தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.3 (சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை வட்ட விளக்கப்படமாகக் குறிப்பிடுதல்) | 4th Maths : Term 1 Unit 6 : Information Processing
பயிற்சி 6.3
1. ஒரு பனிக்கூழ் (ICE CREAM) கடையில் உள்ள இருப்பு விவரங்கள் கீழே வட்ட விளக்கப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.
i. வட்ட விளக்கப்படத்தில் எத்தனை வகையான பனிக்கூழ்கள் உள்ளன?
விடை: மூன்று
ii. வெண்ணிலா பனிக்கூழ்களின் எண்ணிக்கை __________.
விடை: 50
iii. சாக்லேட் மற்றும் பிஸ்தா பனிக்கூழ்களின் எண்ணிக்கை __________.
விடை: 50
iv. மொத்தப் பனிக்கூழ்களின் எண்ணிக்கை __________.
விடை: 100
2. ஒரு பெட்டியில் உள்ள பந்துகளின் விவரம் வட்டவிளக்கப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விவரங்களைப் பட்டியலிடுக.
விடை:
கால் பந்து -16
கூடைப் பந்து - 24
மட்டைப் பந்து - 60
3. 30 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில், பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
i. எந்த போட்டியில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம்?
விடை: பாட்டுப் போட்டி
ii. எந்த போட்டியில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவு?
விடை: கட்டுரைப் போட்டி
4. உன் குடும்ப உறுப்பினர்களின் பிடித்தமான இனிப்புகளை பட்டியலிட்டு செவ்வக விளக்கப்படம் மற்றும் வட்ட விளக்கப்படம் வரைக.