எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.1 (உத்தேச மதிப்பு) | 5th Maths : Term 3 Unit 2 : Numbers
பயிற்சி 2.1
1. கோடிட்ட இடங்களை நிரப்புக
(i) 27 ஐ அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும் உத்தேச மதிப்பு 30
(ii) 65 ஐ அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும் உத்தேச மதிப்பு 70
(iii) 1 கிலோ மாதுளையின் விலை ₹ 93 எனில், அதன் உத்தேச விலை ₹ 90
(iv) 76 வாழைப்பழங்களை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும் உத்தேச மதிப்பு 80
2. ஒரு வகுப்பில் 27 மாணவிகளும் 38 மாணவர்களும் உள்ளனர். அவர்களின் கூடுதல் மதிப்பை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பைக் காண்க.
தீர்வு:
∴ மாணவர்களின் எண்ணிக்கையின் உத்தேச மதிப்பு = 70
3. ஒரு வடிவியல் பெட்டியின் விலை ₹ 53, ஒரு நோட்டுப்புத்தகத்தின் விலை ₹ 36 எனில், அவற்றின் விலையை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்திக் கூட்டுக. மேலும், உத்தேச மதிப்பிற்கும் உண்மையான மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.
தீர்வு:
வித்தியாசம் = உத்தேச மதிப்பு − உண்மை மதிப்பு
= 90 − 89 = ₹ 1
4. கவிதா என்பவர் தன்னிடம் உள்ள 93 படங்களிலிருந்து 42 படங்களைத் தோழி நீலாவிற்கு அளித்தாள் எனில் அதன் எண்ணிக்கையை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்திக் கழிக்க. மேலும், அதன் உத்தேச மதிப்பிற்கும் உண்மையான மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தையும் காண்க.
தீர்வு:
வித்தியாசம் = உண்மை மதிப்பு − உத்தேசமதிப்பு
= 51 − 50 = ₹ 1
5. ஒரு எழுதுகோலின் விலை ₹ 32 எனில், 6 எழுதுகோல்களின் விலையைக் காண்க. மேலும், அதனை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பையும் காண்க.
தீர்வு:
ஒரு எழுதுகோலின் விலை = ₹ 32
6 எழுதுகோலின் விலை = ₹ 32 × 6
= ₹ 192
∴ உத்தேச மதிப்பு = ₹ 190
6. அருணிடம் ₹ 47, ராஜாவிடம் ₹ 54 உள்ளது எனில், மொத்த மதிப்பைக் காண்க. மேலும், அதனை அருகிலுள்ள நூற்றுக்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பையும் காண்க.
தீர்வு:
∴ உத்தேச மதிப்பு = ₹100
7. ஒரு பொட்டலத்தில் 21 சாக்லேட்கள் உள்ளன எனில், 9 பொட்டலங்களில் உள்ள சாக்லேட்டுகளின் எண்ணிக்கையைக் காண்க. மேலும், அதனை அருகிலுள்ள நூற்றுக்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பையும் காண்க.
தீர்வு:
ஒரு பொட்டலத்தில் உள்ள சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 21
9 பொட்டலத்தில் உள்ள சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 9 × 21
= ₹ 189
உத்தேச மதிப்பு = ₹ 190
8. 132 கடலைமிட்டாய்கள் 12 மாணவர்களுக்கு சமமாகப் பங்கிடப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் கிடைக்கும் கடலை மிட்டாய்களின் எண்ணிக்கையையும் அதனை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்தி கிடைக்கும் உத்தேச மதிப்பையும் காண்க.
தீர்வு:
12 மாணவர்களுக்கு பங்கிடப்பட்ட கடலை மிட்டாய்களின் எண்ணிக்கை = 132
∴ 1 மாணவனுக்கு பங்கிடப்பட்ட கடலை மிட்டாய்களின் எண்ணிக்கை = 132 ÷ 12
= 11
உத்தேச மதிப்பு = 10