பருவம் 3 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : Civics : Term 3 Unit 1 : Democracy

   Posted On :  31.08.2023 06:15 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 1 : மக்களாட்சி

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 1 : மக்களாட்சி : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 

1. ஆதிமனிதன் --------------------- பகுதியில்  குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.

அ) சமவெளிகள்

ஆ) ஆற்றோரம்

இ) மலைகள்

ஈ) குன்றுகள்

விடை: ஆ) ஆற்றோரம்

 

2. மக்களாட்சியின் பிறப்பிடம் ------------------

அ) சீனா

ஆ) அமெரிக்கா

இ) கிரேக்கம்

ஈ) ரோம்

விடை: இ) கிரேக்கம்

 

3. உலக மக்களாட்சி தினம் ---------------- ஆகும்.

அ) செப்டம்பர் 15

ஆ) அக்டோபர் 15

இ) நவம்பர் 15

ஈ) டிசம்பர் 15

விடை: அ) செப்டம்பர் 15

 

4. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் -----------------------

அ) ஆண்கள்

ஆ) பெண்கள்

இ) பிரதிநிதிகள்

ஈ) வாக்காளர்கள்

விடை: ஈ) வாக்காளர்கள்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக


1. நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு  சுவிட்சர்லாந்து

2. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர்  ஆப்ரகாம் லிங்கன்

3. மக்கள் வாக்கு அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

4. நம் நாட்டில் நாடாளுமன்ற மக்களாட்சி செயல்படுகிறது.

 

III. விடையளிக்கவும்

 

1. மக்களாட்சி என்றால் என்ன?

“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி

 

2 மக்களாட்சியின் வகைகள் யாவை?

நேரடி மக்களாட்சி மற்றும் பிரதிநிதித்துவ மக்களாட்சி

 

3. நேரடி மக்களாட்சி - வரையறு.

“நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை உருவாக்குகின்றனர். அனைத்து சட்டத் திருத்தங்களையும் மக்கள் தான் அங்கீகரிப்பர். அரசியல் வாதிகள் நாடாளுமன்ற செயல் முறைகளின்படி ஆட்சி செய்வர்.

 

4. பிரதிநிதித்துவ மக்களாட்சி - வரையறு.

“சுதந்திரமான தேர்தல் முறைப்படி உயர் அதிகாரம் பெற்ற மக்கள் தெரிந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் ஆட்சியதிகாரம் பெற்றிருப்பார்கள்.

 

5. நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை?

நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகள்

அரசியல் கொள்கைகளை வரையறுத்துள்ளது.

அரசு நிறுவனங்களின் வடிவமைப்பு. அவை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.

அரசு நிறுவனங்களின் அதிகாரம் மற்றும் கடமைகளையும் விளக்குகிறது.

குடிமக்களுக்கான உரிமைகள், கடமைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் நிர்ணயம் செய்துள்ளது.

 

IV. உயர்சிந்தனை வினா


1. நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி-ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை

அறியவும்.


 

V. செயல்பாடுகள்

 

1. உங்கள் தொகுதி பிரதிநிதிகளின் பெயர்களைக் கேட்டறிந்து எழுதவும்.

(அ) நாடளுமன்ற உறுப்பினர் – K.R.P. பிரபாகரன்

(ஆ) சட்டமன்ற உறுப்பினர் – TP. மொஹிதின்கான்

(இ) உள்ளாட்சி உறுப்பினர் – A. ராதாகிருஷ்ணன்

 

2. மக்களாட்சி முறையின் நிறை, குறைகளை விவாதிக்கவும்.

நிறைகள் :

மக்களாட்சி முறை மக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை பெற்று தருகின்ற ஒரு சிறந்த அரசாட்சியாகும்.

இவ்வாட்சி ஜனநாயக ரீதியாக முடிவெடிக்கும் தன்மையை செம்மைப்படுத்துகிறது.

குடிமக்களின் சுயமரியாதையை பாதுகாக்கிறது.

மக்களாட்சி மக்களின் தவறுகளை திருத்தி கொள்ள வழி வகை செய்கிறது.

குறைகள் :

மக்களாட்சியில் தலைமை மாறிக் கொண்டே இருப்பதால் நிலையற்ற தன்மை உருவாகிறது.

நன்னடைத்தைக்கு வாய்ப்பு குறைகிறது

முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

ஊழலுக்கு வழி வகை செய்கிறது.

Tags : Democracy | Term 3 Unit 1 | Civics | 6th Social Science பருவம் 3 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 3 Unit 1 : Democracy : Exercises Questions with Answers Democracy | Term 3 Unit 1 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 1 : மக்களாட்சி : வினா விடை - பருவம் 3 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 1 : மக்களாட்சி