அலுவலகப் புள்ளிவிவரங்கள்
அலுவலகப் புள்ளிவிவரங்கள் என்பது அரசு அலுவலகங்கள், பன்னாட்டு அமைப்புகள் உள்ளிட்ட மற்ற பொது நிறுவனங்களினால் வெளியிடப்படுவதாகும். இவைகள் குடிமக்களின் வாழ்க்கைத் தொடர்பான பல அளவு மற்றும் பண்பு விவரங்களை வெளியிடுகிறது. அலுவலகப் புள்ளிவிவரங்கள் சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாடுபாட்டினை வெளிப்படுத்துகிறது. இது அரசின் கொள்கைகளை மதிப்பீடு செய்ய பயன்படுகிறது. அரசின் பொறுப்புணர்வை அதிகரிக்கிறது.
புள்ளியியல் துறை திட்ட அமலாக்கத் துறையுடன் இணைக்கப்பட்டது முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்கம் தனி அமைப்பாக 1999 முதல் செயல்பட்டு வருகின்றது.
இத்துறை இரு பிரிவுகளை கொண்டது: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்.
இதில் புள்ளியியல் பிரிவானது தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office, NSO) என அழைக்கப்படுகிறது. இதில் மேலும் சில பிரிவுகளாக மத்திய புள்ளியியல் கழகம் (Central Statistical Organization, CSO), கனிணி மையம், மற்றும் தேசிய மாதிரிக் கூறெடுப்பு விசாரணை அலுவலகம் (National Sample Survey Office, NSSO) உள்ளன.
மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistical Office, CSO)
மத்திய புள்ளியியல் அலுவலகம் இரு பிரிவுகளை கொண்ட தேசிய புள்ளியில் அமைப்பின் அங்கமாகும். இதன் முக்கிய பணி நாடுமுழுவதிலும் நடைபெறும் புள்ளிவிவர சேகரிப்புகளை ஒருங்கிணைப்பது மற்றும் அவற்றினை பரிசோதிப்பதும், தர மேம்பாட்டினை உறுதிப்படுத்துவதும் ஆகும். இந்த அமைப்பால் செய்யப்படும் பணிகள்: தேசிய கணக்குகளை ஒருங்கிணைப்பது, ஆண்டு தொழில் துறை விசாரணையை நடத்துவது, பொருளாதார விசாரணைகளை நடத்துவது, தொழிற்சாலை உற்பத்தி விவரங்களை சேகரிப்பது, நுகர்வோர் குறியீட்டெண்ணை அமைப்பது ஆகும். மேலும், மற்ற சமுதாய புள்ளி விரவங்களை சேகரிப்பது. பயிற்சி, பன்னாட்டு ஒத்துழைப்பை பேணுதல், தொழில் பிரிவுகளை நிர்ணயித்தல் ஆகிய பணிகளையும் இது செய்கிறது.
இந்த அமைப்பில் ஐந்து பிரிவுகள் உள்ளன. அவைகள் முறையே, தேசிய கணக்குப் பிரிவு, சமூக புள்ளியியல் பிரிவு, பொருளாதார புள்ளியில் பிரிவு, பயிற்சி பிரிவு, ஒருங்கிணைப்பு மற்றும் வெளியீட்டுப் பிரிவு. இந்த அமைப்பின் அலுவலகம் புதுடெல்லியில் அமைந்திருக்கிறது. தொழிற்சாலை விவரங்களுக்கான பிரிவு கொல்கத்தாவில் இருக்கின்றது. கனிணிமையம் புதுடெல்லி செயல்பட்டு வருகிறது.
தேசிய மாதிரி கூறெடுத்தல் அலுவலகம் (National Sample Survey Office, NSSO)
தேசிய மாதிரி கூறெடுத்தல் கழகம் தற்பொழுது, தேசிய மாதிரி கூறெடுத்தல் அலுவலகம் என அழைக்கப்படுகிறது. இது இந்திய புள்ளியியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும். இது புள்ளியியல் பணியைப் பொறுத்தவரை மிகப் பெரிய அமைப்பாகும். இது 1950 முதல் தொடர்ச்சியாக சமூக - பொருளாதார புள்ளிவிவர விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இதில் நான்கு பிரிவுகள் உள்ளன:
1. விசாரணை வடிவமைத்தல் மற்றும் ஆய்வுத் துறை.
2. களப்பணித் துறை
3. புள்ளிவிவர செயலாக்கத் துறை
4. ஒருங்கிணைப்பு மற்றும் வெளியீட்டுத் துறை
திட்ட அமைரைக்கத் துறையின் கீழ் மூன்று அமைப்புகள் உள்ளன.
(i) 20 சம்ச திட்டம்
(ii) உள்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் திட்ட கண்காணிப்பு,
(iii) பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம்.
இதைத்தவிர, இந்திய அரசின் தீர்மானத்தின்படி தேசிய புள்ளியியல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.பிறகு, தன்னாட்சி பெற்ற மற்றும் பாராளுமன்ற சட்டத்தால் தேசிய முக்கியத்தவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்ட இந்திய புள்ளியில் நிறுவனமும் இருக்கின்றது.
தொகுப்புரை
இப்பாடத்தில் புள்ளியியலின் முக்கியத்துவம், இயல்பு வகைகள்,புள்ளிவிவர வகைகள், புள்ளிவிவர பகுப்பாய்வுகளான மைய போக்கு அளவைகள், விலகல் அளவைகள், ஒட்டுறவு தொடர்புப் போக்கு ஆகியவை அறிந்துகொள்ளப்பட்டன. தொடாந்து பொருளாதார அளவையியலை பற்றி ஓர் அறிமுக பாடத்தினை கற்றோம். இறுதியாக, இந்திய புள்ளிவிவர அமைப்புகளை பற்றியும் அறிந்து கொண்டோம்.