லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - சார்புகள் (Functions) | 8th Science : Chapter 23 : Libre Office Calc
சார்புகள் (Functions)
சார்புகள் என்பவை எளிய மற்றும் சிக்கலான கணக்குகளைத் தீர்க்க
பெரிதும் உதவுகின்றன. நாம் லிப்ரே ஆபீஸ் கால்க்கில் வெவ்வேறு விதமான சூத்திரங்களை பயன்படுத்துகிறோம்.
லிப்ரே ஆபீஸ் கால்க்கின் சூத்திரங்களை = என்ற குறியீட்டுடன் தொடங்க வேண்டும்.
1. எழுத்துக்
குறிகள்
எழுத்துக்களைப் பயன்படுத்தும்போது இருபுறமும் இரட்டை மேற்கோள்
குறியீட்டால் அடைக்கப்படவேண்டும். இரு வார்த்தைகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க இடையில்
(&) குறியை பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக = "Libre" &
"Office"
இதன் மூலம் Libre Office கிடைக்கப்பெறலாம்.
2. புள்ளியியல்
சார்புகள்
லிப்ரே ஆபீஸ் கால்க்கில் கணக்குகளைத் தீர்ப்பதற்கு ஏராளமான ஏற்கனவே
நிறுவப்பட்ட சூத்திரங்கள் உள்ளன. தரப்பட்டிள்ளன.