கணினி அறிவியல் - செயற்கூறு : அறிமுகம் | 12th Computer Science : Chapter 1 : Problem Solving Techniques : Function

அலகு 1
பாடம் 1
செயற்கூறு
கற்றலின் நோக்கங்கள்
இந்தப்
பாடப்பகுதியைக் கற்றபின் மாணவர்கள் அறிந்துக் கொள்வது,
•
செயற்கூறு வரையறை
•
அளபுருக்கள் மற்றும் செயலுருபுக்கள்
•
இடைமுகம் மற்றும் செயல்படுத்துதல்
•
pure செயற்கூறுகள்
•
பக்க விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கான நேரமே, நிரல் நெறிமுறையை எழுதுவதற்கும்
மற்றும் மதிப்பீடு செய்வதற்கும் மிக முக்கியமான அடிப்படை ஆகும். நிரல் நெறிமுறையின்
அர்த்தமுள்ள ஒப்பீட்டைப் பெறுவதற்கு (கணக்கீட்டு நேரத்தின்கால அளவானது) நிரலாக்க மொழி,
நிரல் பெயர்ப்பி மற்றும் பயன்படுத்தும் கணினி ஆகியவற்றைச் சார்ந்திருக்கக்கூடாது. நிரலாக்க
மொழியின் கூற்றுகளைப் பயன்படுத்தி நிரல் நெறிமுறைகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை
நீங்கள் அறிவீர்கள். மொத்தமான கூற்றுகள், பலமுறை மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும்
எனில், அந்த செயலைச் செய்து முடிப்பதற்காக துணை நிரல்கள் (Subroutines) பயன்படுகின்றன.
துணை நிரல்கள் கணினி மொழிகளின் அடிப்படைக் கட்டுமான தொகுதியாக விளங்குகின்றன. துணை நிரல்கள் என்பன ஒரு குறிப்பிட்ட செயலை மீண்டும் மீண்டும் செய்யப் பயன்படும் சிறிய நிரல் தொகுதியாகும். நிரலாக்க மொழிகளில் இத்துணை நிரல்கள் செயற்கூறுகள் (Functions) என்று அழைக்கப்படுகின்றன.