உயரம்  _________



இரண்டு இலக்கங்கள் வரையிலான எண்களுக்கு உத்தேச மதிப்புகள் காணுதல் 

ஓர் எண்ணை நாம் விரும்பியவாறு தோராயமாகக் கூறுதலே உத்தேசப்படுத்துதல் ஆகும்

ஓர் எண்ணை உத்தேசமாக்க முதலில் உத்தேசப்படுத்தும் இலக்கத்திற்கு வலப்புறம் உள்ள இலக்கத்தை அடிக்கோடிட வேண்டும்.

i) அடிக்கோடிட்ட இலக்கம் 5 விடச் சிறிய எண்ணாக இருந்தால் உத்தேசப்படுத்தும் இலக்கத்தை அப்படியே எழுதி முழுமையாக்க வேண்டும்.

உதாரணமாக நாம் 64 பத்துகளுக்கு முழுமையாக்க 60 எனப் பெறலாம்

ii) அடிக்கோடிட்ட இலக்கமானது 5 இக்கு சமமாகவோ 5 விடப் பெரிய எண்ணாகவோ இருந்தால், உத்தேசப்படுத்தும் இலக்கத்துடன் 1 ஐக் கூட்டி அடிக்கோடிட்ட இலக்கத்தை பூச்சியமாக்க வேண்டும்.

உதாரணமாக, 65 பத்துகளுக்கு முழுமையாக்க 70 எனப் பெறலாம்.


எடுத்துக்காட்டு 2.1

48 அருகிலுள்ள பத்திற்கு முழுமையாக்குக.

தீர்வு

48 அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த நமக்கு 50 கிடைக்கும்.

ஏனெனில், ஒன்றாம் இலக்கம் 8 ஆனது 5 விடப் பெரியது என்பதால் உத்தேச மதிப்பு 50 எனக் கிடைக்கிறது.

எனவே, 48 50


எடுத்துக்காட்டு 2.2

74 அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்துக.

தீர்வு

74 ஐப் பத்துகளுக்கு முழுமையாக்க 70 எனப் பெறுகிறோம்.

ஒன்று இடத்தில் உள்ள 4 ஆனது 5 விட சிறியது. எனவே பத்துகளை அப்படியே எழுதி 70 எனப் பெறுகிறோம்.

எனவே, 74 70


எடுத்துக்காட்டு 2.3

144 ஐப் பத்துகளுக்கு முழுமையாக்கு.

தீர்வு

144 ஐப் பத்துகளுக்கு முழுமையாக்க 140 எனப் பெறுகிறோம். ஒன்று இடத்தில் உள்ள 4 ஆனது 5 விட சிறியது. எனவே, பத்துகளை அப்படியே எழுதி 140 எனப் பெறுகிறோம்.

எனவே, 144 140.


எடுத்துக்காட்டு 2.4

155 ஐப் பத்துகளுக்கு முழுமையாக்கு.

தீர்வு

155 ஐப் பத்துகளுக்கு முழுமையாக்க 160 எனப் பெறுகிறோம். ஒன்றுகள் இடத்தில் 5 வருவதால், பத்துகளில் ஒன்று சேர்த்து 160 எனப் பெறுகிறோம்.

எனவே, 155 160.


கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் செயல்பாடுகளின் உத்தேச மதிப்பைப் பயன்படுத்துதல்.


எடுத்துக்காட்டு 2.5

1 கிலோ ஆப்பிளின் விலை ₹ 95, 1 கிலோ கொய்யாவின் விலை ₹ 48 எனில், அவற்றின் விலைகளை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்திக் கூட்டுக. மேலும் உத்தேச மதிப்பிற்கும் உண்மை மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.

தீர்வு


உண்மை மதிப்பிற்கும் உத்தேச மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசம் = உத்தேச மதிப்பு  − உண்மை மதிப்பு

= 150 − 143

= ₹ 7


எடுத்துக்காட்டு 2.6

ஒரு நோட்டுப்புத்தகத்தின் விலை ₹ 42. ஓர் எழுதுகோலின் விலை ₹ 27 எனில், அவற்றின் விலைகளை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்திக் கழிக்க. மேலும், உத்தேச மதிப்பிற்கும் உண்மை மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசம் காண்க.

தீர்வு


உண்மை மதிப்பிற்கும் உத்தேச மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசம் = உத்தேச மதிப்பு  − உண்மை மதிப்பு

= 15 – 10

= ₹ 5


இதனை முயல்க

கொடுக்கப்பட்டுள்ள எண்களின் உத்தேச மதிப்புகளைக் கண்டறிந்து அவற்றைக் கூட்டுக. மேலும், அவற்றின் உண்மை மதிப்பிற்கும் உத்தேச மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.



எடுத்துக்காட்டு 2.7

ஒரு மீட்டர் துணியின் விலை ₹ 86 எனில் அதன் விலையை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்தி 5 மீட்டர் துணியின் உத்தேச விலையைக் காண்க.

தீர்வு


எனவே, 5 மீட்டர் துணியின் உத்தேச விலை =  ₹  450


எடுத்துக்காட்டு 2.8

3 கிலோ உருளைக்கிழங்கின் விலை ₹ 63 எனில், அதன் விலையை அருகிலுள்ள பத்திற்கு முழமைப்படுத்துக. பிறகு, 1 கிலோ உருளைக்கிழங்கின் உத்தேச விலையைக் காண்க.

தீர்வு


எனவே, 1 கிலோ உருளைக்கிழங்கின் உத்தேச விலை  ₹  20.


இதனை முயல்க

கொடுக்கப்பட்டுள்ள எண்களின் உத்தேச மதிப்புகளை எழுதி வகுத்தப் பிறகு, அவற்றின் உத்தேச மதிப்பிற்கும் உண்மையான மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசம் காண்க.



Tags : Numbers | Term 3 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 2 : Numbers : Estimation Numbers | Term 3 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : உத்தேச மதிப்பு - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்