Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | அட்டவணைச் செயலிகள்

லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - அட்டவணைச் செயலிகள் | 8th Science : Chapter 23 : Libre Office Calc

   Posted On :  31.07.2023 02:23 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc)

அட்டவணைச் செயலிகள்

அட்டவணைச் செயலியை ஏராளமான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம்.

அட்டவணைச் செயலிகள்

அட்டவணைச் செயலியை ஏராளமான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம். அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன;

• சம்பளப்பட்டியல் தயாரித்தல்

• வருமானவரிக் கணக்கீடுகள் செய்தல்

• விலைப்பட்டியல்கள் தயாரித்தல்

• கணக்கு அறிக்கைகளை உருவாக்குதல்

• பொருள்பட்டியல் தயாரித்தல்

• விலை-பயன் பகுப்பாய்வு செய்தல் (Cost) Benefit Analysis)

• பொருள்நிலை கணக்கீடுகள் செய்தல் (Financial Accounting)

• ஒப்பந்தப்புள்ளி மதிப்பீடுகள் செய்தல் (Tender Evaluation)

• மாணவர் தேர் வறிக்கை ஆய்வு செய்தல்

 

1. அட்டவணைச் செயலியால் விளையும் நன்மைகள்

மின் அட்டவணைச் செய்யப்படுவதை விட பல நன்மைகளைக் கொண்டுள்ளது. சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

• அட்டவணைச் செயலியில் உருவமைக்கப்பட்டுள்ள எண் கணித, பொருளாதார மேலும் புள்ளி விவரக் கணக்குச் சார்புகள் (Functions) மூலம் கணக்கீடுகள் தானே செயல்படுத்தப்படுகின்றன.

• தேவையான அளவிற்கு துல்லியமான விடைகளைப் பெற உதவுகின்றன.

• அட்டவணைக் கோப்புகளை (WorkSheet) வேண்டிய அளவிற்குப் பெரியதாக அமைத்துக் கொள்ளலாம்.

• அட்டவணைக் கோப்பின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பார்க்கவோ, பதிப்பாய்வு செய்யவோ முடியும்.

• அட்டவணைக் கோப்பின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் இன்னொரு புதிய அல்லது பழைய அட்டவணைக் கோப்புடன் ஒன்று சேர்க்க முடியும்.

• அட்டவணைக் கோப்பின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் விரும்பிய வடிவில் அச்சிட்டுப் பெறமுடியும்.

• அட்டவணைக் கோப்பின்தரவுகளைவரைபடங்களாகவோ, வண்ணப் படங்களாகவோ பார்க்க முடியும்.

• அட்டவணைக் கோப்பின் தகவல்களை பிற தரவுத் தளங்களுக்கோ (Database), சொற்செயலிகளுக்கோ (Word Processor) மாற்ற முடியும்.

Tags : Libre Office Calc | Chapter 23 | 8th Science லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 23 : Libre Office Calc : Spreadsheet Libre Office Calc | Chapter 23 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) : அட்டவணைச் செயலிகள் - லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc)