புவியியல் - கலைச்சொற்கள் | 10th Social Science : Geography : Glossary

   Posted On :  05.07.2022 03:11 am

10வது சமூக அறிவியல் : புவியியல் : கலைச்சொற்கள்

கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : புவியியல் : கலைச்சொற்கள்

கலைச்சொற்கள்

 

காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Back waters) : ஆற்றின் முகத்துவாரத்தில் ஆற்றுநீர் கடல் அலைகளால் தடுக்கப்பட்டு கடலில் கலக்காமல் தேங்கி இருப்பது.

 

கிளை ஆறு (Distributary): முதன்மை ஆறானது அதன் கடைப்பகுதியில் பல கிளைகளாகப் பிரிந்து கடலில் கலப்பது.

 

ஆற்றிடைச் சமவெளி (Doab): இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான சமவெளி.

 

கழிமுகம் (Estuary): ஆறு அதன் கடைப்பகுதியில் பல கிளைகளாகப் பிரியாமல் ஒரே ஆறாக கடலில் கலக்கும் பகுதி.

 

வற்றாத ஆறுகள் (Perennial Rivers): ஆறுகள் ஆண்டு முழுவதும் நீரோட்டத்துடனும் நிலையான நீர் பிடிப்பு பகுதியையும் கொண்டிருப்பது.

 

கணவாய் (Pass): இரு மலைத்தொடர்களின் ஊடாக செல்லும் குறுகிய பாதை.

 

தீபகற்பம் (Peninsula): மூன்று புறங்களிலும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி.

 

துணைக்கண்டம் (Subcontinent): ஒரு கண்டத்திற்குரிய அனைத்து பண்புகளையும் கொண்டுள்ள - மிகப்பரந்த நிலப்பரப்பு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.

 

திட்ட நேரம் (Standard Time): ஒரு நாட்டின் மைய தீர்க்கத்தின் தலநேரத்தை திட்ட நேரம் என்கிறோம்.

 

துணையாறு (Tributary): ஒரு சிற்றோடை அல்லது ஆறானது முதன்மை ஆற்றுடன் ஒன்று சேர்வது.

 

காலநிலை (Climate): ஒரு பகுதியின் நீண்ட கால வானிலை சராசரியே காலநிலையாகும்.

 

வானிலையியல் (Meteorology): வானிலையின் பல்வேறு கூறுகளைப் பற்றி, குறிப்பாக வானிலை முன்னறிவிப்பு பற்றிய ஒரு அறிவியல் பிரிவு.

 

பருவக் காலங்கள் (Season): ஒரு வருடத்தின் நன்கு வரையறுக்கப்பட்ட நான்கு பருவங்கள் (வசந்தகாலம், கோடைக்காலம், இலையுதிர்க் காலம் மற்றும் குளிர்க்காலம்)

 

வானிலை (Weather): ஓர் இடத்தின் குறுகிய கால வளிமண்டலத்தின் நிலையைக் குறிப்பது. (வெப்பம், மேகமூட்டம், வறட்சி, சூரிய ஒளி, காற்று மற்றும் மழை)

 

வன உயிரினங்கள் (Wildlife): ஓர் இடத்தின் வனவிலங்கினங்கள் மற்றும் இயற்கை தாவரங்களின் தொகுப்பு.

 

மண் (Soil): மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருள்கள், மட்கிய தாவரங்கள், விலங்கினப் பொருள்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கிய புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.

 

காதர் (Khadar): ஆற்றுச் சமவெளியில் காணப்படும் புதிய வண்டல் மண்

 

பாங்கர் (Bhangar): வண்டல் சமவெளியில் 30மீட்டருக்கு மேல் உள்ள உயர் பகுதிகளில் காணப்படும் பழைய வண்டல் மண்.

 

மண் அரிப்பு (Soil erosion): புவிப்பரப்பின் மேல் அடுக்கு மண் அகற்றப்படுதல்.

 

மண்வளப் பாதுகாப்பு (SoilConservation): மண்ணரிப்பை தடுத்து, மண் வளத்தை பேணிக் காத்தல்.

 

நீர்ப்பாசனம் (Irrigation): செயற்கை முறையில் தாவரங்களுக்கு நீர் பாய்ச்சுதல்.

 

பல்நோக்குத் திட்டம் (Multi purpose project): பல்வேறு நோக்கங்களுக்காக ஆற்றின் குறுக்கே அணை கட்டுதல்.

 

வேளாண்மை (Agriculture): பயிரிடல் மற்றும் அவை சார்ந்த கால்நடை வளர்ப்பு.

 

உயிரி எரிசக்தி (Biogas): தாவரங்கள் மற்றும் விலங்கின கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மீத்தேன் மற்றும் கார்பன்-டைஆக்சைடையே உயிரி எரிசக்தி என்கிறோம்.

 

புதைப்படிவ எரிபொருள்கள் (Fossil fuel): இயற்கையில் கிடைக்கும் கரிம அல்லது நீரக கரிம பொருள்களான நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகும்.

 

தாது (Ore): புவியின் மேலோட்டில் படிந்துள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட கனிமக் கலவை தாதுக்களாகும்.

 

சூரிய சக்தி (Solar Power): சூரிய வெப்பக் கதிர்வீச்சை மின் சக்தியாக மாற்றுதல்.

 

அனல் மின் நிலையம் (Thermal power station): பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகும்.

 

பண்டமாற்று முறை (Barter): இரண்டு நபர்கள் அல்லது குழுக்களுக்கிடையே நேரடியாக பொருள்களை பரிமாறிக்கொள்வது. இவ்வணிகத்தில் பணம் பங்கு பெறுவதில்லை.

 

அந்நியச் செலாவணி (Foreign Exchange): அந்நியச் செலாவணி என்பது இரு நாடுகளுக்கு இடையேயான பண பரிவர்த்தனையில், அந்நாடுகளின் தேசிய மதிப்பு முறை கையாளப்படுகிறது. இவற்றில் நாணயம், தங்கம் போன்றவை நேரடியாக பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை.

 

கப்பல்துறை (Harbour): கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள விரிவான, ஆழமான நீர் பரப்பு கொண்ட கப்பல்கள் மற்றும் படகுகள் பாதுகாப்பாக நங்கூரமிடக் கூடிய ஒரு இடமாகும். இவை சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

துறைமுகம் (port): ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்காக சரக்குகளை ஏற்றவும், இறக்கவும், சேமித்து வைக்கவும் வசதி கொண்ட கப்பல்துறையின் விரிவாக்கப் பகுதி.

 

விரிகுடா (Bay): பரந்த கடல் நீரின் ஒரு பகுதி, குறுகிய ஒரு வளைவான நிலப்பகுதிக்குள் உட்புகுதலால் மூன்று புறங்களிலும் நீரால் சூழப்பட்ட பகுதி.

 

கடற்கரை (Beach): மணல் அல்லது கூழங்கற்களாலான, கடற்கரையை ஒட்டிய பகுதி

 

உயிரி வாயு (Bio-Gas): தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு.

 

வணிகப் பயிர்கள் (Commercial Crops): இலாப நோக்கோடு, விற்பனைக்காகப் பயிரிடப்படும் வேளாண் பயிர்கள்.

 

புயல் / சூறாவளி (Cyclone): சூறாவளி அல்லது புயல் என்பது ஒரு தீவிர, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியைச் சுற்றி உருவாகும் பெரும் காற்றுத் தொகுதி.

 

அணைகள் (Dams): அணைகள் என்பன, நீரைத் தேக்கி, நீர்த்தேக்கங்களை உருவாக்கி, அதன் மூலம், நீர் மின்சக்தி உற்பத்தி, நீரளிப்பு மற்றும் இதரப் பயன்பாடுகளுக்காக ஆற்றின் குறுக்கே கட்டப்படுபவை.

 

டெல்டா (Delta): ஆற்றின் முகத்துவாரத்தில் காணப்படும் முக்கோண வடிவிலான வண்டல் படிவுகள்.

 

மக்களடர்த்தி (Density of Population): ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழும் மக்களின் எண்ணிக்கை.

 

வறட்சி (Drought): வறட்சி என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில், சராசரி மழையளவிற்கும் குறைவான மழைப்பொழிவினால் உண்டாகும் நீர் பற்றாக் குறையினால் ஏற்படும் இயற்கைப் பேரிடராகும்.

 

மூழ்குதல் (Drowning): நீரில் மூழ்குதலால், சுவாசிக்க முடியாமல் உயிர் இழப்பு ஏற்படுதல்.

 

பொருளாதார நடவடிக்கைகள் (Economic activities): ஒரு சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் நடைபெறும் உற்பத்தி, பகிர்வு மற்றும் நுகர்தல் போன்ற நடவடிக்கைகள்.

 

தனிச்சிறப்பு உயிரிகள் (Endemism): தீவுகள் மற்றும் ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட புவியியல் நிலப்பகுதியில் மட்டுமே காணப்படும் உயிரின வகைகளின் சூழல்.

 

ஏற்றுமதி (Exports): பொருள்கள் மற்றும் சேவைகளை வெளிநாடுகளுக்கு விற்பது.

 

வெள்ளப்பெருக்கு (Floods): ஆற்றில் இருந்து அதிக அளவிலான நீர் பெருக்கெடுத்துப் பரவுதல்.

 

இறக்குமதி (Import): பொருள்கள் மற்றும் சேவைகளை வெளிநாடுகளில் இருந்து வாங்குவது.

 

நிலச்சரிவு (Land slide): மலைச்சரிவுகளில், பெரும் அளவிலான பாறைகள் மற்றும் மண் ஆகியவற்றின் திடீர் சரிவு.

 

கல்வியறிவு பெற்றோர் (Literates): மக்களில் எழுதப் படிக்கத் தெரிந்தோர்.

 

கசிதல்/ஊடுருவுதல் (Leaching): மழைக் காலங்களில், வழிந்தோடும் நீரினால் மண்ணிலுள்ள கரையும் தன்மையுள்ள தாதுக்கள் கரைக்கப்பட்டு, அடித்துச் செல்லப்படுவதால் மண் செழிப்பற்றதாக உருவாகும் நிலை.

 

அட்சம் (Latitude): புவி மாதிரியில் கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக்கோடுகள்.

 

தீர்க்கம் (Longitude): வடக்கு தெற்காக கற்பனையாக வரையப்பட்ட செங்குத்துக் கோடுகள்.

 

சதுப்புநிலத் தாவரங்கள் (Mangroves): அயன மற்றும் உப அயன கடற்கரைப் பகுதிகளில், உள்ள உள்நிலப்பகுதியில் உவர் நீரில் வாழக்கூடிய பசுமைமாறா தாவரங்கள்.

 

மான்செஸ்டர் (Manchester): பருத்தி மற்றும் லினன் துணிகளினால் ஆன விரிப்புகள், தலையணை உறைகள், மேசை விரிப்புகள் ஆகியவற்றின் தயாரிப்புக்கு பெயர்பெற்ற இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய நகரம்.

 

வானிலையியல் (Meteorology): வானிலைக் கூறுகளைப் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு.

 

கலப்பு விவசாயம் (Mixed Farming): ஒரு சிறு நிலப்பகுதியில், பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் மேற்கொள்வது.

 

மான்சூன் (Monsoon): பருவக்காலம்

 

இயற்கை வளங்கள் (Natural Resources): பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படும் இயற்கையில் உருவாகும் அனைத்து பொருள்களும் இயற்கை வளங்கள் எனப்படும்.

 

திறந்தவெளிக் காடுகள் (Open Forest): 10 முதல் 40 சதவிகித தாவர அடர்த்தியைக் கொண்டுள்ள நிலப்பகுதி மற்றும் காடுகளால் சூழப்பட்ட பகுதி.

 

தோட்டப்பயிர்கள் (Plantation Agriculture): ஒரு பெரிய நிலப்பரப்பில், அறிவியல் முறைப்படி, ஒரே பயிரை அதிக அளவில் பயிரிடுவது. இது அதிக முதலீடு கொண்ட விவசாய முறை. தேயிலை, காபி மற்றும் ரப்பர் ஆகியவை முக்கிய தோட்டப்பயிர்கள்.

 

பீடபூமி (Plateau): சமவெளிப் பகுதியில் இருந்து சற்றே உயரமான மேட்டுநிலம்.

 

மக்கள்தொகை (Population): ஒரு நாடு, பகுதி அல்லது ஓர் இடத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் கூட்டுத்தொகை.

 

மக்கள்தொகை கணக்கெடுப்பு (Population Census): ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அங்குள்ள மக்களின் பொருளாதார, சமூக கூறுகளுடன் எண்ணிக்கை குறித்தான அதிகாரப்பூர்வமானக் கணக்கெடுப்பு.

 

பாதுகாக்கப்பட்ட காடுகள் (Protected Forests): இந்திய வனச்சட்டம் மற்றும் மாநில வனச் சட்டங்களின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளாகக் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்படும் காடுகள். இக்காடுகளில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளைத் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை செய்யப்பட்ட பகுதி.

 

மண்டலங்கள் / பகுதிகள் (Regions): வரையறுக்கப்பட்ட பண்புகளைக் கொண்ட ஆனால் எப்பொழுதும் குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டிராத உலகின் அல்லது ஒரு நாட்டின் ஒரு பகுதி.

 

ஒதுக்கப்பட்ட காடுகள் (Reserved Forests): இந்திய வனச்சட்டம் மற்றும் மாநில வனச் சட்டங்களின் மூலம் முழுவதுமாகப் பாதுகாக்கப்பட்ட காடுகளின் பகுதிகள். இக்காட்டுப்பகுதிகளில் அனுமதியற்ற அனைத்து செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

 

நீர்த்தேக்கங்கள் (Resrvoirs): இயற்கை அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட நீரின் ஆதாரமாக உள்ள பெரிய ஏரிகள் அல்லது அணைகள்.

 

படிவுப்பாறைகள் (Sedimentary Rocks): படிவுகள் இறுகுவதால் உருவாகும் பாறைகள்.

 

பாலின விகிதம் (Sex Ratio):1000 ஆண்களுக்கு, பெண்களின் விகிதாசாரம்.

 

கூட்ட நெரிசல் (Stempede): ஒரு பெரிய அளவிலான விலங்கு கூட்டம் அல்லது மனித கூட்டம், கட்டுப்பாடற்ற நிலையில் ஒரே சமயத்தில், ஒரே திசையை நோக்கி ஓடுவதால் கூட்ட நெரிசலில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் உடல் ஊனம் ஏற்படும் நிலை.

 

நீர்சந்தி (Strait): இரண்டு கடல்கள் அல்லது இரண்டு பெரிய நீர்ப்பரப்பினை இணைக்கும் ஒரு குறுகிய நீர்ப்பகுதி.

 

தீவிர தன்னிறைவு வேளாண்மை (Subsistence Intenensive Farming): குடும்பத் தேவைக்காக மட்டும் ஒரு சிறிய நிலப்பரப்பில் உற்பத்தி செய்யும் சாகுபடி. இது குறைந்த அளவே வணிகத்திற்கு செல்கிறது. வரையறுக்கப்படாத காடுகள் (Unclassed Forest): வரையறுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட காடுகளுக்குட்படாத ஆனால் காடுகளாகக் கண்டறியப்பட்டப் பகுதிகள்.

 

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பன்னாட்டு நிறுவனத்தின் உலக பண்பாட்டுத்தலம் (UNESCO World Heritage Site): புவிக்கோளில் உள்ள உயிரின வளங்களின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியவை, அவைகளைப் பற்றிய ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கண்காணிக்கப்பட வேண்டிய இடங்கள்.


Tags : Geography புவியியல்.
10th Social Science : Geography : Glossary : Glossary Geography in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : கலைச்சொற்கள் : கலைச்சொற்கள் - புவியியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : கலைச்சொற்கள்